சனி, 16 ஏப்ரல், 2016

எனது பள்ளி இறுதிக் கல்வி எழுபதுகளில். (பதினோரு வகுப்பு SSLC;
6 பாடங்கள்; 6ஆவது பாடம் ELECTIVE subject; அல்ஜிப்ரா-ஜியோமெட்ரி,
இயற்பியல், வேதியியல்,வரலாறு இப்படிப்பல).அப்போது கலைஞர்
முதல்வர்; நாவலர் கல்வி அமைச்சர்.
**
அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் SSLC வகுப்பில் கணிதப்
பாடம் இரண்டு வகையாக இருந்தது. General Maths மற்றும்
Composite Maths. பொதுக்கணித பாடம் என்பது வெறும் arithmetic
மட்டுமே. சராசரி, சதவீதம், லாப-நஷ்டம் இப்படி வெறும்
எண்கணிதம் மட்டுமே. சிறப்புக் கணிதம் என்னும் Composite
Mathsஇல் அல்ஜிப்ரா, ஜியோமிதி தேற்றங்கள், ரைடர்கள்
என உண்டு.
**
அல்ஜிப்ரா ஜியோமெட்ரி படிக்காமலேயே SSLC படித்து
முடிக்கலாம் என்ற கோமாளித்தனம் அன்று இருந்தது.



இன்று பத்தாம் வகுப்பு வரை கணிதப் பாடத்தில்
எல்லோரும் அல்ஜிப்ரா-ஜியோமெட்ரி படிக்க வேண்டும்
என்று கொண்டுவரப் பட்டு விட்டது. அது போலவே
இந்தியா முழுவதும் 11, 12 வகுப்புகளில் கணிதம் மற்றும்
இயற்பியலைக் கட்டாயப் பாடமாக வைக்கும்போது
ஆரம்பத்தில் தேர்ச்சி விகிதம் குறையத்தான் செய்யும்.
போகப்போக சரியாகி விடும். எனவே கணிதம் இயற்பியல்
கட்டாயப் பாடம் என்பதில் சமரசம் கூடாது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக