வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இனிமேல் யாரும் பிறந்தநாள் கொண்டாட முடியாது!
பிறந்தநாள் விழாக்களை அரசுகள் தடை செய்யும்!
மக்கள்தொகை வெடிப்பு ஏற்படப் போகிறது!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
இன்றையத் தேதியில் உலகின் மக்கள் தொகை 741 கோடி.
இந்தியாவின் மக்கள் தொகை (ஏப்ரல் 21, 2016 அன்று நிலவரம்)
132கோடியே 41 லட்சம். (நம்பத்தகுந்த புள்ளி விவரங்களின் படி).

முப்பது கோடி முகமுடையாள் என்று பாரதி பாடிய எப்போது?
சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது 1916இல்
30 கோடி. இன்று 2016இல் நாலரை மடங்கு கூடி விட்டது.

இந்த வீதத்தில் மக்கள்தொகை வளர்ந்து கொண்டே போனால்,
இந்த நூற்றாண்டு முடியும் போது, அதாவது 2100ஆம் ஆண்டு
பிறக்கும்போது,
1) உலகின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?
2) இந்தியாவின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?

இதற்கு விடை காணப் புறப்பட்டால், கிடைக்கும் விடைதான்
மக்கள்தொகை வெடிப்பு (population explosion). Big bang என்னும்
பெருவெடிப்பு பற்றி நாம் அறிவோம். அந்தப் பெருவெடிப்புக்குப்
பிறகுதான் பிரபஞ்சம் பிறந்தது.

அதுபோல் இந்த மக்கள்தொகை வெடிப்பு ஏற்பட்டால்,
பூமி என்ன ஆகும்? வெடித்துச் சிதறி விடும்?

காரல் மார்க்ஸ் காலத்தில் மால்த்யூஸ் என்ற பாதிரியார்
இருந்தார். அவர் ஒரு பொருளாதார நிபுணரும் கூட.
அவர் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து அப்போதே
எச்சரிக்கை செய்தவர். காரல் மார்க்ஸ் மால்த்யூசைக்
குதறி எடுத்து விட்டார்.

இன்றைய நிலையில் மால்த்யூசையும் அவருக்கான
மார்க்சின் மறுப்பையும்  மறுவாசிப்புச் செய்யும் எவரும்
மால்த்யூசின் தீர்க்க தரிசனத்தை வியப்பர். சீனத்தில்,
மக்கள்தொகைக் கட்டுப்பாடு (birth control) மிகத்
தீவிரமாக பல பத்தாண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டு
இன்றும் நடைமுறையில் உள்ளது. ஒரு குடும்பத்திற்கு
ஒரு குழந்தை மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.

ஆக, சீனா மால்த்யூசைப் பின்பற்றியதே அல்லாமல்,
மார்க்சைப் பின்பற்றவில்லை என்பது நிதரிசனம்.
*****************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக