வெள்ளி, 22 ஏப்ரல், 2016

1) செழுமையான பொருள்முதல்வாதம் இந்த மண்ணிலேயே உண்டு.
எனினும் அதைக் கொண்டு செல்லவில்லை: இயலவும் இல்லை.
பின்னர் போலிக்கம்யூனிஸ்ட்களாகச் சீரழிந்த பின்னர்,
நாத்திகப் பிரச்சாரத்தை அஜண்டாவில் இருந்தே எடுத்து
விட்டனர். 
2) தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை 1925இல்
ஆரம்பித்தபோதும், குடியரசு பத்திரிகையை ஆரம்பித்தபோதும்
ஒரு ஆத்திகராக, பக்தராகத்தான் இருந்தார். குடியரசு ஏட்டின்
முதல் இதழில் இறைவனின் அருளை வேண்டித் தலையங்கம்
எழுதப்பட்டது. இதன் பின்னர் வெகுகாலம் கழித்துத்தான்
தந்தை பெரியார் தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டார்.
3) காத்திரமான கருத்தாழமான நாத்திகச் சிந்தனைகள்
மக்களிடம் ஒரு நூற்றாண்டு காலமாக மக்களிடம்
சேர்ப்பிக்கப் படவே இல்லை.
3) திமுக கட்சியைத் தொடங்கும்போதே, அதன்
கடவுள் கொள்கையாக ஒன்றே குலம், ஒருவனே தேவன்
என்ற கொள்கை அறிவிக்கப் பட்டது. இது நாத்திகம் அல்ல.
4) ஒரு சில தனி நபர்களால்தான் ஓரளவு பொருள் முதல்
வாதக் கருத்துக்கள் மக்களிடம் சென்றன. இது கடலில்
காயம் கரைத்த கதைதான்.
5) எனவே ஆத்திகம் வெற்றிக்கொடி நாட்டி நிற்கிறது.
நாம் நாணத்துடன் தலைகுனிந்து நிற்கிறோம்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக