சனி, 16 ஏப்ரல், 2016

பிரேமலதாவும் சதாம் உசேனும்
பி வி பக்தவத்சலமும்!
-----------------------------------------------------
ஈழத்திலே போர் நடந்தது. சிங்களப் படைகள் குண்டு
மழை பொழிந்தன. விடுதலைப் புலிகளும், பொதுமக்களும்
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் பதுங்குகுழிக்குள்
இருந்தனர். குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க ராணுவ
ரீதியிலான பாதுகாப்பு ஏற்பாடு இது.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. குண்டுமழை
பொழிந்தது. குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க சதாம் உசேன்
மற்றும் ஈராக் ராணுவத்தினர் பதுங்கு குழிக்குள்
இருந்தனர்.

ராணுவத்தின் போர்த்தந்திரங்கள் பற்றி எதுவும் அறியாத
தற்குறி பிரேமலதா சதாம் உசேன் புழுத்துச் செத்தார் என்ற
தொனியில் மேடையில் உளறுகிறார்.

சதாம் உசேன் அமெரிக்காவின் (அநீதியான) விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டார்.
மரண தண்டனையும் நிறைவேற்றப் பட்டு சதாம் மடிந்தும்
போனார்.

சதாம் உசேன் தரப்பில் வாதாட உலகெங்கிலும் இருந்து
வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டனர். தமிழ்நாட்டிலும் இருந்து
ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர்தான் தோழர்
பி.வி.பக்தவத்சலம். சென்னை உயர்நீதிமன்ற மூத்த
வழக்கறிஞர். சதாமுக்காக ஆஜராகி வாதாடினார் அவர்.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.

தோழர் பக்தவத்சலம் மார்க்சிய லெனினிய அமைப்பில்
பணியாற்றியவர் (CPI ML TNOC) . மக்கள் உரிமைக் கழகம்
என்ற அமைப்பை நடத்தி வந்தார். இன்றைக்கு சிவில்
உரிமைப்  போராளிகளாக வலம் வரும் பலருக்கும்
முன்னோடி அவர்.

இதெல்லாம் தற்குறி பிரேமலதாவுக்குத் தெரியுமா?
அந்தக் கட்சியில் எவருக்காவது தெரியுமா?
பேரழிவு ஆயுதங்களை  ஈராக் வைத்திருக்கிறது என்று
பொய்க் குற்றம் சாட்டி, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா,
பின்னர் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று
ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கோரியதே, அது இந்தத் தற்குறி
பிரேமலதாவுக்குத் தெரியுமா?

கொழுப்பின் உச்சமாய், சதாம் உசேனைப் போல் கலைஞரும்
ஜெயலலிதாவும் செத்துப் போவார்கள் என்று பேசினாரே
பிரேமலதா! எவ்வளவு திமிர்! எவ்வளவு வாய்க்கொழுப்பு!

முற்போக்கு வேடமிடும் திருமாவளவன், வைகோ, மற்றும்
போலிக் கம்யூனிஸ்டுகள் இதைக் கண்டிப்பார்களா?
அ மார்க்சும் ஆளூர் ஷா நவாசும் கண்டிப்பார்களா?
ஒருநாளும் கண்டிக்க மாட்டார்கள்! ஆனால் மக்கள்
இந்தப் புழுவினும் கேவலமான தற்குறியை நிச்சயம்
தண்டிப்பார்கள்!
---------------------------------------------------------------------------------------------------------- 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக