திங்கள், 11 ஏப்ரல், 2016

பாஜக கூட்டணியில் இருந்து
புதியநீதிக் கட்சி விலகியது ஏன்?
உள் மர்மம் அம்பலம்!!!
-----------------------------------------------------
1) 10 தொகுதிகள் கேட்டார் ஏ.சி. சண்முகம்.
2) 20 தொகுதிக்குக் குறைவாக நாங்கள் யாருக்கும்
கொடுப்பதில்லை என்றார் தமிழிசை.
3) மறுத்து மறுத்துப் பார்த்தும் தமிழிசை கேட்கவில்லை.
4) எனவே ஹெச் ராஜாவைச் சந்தித்து முறையிட்டார் சண்முகம்.

5) தமிழிசைக்கு அனுபவம் இல்லை. அதனால் உங்களுக்கு
வெறும் 20 தொகுதி கொடுத்து விட்டார். இது தப்பு. எனவே
30 தொகுதியைப் பிடியுங்கள் என்றார் ஹெச் ராஜா.

6) உங்கள் முடிவை ஏற்க முடியாது என்றார் சண்முகம்.
7) நான் டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசுகிறேன்
என்றார் சண்முகம்.
8) விஷயம் தெரியாத ஆளா இருக்கீங்களே! நானாவது
தமிழ்நாட்டில் மட்டும்தான் தொகுதி தருவேன்.
அமித்ஷாவிடம் போனால் அவர்  கேரளாவில் உள்ள
பத்துத் தொகுதியையும் சேர்த்து உங்கள் தலையில்
கட்டி விடுவார் என்றார் ஹெச் ராஜா.

9) இதனால் கிலி  பிடித்துப்போன சண்முகம் கூட்டணியை
விட்டு விலகி விட்டார்.
10) அவரது அடுத்த மூவ் கட்சியைக் கலைத்து விட்டு
அரசியலில் இருந்தே விலகுவதுதான் என்கிறார்கள்.
******************************************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக