சனி, 23 ஏப்ரல், 2016

மில்லியன் பில்லியன் ஆகியவை தமிழ் மரபு
சார்ந்தவையே அல்ல. நவீன அறிவியலின் தேவையை
ஒட்டி, அவற்றுக்கான சொற்களை உருவாக்க வேண்டிய
அவசியம் வந்தது. உலகம் முழுவதும் இதே நிலைதான்.
பில்லியன் என்றால் இங்கிலாந்தில் ஒரு பொருள்,
அமெரிக்காவில் ஒரு பொருள். நாட்டுக்கு நாடு
வேறுபட்ட பொருளில் ஒரே சொல்லைச் சொல்லுவது
சரியல்ல என்பதால், அறிவியல் அறிஞர்கள்
தலையிட்டு நெறிப்படுத்தினர்.
**
இன்று எந்த நாட்டில் அவர்களின் மரபுக்கு ஏற்ப
எந்தச் சொல் இருந்தாலும், அது என்ன பொருளில்
வழங்கினாலும் அது இருந்து விட்டுப் போகட்டும்.
ஆனால் அறிவியலைப் பொறுத்த மட்டில், பில்லியன்
என்றால் 10^ 9 தான். அது போலவே 10^ 100 வரை
சொல்ல வேண்டும். அதனால்தான் million, billion,
trillion, quadrillion  ஆகியவை ஏற்கப்பட்டன.
தமிழிலும் அவற்றுக்கு இணையான சொற்கள்
வேண்டும் அல்லவா? எனவே பல ஆண்டுகளுக்கு
முன்பே நான் கண்டு பிடித்தேன். வேறு எவரும் செய்ய
முன்வரவில்லை. எனவேதான் நான் செய்தேன்.
தமிழ் என்னுடைய புலம் அல்ல.
**
milli micro nano picco femto etc இவற்றுக்கும் சொல் வேண்டும்.
mega giga ஆகியவற்றுக்கும் சொல் வேண்டும்.
யார் கண்டு பிடிப்பது? சோறு தின்பது தவிர
தமிழறிஞர்கள் வேறு என்ன செய்கிறார்கள்?
இவனும் செய்ய மாட்டன். எவனும் செய்தாலும்
ஆதரிக்க மாட்டான்! இதுதான் அவலம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக