செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கணித நிபுணர்கள் இறுதி செய்த
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
காங்கிரசை ஆதரிப்பது என்ற கணித நிபுணர்களின் முடிவு!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
1) திமுகவின் வேட்பாளர் பட்டியலை கலைஞரும்
ஸ்டாலினும் இறுதி செய்கின்றனர்.
2) அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை ஜெயாவும்
சசியும் இறுதி செய்கின்றனர்.
3) தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலை பிரேமலதாவும்
சுத்தீஷும் இறுதி செய்கின்றனர்.

4) ஆனால் தமிழக காங்கிரசின் வேட்பாளர் பட்டியலை
சோனியாவும் ராகுலும் கூட இறுதி செய்ய முடியவில்லை.
அது அரசியல்வாதிகளால் இறுதி செய்யப்பட முடியாதது.

5) 41 தொகுதிகளுக்கு 41 to the power of 41 பேர் போட்டியிட்டால்,
பாவம் சோனியாவும் ராகுலும் என்ன செய்ய முடியும்?

6) மேலும் தங்களுக்கு ஒதுக்கப் படாத தொகுதிகளையும்
கோருகின்ற வேட்பாளர்கள் காங்கிரசில்தான் உண்டு.
உதாரணம்: அரவக்குறிச்சி. 

6) எனவே கணித நிபுணர்களிடம் அப்பொறுப்பை
ஒப்படைத்தார் ராகுல்.

7) நாடு முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டி.களின் கணித
நிபுணர்கள், கணிதப் பல்கலைகளின் துணைவேந்தர்கள்
என்று உலகம் போற்றும் கணித நிபுணர்கள் அடங்கிய ஒரு
குழுவிடம் ராகுல் வேட்பாளர் பட்டியலை ஒப்படைத்துள்ளார்.

8) இது குறித்து பட்டியல் இறுதிக்குழுவில் இடம் பெற்ற
ஒரு கணித நிபுணர் நியூட்டன் அறிவியல் மன்றத்திடம்
கூறியதாவது:-

9) நவீன நிகழ்தகவுக் கோட்பாடுகள், நவீன GAMES THEORY
என்று தொடங்கி GROUP THEORY வரை பயன்படுத்திப் பார்த்தும்
எங்களால் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை.
எனவே ஹெய்சன்பர்க் S MATRIX THEORYஐ உருவாக்கியது
போல, நாங்களும் C MATRIX THEORY என்ற புதிய
கோட்பாட்டை உருவாக்கினோம். (C for Congress).
அதன் பிறகே எங்களால் வேட்பாளர் பட்டியலை
இறுதி செய்ய முடிந்தது என்றார் அந்த நிபுணர்.

10) இவ்வாறு காங்கிரசால் மட்டுமே கணிதம் வளர்கிறது
என்பதால் கணித நிபுணர்கள் காங்கிரசை இத்தேர்தலில்
ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். அதைப் பின்பற்றி
இத்தேர்தலில் 41 தொகுதிகளிலும் காங்கிரசை ஆதரிக்க
நியூட்டன் அறிவியல் மன்றம் முடிவு செய்துள்ளது.
===========================================================
பின்குறிப்பு: இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 41 to the power of 41
என்பதன் எண் மதிப்பு (numerical value) என்ன என்பதை
தோராயமாகவேனும் வாசகர்கள் கூற வேண்டும் எனக்
கோருகிறோம். 
--------------------------------------------------------------------------------------------------------
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக