ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஐயா,
சின்ன வயதில் இருந்தே ஒரு academic atmosphereஇல்
வளர்ந்தவன் நான். காரணம் என் தந்தையார் பள்ளி
ஆசிரியர் (BT Assistant). SSLC விடைத்தாட்கள் திருத்துவதில்,
அப்போது, 1960களில் door valuation  முறை இருந்தது.
ஆங்கில விடைத்தாட்கள் திருத்துவதற்காக வீட்டுக்கு
வரும். திருத்திய பின் அவற்றைக் கட்டுவது, பார்சல்
செய்வது, அரக்கு சீல் வைப்பது போன்ற வேலைகளில் 
மிகவும் பிரமிப்புடன் உதவி செய்து இருக்கிறேன்.
**
என் தந்தையார் HM ஆன  பிறகும் கூட, 21 பிரீயட்கள்
பாடம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,
பொதுவாக HM என்பவர் 10 பிரீயடுகள் எடுத்தால் போதும்.
அதிலும் பலர் MI வகுப்புகளாக எடுப்பார்கள். பிரதானமாக
என் தந்தையார் XI English எடுப்பார்கள்.
**
என் கல்லூரிக் காலத்திலும் பின்னர் நான் தொலைதொடர்புத்
துறையில் வேலைக்குச் சேர்ந்த பின்னும் கூட, பள்ளி/கல்வி  நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள்
விடுப்பில் செல்லும்போது, கணித வகுப்புகளை
எடுத்திருக்கிறேன். 
**
சென்னைக்கு வந்த பிறகு, தனிப்பயிற்சிக் கல்லூரிகளில்
தொடர்ந்து வகுப்புகள் எடுத்திருக்கிறேன். X CBSE Maths,
XI, XII Physics வகுப்புகள். நீண்ட காலமாக CBSE
வகுப்புகளையே எடுத்து வந்துள்ளேன். CBSE பாடத்திட்டம்,
TN State board பாடத்திட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளை
உணர்ந்துள்ளேன்.
**
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம் உயர்த்துதல்
குறித்து தாங்கள் கூறியதில் முழு உடன்பாடு கொள்கிறேன்.
கட்டமைப்பு மேம்படுத்தாமல், கல்வித்தரத்தை உயர்த்த
முடியாது என்பது உண்மையே. அதோடு, எட்டாம் வகுப்பு
வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ஒழிக்கப்
பட வேண்டும். 


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக