திங்கள், 11 ஏப்ரல், 2016


குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!
--------------------------------------------------------------------------------
இந்த விடைக்கு என்ன குறை? மாணவர்கள் இந்த முறையில்தான்
விடை காண்கிறார்கள். நான் கூறவந்த துயரம் வேறொன்று.
என்னுடைய பிற பதிவுகள் நூற்றுக் கணக்கிலும், ஏன்
ஆயிரக்கணக்கிலும் படிக்கப் படுகின்றன. ஆனால் அறிவியல்,
கணிதம் சார்ந்த பதிவுகள் விரல்விட்டு எண்ணத்தக்க
வெகு சிலரால் மட்டும் படிக்கப் படுவது என்பது உள்ளபடியே
ஒரு தேசியத் துயரம் ஆகும்.
**
கணித உள்ளடக்கம் கொண்ட ஒரு கணக்கிற்கு மிகவும்
கவர்ச்சிகரமான வடிவம் கொடுத்துத்தான் கணக்கையே
உருவாக்குகிறேன். என்றாலும், கணக்கைச் செய்து
பார்ப்பவர்கள் மிக மிகக் குறைவு என்பதை நான் அறிவேன்.
The proof of the budding is in the eating.(உணவின் ருசி அதைச்
சாப்பிடும்போதுதான் தெரியும். செய்து பார்க்காமல் எவரும்
கணித இன்பத்தை நுகர இயலாது.
**
நான் பி.யூ.சி படித்தபோது கொண்டிருந்த கணக்கார்வத்தை
இந்த 63 வயதிலும் மங்காமல் காத்துக் கொண்டு
இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமிதம் தருகிறது.
இந்தப் பிறவியில் இது எனக்கு வாய்த்து இருக்கிறது.
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் (பிறவிகள் இருக்குமானால்)
இது எனக்குத் தொடர்ந்த வாய்க்க வேண்டும் என்பதே
என் விருப்பம்.
--------------------------------------------------------------------------------------------------
குறையொன்றுமில்லை என்ற தலைப்பிலான
மேற்கூறிய என் பின்னூட்டம் என்னுடைய விடை
பற்றியதன்று. அது தங்களின் விடை குறித்ததே.
என்னுடைய விடை non-maths குழுவினருக்கானது.
சமன்பாட்டுக்குப் போகாமல் இக்கணக்கைப் புரிய
வைக்கும் முயற்சி அது. No doubt, my solution is simple, rather I will say,
it is THE SIMPLEST, but not elegant.


எவ்வளவு அலட்சியம்! எவ்வளவு நுனிப்புல் தன்மை!
என்றாலும், மாணவர்களாய் அல்லாதோர் இக்கணக்கிற்கு
விடை எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பதும்,
ஏதேனும் ஒரு விடையை எழுதுவதும் வரவேற்கத்தக்கது
என்றே நான் கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக