திங்கள், 25 ஏப்ரல், 2016

பாரதியார் கணிதமும் வானநூலும் பயின்றவர்.
கோள்களின் இயக்கம் பற்றி நன்கறிந்தவர். அவர்
சோதிடத்தை ஏற்காதவர்.  எனவே சோதிடந்தனை
இகழ் என்கிறார். சோதிடத்தைப் புகழுக்கு உரியதாகக்
கருதும் ஒரு சமூகத்தைத் திருத்தும் நோக்குடன்
சோதிடத்தை இகழ்ந்து ஒதுக்க வேண்டும் என்கிறார்.
இதே ஆத்திசூடியின் பிறிதோர் இடத்தில்,
 வானநூல் பயிலச் சொல்லுவார். Astronomyஐப்
புகழும் பாரதியார், Astrologyஐ இகழ்கிறார்.
**
இசைமேதை தியாகய்யரும் தமது கீர்த்தனை ஒன்றில்,
"கிரக பலம் ஏமி, கிரக பலம் ஏமி,
ஸ்ரீ ராமானுக்  கிரக பலமே பலமு" என்று பாடுவார்.
ராமனின் அனுக்கிரகம் இருந்தால் போதும்:
கிரகபலன் ஒன்றும் செய்யாது என்பது இதன் பொருள்.
சம்பந்தரின் கோளறு பதிகமும் இங்கு ஒப்பு
நோக்கத்தக்கது.
**
ரேகையில் கனிகொள் என்பது உழைப்பின்
உயர்வைக் கூறுவது. ஏய்த்துப் பிழைப்பது அல்ல,
உழைத்துப் பிழைப்பதே உயர்வு என்பது
இதன் பொருள்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதான்
மெய்வருத்தக் கூலி தரும்
என்ற குறளின்  கருத்தை பாரதி இங்கு எடுத்தாள்கிறார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக