வியாழன், 5 மே, 2016

கூடு கட்டத் தெரிந்த சிட்டுக் குருவிகள் கடவுளை
வணங்குவதற்காக ஏன் கோவில் கட்டுவதில்லை
அற்புதமான சிலந்தி வலை பின்னத் தெரிந்த
சிலந்திகள் கடவுளுக்காக ஏன் கோவில் கட்டுவதில்லை?
அனெனில் மனிதனைத் தவிர பிற உயிர்களுக்கு
கடவுள் என்ற சிந்தனையே கிடையாது.


திரு ஜான் ரூபர்ட் அவர்கள் கடவுள் சர்வ வல்லமை
வாய்ந்தவர் என்பது பொய் என்று இங்கே நிரூபித்து
விட்டார். எப்படி? இதோ பாருங்கள். கடவுள் ஒரு முடிவு
எடுக்கிறார். என்ன முடிவு? யாராலும் தூக்க முடியாத
அளவு எடையுள்ள, கடவுளாகிய தம்மாலுமே தூக்க
முடியாத ஒரு பாறாங்கல்லைப் படைக்க வேண்டும்
என்று முடிவு செய்து அப்படியே படைத்தும் விடுகிறார்.
** 
இப்போது அந்தக் கல்லை கடவுளால் தூக்க முடியுமா?
1) தூக்க முடியும் என்றால் யாராலும் தூக்க முடியாத
கல்லை கடவுளால் படைக்க முடியவில்லை என்று
ஆகிறது. அப்படியானால் கடவுள் எப்படி சர்வ
வல்லமை உடையவர் ஆவார்?
2) தூக்க முடியவில்லை என்றால், ஒரு கல்லைக் கூடத்
தூக்க முடியாத கடவுள் எப்படி சர்வ வல்லமை
உடையவர் ஆவார்?
**
ஆக, கல்லைத் தூக்கினாலும் சரி, தூக்க முடியா
விட்டாலும் சரி, இரண்டு நிலைகளிலுமே கடவுள்
சர்வ வல்லமை வாய்ந்தவர் என்பது அடிபட்டுப்
போய்விடுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக