செவ்வாய், 3 மே, 2016

கத்திரி வெயில் கொளுத்துகிறது!
வீட்டில் இருந்தே சீட்டு விளையாடுங்கள்!
மாணவர்களுக்கு அறிவுரை!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியே
சுற்றுவதைத் தவிர்க்கவும். வீட்டிலேயே
இருக்கவும்.

வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து
1) சீட்டு விளையாடுங்கள்.
2) தாயம் விளையாடுங்கள்.
3) சதுரங்கம் (chess) விளையாடுங்கள்.

மொபைலிலோ லாப்டாப்/கணினியிலோ
candy crash விளையாடுவதைத் தவிர்த்து,
நேரடியாக physicalஆக விளையாடுகிற
வாய்ப்பைத் தரும்  சீட்டு-தாயம்-சதுரங்கம்
விளையாடுங்கள்.

permutation, combination என்ற கணிதக் கோட்பாடு
பற்றியும், நிகழ்தகவுக் கோட்பாடு பற்றியும்
(theory of probability) தெளிவாகப் புரிந்து கொள்ள
சீட்டு விளையாடுவது துணை புரியும்.

சீட்டு விளையாட்டைக் கண்டு பிடித்தவன் ஒரு
கணித நிபுணன் (mathematician). அது போலவே
சதுரங்க விளையாட்டைக் கண்டு பிடித்தவன்
ஒரு கணித நிபுணனே.

ரம்மி, துருப்பு உள்ளிட்ட சீட்டு விளையாட்டுக்கள்
சிறந்தவை. இதில் கைதேர்ந்தால்தான் பிரிட்ஜ்
விளையாட முடியும். பிரிட்ஜ் விளையாடத் தெரியுமா?

பிள்ளைகளை சீட்டு விளையாடச் சொல்லுவதா
என்று தற்குறிகளும் முட்டாள்களும் குதிக்கட்டும்.
நீங்கள் சீட்டு விளையாடுங்கள்!
**************************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக