திங்கள், 2 மே, 2016

MBBS இடங்களை திருவுளச் சீட்டுப் போட்டு
மாணவர்களுக்கு வழங்குவதா?
------------------------------------------------------------------------------------
படிப்போடு தொடர்பில்லாத வேறு அடிப்படைகளை
வைத்து தரவரிசையைத் தீர்மானிப்பது என்ன நியாயம்?
71 வயதுப் பெரியவரும் 17 வயதுச் சிறுவனுமா தேர்வு
எழுதப் போகிறார்கள்? விண்ணப்பிக்கும் ஆண்டின்
டிசம்பர் 31 அன்று 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள்
மட்டுமே தேர்வு எழுத முடியும். இதில் ஒருநாள்
முந்திப் பிறந்தான் என்பதற்காக, ஒருவனுக்கு MBBS
சீட்டைக் கொடுப்பதும், இன்னொருவனுக்கு
மறுப்பதும் என்ன நியாயம்?

கணினி உருவாக்கும் ராண்டம் நம்பர் என்பது என்ன?
திருவுளச் சீட்டு அல்லாமல் வேறென்ன?

மருத்துவக் கல்லூரி அட்மிஷனுக்கும் Maths பாடத்தில்
எடுத்த மதிப்பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?
(Maths or Computer science or any other). அருஜுனன் கிளியின்
தலையை மட்டுமே பார்த்தன்; அதனால்தான்
அவன் கிளியை அம்பெய்து வீழ்த்தினான். மற்றவர்கள்
எல்லாம் கிளையைப் பார்த்தார்கள், இலையைப்
பார்த்தார்கள்; எனவே கிளியை அம்பெய்து வீழ்த்த
முடியவில்லை என்று காலங்காலமாக மகாபாரதக்
கதையைச் சொல்லிக் கொடுத்துப் பிள்ளைகளை
வளர்த்து விட்டு, இன்றைக்கு நாலாவது பாடத்தில்
என்ன மார்க் என்று பார்ப்பதும் அந்த மார்க்கின்
அடிப்படையில் MBBS சீட்டு வழங்குவதும் என்ன நியாயம்? 

எனவே நுழைவுத் தேர்வு அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக