நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
பரந்துபட்ட மக்களிடம் அறிவியலைப் பரப்புவதையும்,
இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளவாறு
அறிவியல் உளப்பாங்கை (scientific temper) மக்களிடம்
உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு
நியூட்டன் அறிவியல் மன்றம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு இது தொடங்கப் பட்டது.
பி. இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் இம்மன்றத்தின்
நிறுவனரும் தலைவரும் ஆவார்.
சாத்தியமான அனைத்துவழிகளிலும் அறிவியலைப் பரப்பி
வருபவர் திரு பி இளங்கோ. கடந்த பல ஆண்டுகளாக
சென்னை வானொலியில் அறிவியல் உரைகள் நிகழ்த்தி
வருகிறார். அறிவியல் ஏடுகளில் அறிவியல்கட்டுரைகளைத்
தொடர்ந்து எழுதிவருகிறார்.
பல்வேறு தொலைக்காட்சி சானல்களில் தோன்றி, அறிவியல்
விளக்கங்களை அளித்து வருகிறார். பல்வேறு அறிவியல்
முகாம்களில் பங்கேற்று மாணவர்களிடம் அறிவியல்
சிந்தனைகளைப் பரப்பி வருபவர்.
பள்ளி கல்லூரிகளில் அறிவியல் சொற்பொழிவுகளை
நிகழ்த்தி வருகிறார். அரங்குக் கூட்டங்கள், பொதுக்
கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் நேரடியாக அறிவியலைக்
கொண்டு செல்கிறார்.
மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பரப்புரை மேற்கொண்டு
வருகிறார். எளிய மக்களிடம் அறிவியல் வெளிச்சத்தைப்
பாய்ச்சுவதன் வாயிலாக, அறியாமை மூடநம்பிக்கைகளின்
இரும்புப்பிடியில் இருந்து மக்களை விடுதலை செய்யும்
களப் பணிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
2014இல் திரு பி இளங்கோ தமது நியூட்டன் அறிவியல் மன்றம்
வாயிலாக ஆற்றி வரும் அறிவியல் பணிகளை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாகப் பாராட்டிக்
கௌரவித்தார் ஆசிரியர் திரு கி வீரமணி அவர்கள்.
தோழமையுடன்,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம் சென்னை.
-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக