செவ்வாய், 3 மே, 2016

நியூட்டன் அறிவியல் மன்றம் 2001 முதல் இயங்கி
வருகிறது. அறிவியலை மக்களிடம் பரப்புவது
(science communication) என்பதுதான் ஒரே நோக்கம்.
இது முற்ற முழுக்க என்னால் தொடங்கி
நடத்தப் படுவது. வெற்றிகரமாக நடந்து வருகிறது.
தமிழ் மக்களிடம் அறிமுகமும் பெற்றுள்ளது.
**
1) ஏடுகளில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவது
 2) வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவியல்
விளக்கம் அழிப்பது
3) பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் சொற்பொழிவுகள்,
நிகழ்ச்சிகள் நடத்துவது
4) அரங்குக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்
நடத்தி, மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை
ஏற்படுத்துவது.
ஆகிய பணிகளில் ஈடுபடுகிறது.
**
சந்தா, நன்கொடை பெறுவதில்லை. 12ஆம் வகுப்பில் 
கணிதம், இயற்பியல் பாடங்கள் எடுத்துப் படித்து
இருக்க வேண்டும். இதுதான் சேர்வதற்கான தகுதி.
அறிவியலில் ஆர்வம் இருத்தல் வேண்டும்.
18 வயது நிரம்பிய, இந்தியக் குடிமகனாகிய
 ஆண் பெண் இருபாலரும் சேரலாம்.
**
எந்த NGO சார்பும் கிடையாது.

தங்களைப் போன்றவர்களை விரும்பி வரவேற்கிறேன்.
இணைந்து செயல்படலாம்.  We are dedicated to the cause of science
communication. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக