வியாழன், 28 ஏப்ரல், 2016

மாறுபட்ட வாதமே ஐநூறு
வாயில் நீள ஓதுவாய்!
-----------------------------------------------
ரேகையில் கனிகொள் என்பதன் மூலம் பாரதியார் என்ன சொன்னார் என்பதை உணர மற்போர் தேவையில்லை.
"பாடுபட்டுப் பலன் பெறு" என்று சொல்கிறார், அவ்வளவுதான்.
**
பாடுபட்டால் பலன் கிடைக்கும் என்று நம்பிக்கையை
ஊட்டுகிறார். என்னதான் பாடுபட்டாலும் தலையெழுத்து அல்லவா  தீர்மானிக்கும் என்ற அவநம்பிக்கை நிலவிய
காலம் அது. அதற்கு மாற்றாக உழைப்பு உயர்வு தரும்
என்று கூறுவதன் மூலம், அதிர்ஷ்டத்தின் மீதான
நம்பிக்கையைத் தகர்க்கிறார். சோதிடம் கோலோச்சிய
ஒரு காலத்தில், சோதிடத்துக்கு எதிரான கருத்துகளை
வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் விதைக்கிறார்.
**
பாரதியாரின் தத்துவம் வாழ்வேந்தல் தத்துவம் ஆகும்.
(Life affirmation philosophy). சோதிடமும் தலைவிதியும்
அதிர்ஷ்டமும் வாழ்வு மறுப்புத் தத்துவங்கள் ஆகும்.
(Life negation philosophy). அவற்றுக்கு எதிராக, வாழ்வின்
மீதான நம்பிக்கையை மழலைகளுக்கு ஊட்டுகிறார்.
**
கைத்தொழில் போற்று (21) மேழி போற்று (82), யவனர்
போல் முயற்சி கொள் (86) என்றெல்லாம் பிற இடங்களில்
உழைப்பின் மேன்மையை யாப்புறுத்துகிறார்.
**
எனவே ரேகையில் கனிகொள் என்பது பாடுபாட்டுப்
பலன் பெறு என்பதாகும். மற்றவை அனைத்தும்
மாறுபட்ட வாதமே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக