வியாழன், 5 மே, 2016

இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. மிகவும்
அபூர்வமானதும் அரிதானதும் ஆகும். இப்படி
நிகழ்வதற்கான வாய்ப்பும்  (probability) மிக மிகக்
குறைவு.
**
கருவுற்ற தாயை கருவுற்ற  நாள் முதல்
கண்காணிப்பதும், கரு வளர்ச்சியில்
குறையிருப்பின், அதைத் தொடக்கத்திலேயே
கண்டறிந்து களைதலும்  வேண்டும். இது
பெற்றோரின் கவனக் குறைவால் ஏற்படுவதே
ஆகும். இதன் காரணங்களை
ஆய்ந்து அறிந்தால், அத்தகைய காரணங்களைக்
களைவது மருத்துவத்தாலும், அறிவியலாலும்
சாத்தியமான ஒன்றுதான்.
**
மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்
இன்னும் துல்லியமாகக் கூற இயலும்.  


குழந்தைகள் தாமாகப் பிறப்பதில்லை. பெற்றோர்கள்
இல்லாமல் பிள்ளைகள் பிறக்க முடியாது. எனவே
 தவறு பெற்றோர்கள் மீதுதான்.

"நிலக்குப் பொறை" என்பார் வள்ளுவர். பூமிக்குப்
பாரம் என்று பொருள். அந்தக் குழந்தை பூமிக்குப்
பாரமாகப் பிறந்து விட்டது. அந்தக் குழந்தையை
எப்படி வளர்ப்பது, பேணுவது, குழந்தையின்
குறைபாட்டைக் களைய முடியுமா என்பது
பற்றியெல்லாம் மருத்துவ நிபுணர்களும்,
குறைபாடு உடைய குழந்தைகளை வளர்ப்பதில்
அறிவும் பயிற்சியும் உள்ள நிபுணர்களும்
மட்டுமே தீர்வு சொல்ல வல்லவர்கள். அவர்களிடம்
ஆலோசனை பெற வேண்டும்.

ஏன் இப்படி ஒரு பிறப்பு? ஏன் இந்த ஓரவஞ்சனை?
-------------------------------------------------------------------------------------
பிறவிக் குறைபாடுகள் (congenital defects) பல்வேறு
காரணங்களால் ஏற்படுகின்றன. எனினும்
இவற்றுக்கான நிகழ்தகவு மிகவும் குறைவே.
பல்வேறு down syndromes, anatomical abnormalities உள்ளிட்ட
பல்வேறு பிறவிக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
இவற்றுக்குப் பாரம்பரியக் காரணங்களும்
பாரம்பரியம் அல்லாக் காரணங்களும் உண்டு.

எனினும் கருப்பையில் கரு வளரத் தொடங்கும்போதே,
இவை போன்ற குறைகள் இருப்பின் அவற்றைக்
கண்டறிய முடியும். ஒரு routine checkupஇல் கூட பல
குறைகளைக் கண்டறிந்து விட முடியும்.

பாரம்பரியமல்லாக் காரணிகளை (non genetic causes)
அறிவியல் வளர்ச்சி மூலமும் மருத்துவத்தின்
முன்னேற்றம் மூலமும் அகற்ற முடியும்.
பாரம்பரியக் காரணிகளை அவ்வளவு எளிதில்
அகற்ற முடியாது. எனினும் இது குறித்து மருத்துவ
நிபுணர்கள் மட்டுமே தக்க பதில் கூற முடியும்.
**
ஒர வஞ்சனை என்பது ஒரு செயல் (காரியம்).
எனவே இதைச் செய்ய ஒரு கர்த்தா வேண்டும்.
ஆனால் பிறவிக் குறைபாடுகளில் அப்படி ஒரு
ஒற்றைக் கர்த்தா என்று எவரும் இல்லை.
இதில் கடவுளைக் குறை சொல்வதில் பொருளில்லை.
இல்லாத ஒருவரை எப்படிக் குறை சொல்ல முடியும்.
--------------------------------------------------------------------------------------------------

தெளிவு பெறுக!
---------------------------------
பிறவிக் குறைபாடுகள் பற்றியும் அவற்றின்
காரணிகள் பற்றியும் விரிவாகச் சொல்லி உள்ளேன்.
நான் மருத்துவர் அல்லன். உங்களின் கேள்விகளுக்கு
தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணரே சிறப்பாகப்
பதில் சொல்ல முடியும் என்பதையும் ஒவ்வொரு
பின்னூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளேன். எனவே
அருள்கூர்ந்து மகப்பேறு மற்றும் குறைபாடுள்ள
குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றில்
நிபுணத்துவம் பெற்ற ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களை
அணுகவும். நிற்க.
**
பாரம்பரியக் காரணங்கள் (genetic causes) என்பவை
பலவகைப்படும். இது ஒரு ஒற்றைக் காரணி அல்ல
(not a single factor). எவையெல்லாம் பாரம்பரியக்
காரணங்கள் என்பது பற்றியும் அத்துறை சார்ந்த
ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ நிபுணரே பதில் சொல்ல
முடியும். ஒன்றல்ல, பல காரணங்கள் உண்டு.
இது உறுதி.
**
ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் துறை சார்ந்த நிபுணரும்
ஆக உள்ளவர்கள்  மட்டுமே பதில் அளிக்க வல்ல
கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு என்னால்
இயன்ற அளவு மட்டுமே பதில் கூற முடியும். நான்
அதிகம் படித்தது PHYSICS, MATHS இரண்டும்தான்.
BIOLOGY, ZOOLOGY ஆகியவற்றில் எனக்குச் சராசரியான
பொது அறிவு மட்டுமே உண்டு. அப்படங்களில் நான்
நிபுணன் அல்ல, நிற்க.
**
ஓரவஞ்சனை, கர்த்தா ஆகியவை பற்றி நான்
குறிப்பிட்டதில் எனக்கு எக்குழப்பமும் இல்லை.
பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு கடவுள்
காரணம் அல்ல. மீண்டும் கூறுகிறேன்: கடவுள்
காரணம் அல்ல. ஏனெனில் கடவுள் என்று ஒருவர்
இல்லை. இல்லாத கடவுளை எப்படிக் குற்றம்
சொல்ல முடியும்? இதன் மூலம் நான் யாப்புறுத்துவது
கடவுள் இல்லை என்பதையே.
**
அப்படியானால் யார் காரணம் என்ற கேள்விக்கு
மருத்துவ நிபுணர்களை அணுகவும்.      
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக