திங்கள், 11 ஏப்ரல், 2016

எளிய வழமையான தீர்வுதான். நல்லதொரு தீர்வு.
இது போன்ற பதிவுகளில், கணக்குகளில் மனங்கொள்ளுவோர்
மிகச் சிலர் மட்டுமே என்பதுதான் துயரம். திரு வேல்முருகனுக்கு நன்றி.

இளமை என்றாலே அழகுதான். கழுதைகூட குட்டியில்
அழகாகத்தான் இருக்கும் என்ற பழமொழி இக்கருத்துக்கு
வலு சேர்க்கிறது. இளம்பெண்ணின் பருவங்கள் ஏழு
என்பதாக தமிழ் இலக்கியங்கள் வரையறுக்கின்றன.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவங்களிலும் உள்ள பெண்களில்
மணப்பருவம் எய்திய பெண்கள்  மங்கை  முதலாய்
உள்ள பெண்கள். பேரிளம்பெண் என்றால் என்ன வயது என்ற
வினாவுக்கு விடையிறுத்த எங்கள் பள்ளித் தமிழாசிரியர்
வித்துவான் சு தி சங்கரநாராயணன் அவர்கள் 35 என்றார்.
**
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்
(பாரதியார்).
உடம்பொடு உயிரிடை யன்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள்)
அரிவையைப் பெறுகதில் லம்ம  யானே (சங்க இலக்கியம்)
**
எனவே எமது துணிபு: எல்லா இளம்பெண்களும் அழகியரே.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக