செவ்வாய், 12 ஏப்ரல், 2016

தவறு உங்கள் பக்கம்தான் உள்ளது ஆதனூர் சோழன்
அவர்களே. CPI, CPM கட்சிகள் போலிக் கம்யூனிஸ்ட்
கட்சிகள் என்பது மக்கள் மத்தியில் நிரூபிக்கப் பட்டு
விட்ட விஷயம். நீங்கள் அந்தப் போலிகளைப் போய்
கம்யூனிஸ்டுகள் என்று கருதினால் அது உங்களின் தவறே.
**
வசந்தத்தின் இடிமுழக்கமாக இந்திய அரசியலில்
சாரு மஜும்தார் தலைமையில், நக்சல்பாரி இயக்கம்
தோன்றியபோதே CPI, CPM காடையர்கள் போலிகள்
என்று உணரப்பட்டு விட்டனர்.
**
இந்திராவின் கொடிய நெருக்கடி நிலையை ஆதரித்த
CPI போலிகள் உயிர்வாழத் தகுதியற்ற கழிசடைகள்.
டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்குப் பகையாளி
என்ற முழக்கத்தின்படி, மேற்கு வங்கத்தில் டாட்டாவின்
எடுபிடியான CPM போலி பட்டாச்சார்யா எளிய விவசாயிகளை
ஒடுக்கினான். இன்று ஆட்சியை இழந்துள்ளனர். இந்தத்
தேர்தலில் காங்கிரசுடன் கள்ளக்கூட்டு வைத்துள்ளனர்.
**

இவர்கள் போலிகள் என்பதற்குச் சிறந்த உதாரணம் இது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தா பாண்டியன் நல்லகண்ணு,
ஏ.பி.பரதன் சொன்னது என்ன? ஒன்பது மொழிகள் பேசத்
தெரிந்த ஜெயலலிதாவே இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்
தகுதியானவர் என்றனர் இந்தப் பல்லக்குத் தூக்கிகள்.

இவர்களின் முன்மாதிரியான கம்யூனிஸ்ட் யார் என்றால்
கொலைகாரனும் கொள்ளையடிப்பவனும் ஆகிய
தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன்தான்.

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக