வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சக ஊழியர் என்பதற்காக எவரையும் ஆதரிக்க முடியாது.
ஒருவரை ஆதரிப்பதற்கான காரணி அதுவல்ல. ஏனெனில்
எத்தனையோ சக ஊழியர்களை அடித்தே கொன்று
இருக்கிறோம். Physical Annihilation என்று புரிந்து கொள்ள
வேண்டாம். கருத்தியல்ரீதியான கொலையை இங்கு
குறிப்பிடுகிறேன்.
**
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து இன்று வரை,
இந்தியாவிலேயே போக்குணம் மிக்க ஒரே தொழிற்சங்கமாக
NFTE சங்கம் இருந்து வருகிறது என்பதை  ஒருவர் உணர
வேண்டுமாயின், அவருக்கு தொலைதொடர்புத் தொழிற்சங்க
வரலாறு நன்கு தெரிந்து இருக்க வேண்டும். ஒரு கால் நூற்றாண்டு
காலம் மிகச் சிறப்பான இடதுசாரித் தொழிற்சங்கவாதியாக
வாழ்ந்து காட்டியவர் தோழர் ஜெயமோகன்.
**
அவரை வசை பாடுவோர் அனைவரும் அவர் முன்வைக்கிற
கருத்துக்களுக்கு மறுப்புச் சொல்ல வக்கற்றவர்கள்  என்பதை
நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன. அவரின் கருத்துகளுடன்
எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவற்றை மறுத்து
அதற்கு எதிராகக் கருத்துச் சொல்வது என் வேலை அல்ல.
ஏனெனில், நான் தேர்ந்து எடுத்துள்ள பணி வேறு/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக