வியாழன், 28 ஏப்ரல், 2016

பொது நுழைவுத் தேர்வு!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு பொது
நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று
உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

அரசுக் கல்லூரிகளை மட்டுமல்ல தனியார்
கல்லூரிகளையும் இத்தீர்ப்பு கட்டுப் படுத்தும்.

இதற்கு இரண்டு கட்டமாகத் தேர்வு நடக்குமாம்.
நுழைவுத் தேர்வை ஏன் இரண்டு கட்டமாக
நடத்த வேண்டும்?

ஏற்கனவே AIPMT 2016க்கு விண்ணப்பித்த மாணவர்கள்
வரும் மே 1 அன்று தேர்வு எழுதுவார்கள். இத்தேர்வை
எழுதியவர்கள் ஏன் மீண்டும்  ஜூலை 24இல்
இன்னொரு தேர்வை எழுத வேண்டும்?

தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன? AIPMTக்கான
அதே பாடத்திட்டம் என்றால் அது 11, 12 வகுப்புகளுக்கான
CBSE பாடத்திட்டம் அல்லவா?

எங்கெங்குக் காணினும் குழப்பமடா என்பதாக
அல்லவா நிலைமை  இருக்கிறது? MCI, CBSE ஆகிய
இரு அமைப்புகளும் ஒரு தெளிவை உடனடியாக
ஏற்படுத்த வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக