வியாழன், 5 மே, 2016

ஆடு மாடுகளை வளர்க்கிறோம். பூனை, நாய்களை
வளர்க்கிறோம். கோழி வளர்க்கிறோம். மனிதனை விடத்
தாழ்நிலையில் உள்ள இந்த மிருகங்களுக்கோ
அல்லது பறவைகளுக்கோ கடவுள் நம்பிக்கை
இல்லை. அவை கடவுளை ஏற்பதும் இல்லை.
வணங்குவதும் இல்லை. கடவுளை வணங்குவதற்காக
அவை மதங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை.

சிட்டுக் குருவிகளும் வெட்டுக் கிளிகளும் எந்தக்
கடவுளை வணங்குகின்றன? ஏன் அவைகளுக்கு
கடவுள் பற்றிய உணர்வோ அறிவோ இல்லை?

கரப்பான் பூச்சி எந்தக் கடவுளை வணங்குகிறது?
ஈக்களும் கொசுக்களும் எந்தக் கடவுளை
வணங்குகின்றன? சிந்தித்துப் பாருங்கள்

கடவுள்தான் ஆடு மாடு கோழி. குருவிகளைப்
படைத்தார் என்றால், தங்களைப் படைத்த
கடவுளை வணங்குவதற்கு இந்த உயிரினங்கள்
ஏன் எந்த வித முயற்சியும் செய்யவில்லை?

தன்னை வணங்காத இந்த உயிர்களை கடவுள்
ஏன் தண்டிக்கவில்லை?

ஒன்று: தன்னை வணங்காத இந்த உயிர்களைக்
கடவுள் தண்டித்து இருக்க வேண்டும்  (அல்லது)
இரண்டு: அந்த உயிர்களுக்கும் நம்பிக்கையை
ஏற்படுத்தி, கடவுளானவர் தன்னை வணங்கச் செய்து
இருக்க வேண்டும். இந்த இரண்டும் இதுவரை
நடக்கவில்லை.

இதில் இருந்து என்ன தெரிகிறது? மனிதனை விடக்
கீழான ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள பிற
உயிர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை
என்பது தெரிகிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக