தமிழ்ச் சமூகம் ஒரு சாதியச் சமூகம். ஆண் மேனிலைச்
சமூகம். ஆண்-பெண் சமத்துவத்தை, பெண்ணுக்குச்
சொத்துரிமை வழங்கப்பட்டதை சாதிய இறுக்கம் நிறைந்த
தமிழ்ச் சமூகம் வெறுக்கிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்
பட்ட பின்னால், திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கவில்லை;
மாறாக குறைந்திருக்கிறது.
கலைஞர் வாழ்க, கலைஞர் ஒழிக என்ற கோஷங்களுக்கு
அப்பாற்பட்டுச் சிந்திக்க வேண்டிய கருத்தைக் கொண்டுள்ளது
இப்பதிவு. கொங்கு மண்டலத்தில் இன்றளவும் திமுகவின்
செல்வாக்கு குறைவாக இருப்பதற்குக் காரணம் பெண்ணுக்குச்
சொத்தில் சமஉரிமை வழங்கியதே.
சமூக யதார்த்தம் அவ்வாறு இல்லை. தங்கள் கருத்து என்ன?
சொந்த விருப்பங்களையும் மனச் சாய்வுகளையும்
எழுதுவதற்குப் பதிலாக, ஆழ்ந்து சிந்தித்து, புறநிலையில்
சமூக யதார்த்தம் (OBJECTIVE REALITY) எவ்வாறு உள்ளது
என்பதை உணர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். இது
கலைஞரின் புகழ்பாடும் பதிவு அல்ல. அதேபோல் அவரை
வசைபாடும் பதிவும் அல்ல. ஒரு அரைநிலப்பிரபுத்துவ
சாதியச் சமூகம் இதை எப்படி எதிர்கொள்கிறது என்பது
மட்டுமே இங்கு பேசப்பட வேண்டும்.
அலுமினியப் பாத்திரங்களையும் ஓலைப்பாயையும்
தவிர வேறு சொத்து இல்லாத அன்றாடங்காய்ச்சிகளோ
அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களோ
இச்சட்டத்தைப் பொருட்படுத்தப் போவதில்லை.
இச்சட்டத்தின் நன்மை தீமைகள் அவர்கள் மீது எந்த
விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
**
ஆனால், சொத்து உள்ளவர்கள், ஒரு சிறிய வீடோ அல்லது
முக்குருணி விதைப்பாடு நிலமோ உள்ளவர்கள்,
பெற்ற பெண்ணுக்கு நகை போட்டு சீதனம் கொடுத்து
கட்டிக் கொடுத்த பின்னால், சொத்து ஆண் வாரிசுக்கு
என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த
நினைப்பில் மண்ணள்ளிப் போடுவது போல் வந்து
விட்டது கலைஞரின் பெண்ணுக்குச் சொத்துரிமை
வழங்கும் சட்டம் என்பதால் கலைஞரை எதிர்க்கிறார்கள்.
உடைமை வர்க்கச் சிந்தனைகளைப் போற்றி ஒழுகும்
எவரும் கலைஞரின் பெண்ணுக்குச் சொத்துரிமை வழங்கிய
சட்டத்தை ஏற்கவில்லை; ஆதரிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக