செவ்வாய், 3 மே, 2016

சமச்சீர் கல்வியை எதிர்த்த மார்க்சிஸ்டுகள்!
பாலபாரதி அம்மையாரின் கயமை!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
2006-2011 காலக்கட்டத்தில் கலைஞர் தமிழக முதல்வராக
இருந்தார். அப்போது அவர் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்புகள் வரை சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார்.

2011இல் ஆட்சியை இழந்தார் கலைஞர். ஜெயலலிதா
முதல்வர் ஆனார். சமச்சீர் கல்வியை ஒழித்துக்
கட்டினார். இதற்காக சட்டமன்றத்தில் திருத்தச் சட்டம்
கொண்டு வந்தார். அதாவது கலைஞர் கொண்டு வந்த
சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் திருத்தச் சட்டம்.

ஜூன் 7, 2011 அன்று தமிழக சட்ட மன்றத்தில் சமச்சீர்
கல்வியை ஒழித்துக்கட்டும் சட்டத் திருத்தம்
வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதிமுகவினர்
ஆதரித்து வாக்களித்தனர். கூடவே மார்க்சிஸ்ட்
கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இதை
ஆதரித்து வாக்களித்தனர். சமச்சீர் கல்வி
ஒழித்துக் கட்டப் பட்டது.

இதை ஒழித்துக் கட்டியதில் ராஜனை மிஞ்சிய ராஜ
விசுவாசியாக மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டது.
ஆதரித்து வாக்களிக்காமல் வெளிநடப்பாவது
செய்து இருக்கலாம். ஆனால் உணர்வுபூர்வமாக,
சமச்சீர் கல்வி தேவையில்லை என்ற நிலைபாட்டை
எடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி.

பாலபாரதி என்று ஒரு பெண் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட்
கட்சிக்காரர். இவர் ஒரு டிபன் பாக்ஸில் வீட்டில் இருந்து
கொண்டு வந்த சோற்றை கட்சி அலுவலகத்தில்
வைத்து உண்ணும் புகைப்படம் முகநூலில் மிகவும்
பிரபலம். ஆஹா, என்ன எளிமை என்று சகல விதமான
குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களும்
சிலாகிப்பது உண்டு.

ஆனால், இந்த எளிமையின் சிகரமான பாலபாரதிதான்
சமச்சீர் கல்வியை எதிர்த்து வாக்களித்தவர். இதுபோல
மார்க்சிஸ்ட் கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏ
மதுரவாயல் பீமாராவ். இவரும் சமச்சீர் கல்விக்குக்
கொள்ளி வைத்த ஏழை பங்காளன்.

அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் குட்டி முதலாளித்துவ
சிந்தனைக் குள்ளர்களே, இந்த நாட்டில் சமத்துவத்துக்கு
எதிரான கட்சிகளில் ஒன்று மார்க்சிஸ்ட் கட்சி
என்பதை  இங்கு நிரூபித்து இருக்கிறேன். முடிந்தால்
இதைத் தவறு என்று பாலபாரதி ரசிகர்கள்
நிரூபிக்கட்டும்.
***********************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக