செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வைகோ மருமகன் கைது ஆவாரா?
வழக்குப் பதிவு செய்வதில் சி.பி.ஐ தீவிரம்!
யஸ்வந்த் சின்ஹா மூலம் கைதைத் தடுக்க
வைகோ தீவிர முயற்சி!
----------------------------------------------------------------------------
வைகோ மீதான ரூ 1500 கோடி ஊழல் குற்றச்சாட்டு
சி.பி.ஐ.யின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. வைகோவின்
மருமகன்  பெருந்துறையில் ரூ 450 கோடி
மதிப்பிலான ஒரு ஜவுளி நிறுவனத்தை அண்மையில்
விலைக்கு வாங்கி இருப்பது இதற்கு ஆதாரமாகக்
கருதப் படுகிறது.

செய்தியாளர்கள் மடக்கி மடக்கிக் கேட்டபோது, தன் 
மருமகனுக்கு ரூ 450 கோடி எப்படி வந்தது என்ற கேள்விக்கு
விடை அளிக்க முடியாமல் மூச்சுத் திணறினார் வைகோ.

வைகோ தனது  நெருங்கிய நண்பரான பாஜக மூத்த தலைவர்
யஸ்வந்த் சின்ஹாவைத் தொடர்பு கொண்டு, தனது
மருமகன் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக,
பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

தன மருமகனுக்கு முன்ஜாமீன் பெறுவதற்காக, பிரபல
வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் ஆலோசனை
செய்து வருகிறார் வைகோ.
********************************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக