புதன், 4 மே, 2016

மாபெரும் அறிவியல் விவாதம் தொடங்கியது!
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
உங்கள் கருத்துகளைஇங்கு மட்டுமே பதியுங்கள்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
முதலில் கடவுள் என்பவர் பின்வருமாறு வரையறுக்கப்
படுகிறார்.

1) கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை, உயிர்களைப்
படைத்தவர் (CREATOR).
2) சர்வ வல்லமை வாய்ந்தவர் (omni potent)
3) எங்கும் நிறைந்தவர் (omni present)
4) அனைத்தும் அறிந்தவர் (omni scient)
5) சொர்க்கம் நரகத்தைப் படைத்து
நல்லவர்களுக்கு வெகுமதியும் தீயவர்களுக்குத்
தண்டனையும் வழங்குபவர்.
6) கடவுளை மக்களும் மதங்களும் இப்படித்தான்
வர்ணிக்கின்றன.
********************
நியூட்டன் அறிவியல் மன்றம் பின்வருமாறு
விவாதத்தைத் தொடங்கி வைக்கிறது.

1) கடவுள் உலகைப் படைத்தார் என்று வைத்துக்
கொண்டால், பின்வரும் சிக்கல்கள் எழுகின்றன.
எந்த ஒன்றும் சுயமாகத் தோன்ற முடியாது;
யாராவது ஒருவரால் அது படைக்கப்பட வேண்டும்
என்று ஆகிறது. அப்படியானால், கடவுளுக்கும்
இது பொருந்தும். அதாவது கடவுளும் சுயமாகத்
தோன்றி இருக்க முடியாது. அவரையும் யாராவது
ஒருவர் படைத்திருக்க வேண்டும். ஆக, கடவுளைப்
படைத்தது யார்?

2) எல்லாவற்றையும் படைத்தவர் கடவுள் என்றால்,
காலத்தை (TIME) படைத்தவரும் கடவுளே. இங்கு
இன்னொரு சிக்கல் முளைக்கிறது. படைப்பு என்பது
ஒரு செயல். எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதற்கு
ஒரு குறிப்பிட்ட அளவு காலம் (TIME) ஆகும். கடவுள்
ஐந்து நிமிடங்களில் இந்த உலகைப் படைத்தார்
என்றால், படைப்புக்கு ஆன காலம் 5 நிமிடம்.

time zeroவில் படைக்க ஆரம்பிக்கிறார்; time 5இல்
படைப்பு முடிகிறது. எனவே, இந்த 5 நிமிடத்திற்குப்
பிறகுதான் காலம் என்பது தொடங்க வேண்டும்.
அப்படியானால், 1,2,3,4,5 நிமிடங்களை எந்தக்
கணக்கில் வைப்பது? கடவுள் படைக்கும் முன்பே
காலம் இருந்திருக்கிறது என்றுதானே இதற்கு
அர்த்தம்!

அப்படியானால், கடவுள் படைக்கும் முன்னரே
காலம் இருந்தது என்றால், காலத்தைக் கடவுள்
படைக்கவில்லை என்று ஆகி விடுகிறது.

அப்படியானால் எல்லாவற்றையும் கடவுள்
படைத்தார் என்ற வாதம் அடிபட்டுப் போய்
விடுகிறது.

நிற்க. இவ்வாறு நியூட்டன் அறிவியல் மன்றம்
விவாதத்தைத் தொடங்கி வைக்கிறது.
இனி மற்றவர்கள் கருத்துச் சொல்லலாம்.
விவாதம் தொடரட்டும்.
******************************************************************
பங்கேற்போர்:


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக