திங்கள், 31 அக்டோபர், 2016

வைகோவுக்கு தமிழருவி மணியன் அழைப்பு!
----------------------------------------------------------------------------------
வைகோ-தமிழருவி மணியன் உரையாடல்
-----------------------------------------------------------------------------
தமிழருவி: வைகோ, வாங்க, இனிமேல் ஒரு நிமிடம் கூட
நீங்கள் அரசியலில் இருக்கக் கூடாது; இருந்தால்
எள்முனை அளவு கூட மரியாதை இருக்காது.
வாருங்கள் என்னுடன்;அரசியலில் இருந்து
விலகி விடுங்கள்; இன்று நல்ல நாள். உங்கள்
முடிவை அறிவியுங்கள்.

வைகோ: நீங்கள் சொல்வது சரிதான்; நான்
மறுக்கவில்லை. நீங்கள் சொல்வதைக்
கொள்கையளவில் ஏற்றுக் கொள்கிறேன்.
நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கலை
எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழருவி: நீங்கள் முதலில் விலகுகிறேன் என்று
அறிவியுங்கள். பின்னர் எல்லாம் தானாக நடக்கும்.

வைகோ: சரி, பார்க்கிறேன்; கொஞ்சம் பொறுங்கள்.
**************************************************************** 
இது ஒரு பகடி. அதாவது நகைச்சுவைப் பதிவு.
ஜெயமோகன் எதிர்ப்பு என்ற பெயரில், இந்த மொத்த
உலகத்தையும் ஜெயமோகன் ஆதரவு--ஜெயமோகன் எதிர்ப்பு
என்று இரண்டாகப் பிரிக்கும் மூடர்களுக்கு எதிரான
கண்டனமும் ஆகும்.
தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வங்கியின் பெண் ஊழியர் குறித்த தங்கள் 
கட்டுரை தொடர்பாக, நான் முகநூலில் எழுதிய 
பதிவை, பத்திரிகை டாட் காம் என்ற இணைய இதழ் 
வெளியிட்டுள்ளது. அது தங்கள் பார்வைக்கு.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்.
முன்னாள் மாவட்டச் செயலாளர், சென்னை,
NFTE BSNL (BSNL தொழிற்சங்கம்)
   
குவான்டம் தியரி முதல் குற்றாலக் குறவஞ்சி வரை!
---------------------------------------------------------------------------------------------
அணி = அழகு. தமிழிலக்கணம் நிறைய அணிகளைப்
பற்றிக் கூறுகிறது.  உவமை அணி, உருவக அணி,
பிறிது மொழிதல் அணி, வேற்றுமை அணி,
வேற்றுப்பொருள் வைப்பணி, சொற்பொருள்
பின்வருநிலை அணி முதலிய பல்வேறு அணிகள்
குறித்து பள்ளி மாணவர்களே கற்றிருப்பர்.
**
இங்குள்ள கட்டுரையில் பயிலும் அணி வஞ்சப்
புகழ்ச்சி அணி ஆகும். புகழ்வது போலப் பழித்தலும்,
பழிப்பது போலும் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி
அணி ஆகும். நிற்க.
**
அஃது அவ்வணியாகுமாற்றைப் புலப்படுத்துக
என்றால் பொருள் என்ன?  அ + அணி+ஆகும்+ ஆறு =
அவ்வணியாகுமாறு. ஆறு =வழி. அந்த அணியாக
எப்படி ஆகிறது என்றும் கூறல் வேண்டும். இங்கு,
ஆறு+ ஐ என்ற புணர்ச்சியில் ஒற்று இரட்டித்து
ஆற்றை என வருகிறது. இதில் செயல்படும் புணர்ச்சி
விதி பற்றியும் அறிந்து கொள்ளவும். இது போல,
ஒற்று இரட்டித்துப் புணரும் பிறிதோர் எடுத்துக்
காட்டினைத் தருக.
**
உலக வரலாற்றிலேயே எமது பதிவுகளில் மட்டுமே,
ஒரே நேரத்தில் குவான்டம் தியரி முதல் குற்றாலக்
குறவஞ்சி வரை எடுத்து இயம்பப்படும்.
போஸ்-ஐன்ஸ்டின் கன்டென்ஸேட் முதல் புணர்ச்சி
இலக்கணம் வரை பயில முடியும்.
---------------------------------------------------------------------------------------------            
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் வீடியோக்களுக்கு
எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!
காழ்ப்புணர்வு மிகுந்த ஜெயமோகனின் விமர்சனத்திற்கு
பதிலளிக்கும் எமது தன்னிலை விளக்கம்!
ஜெயமோகனே மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!!
--------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------
1) கேப்டன் நியூஸ் செய்தியாளர், நோபல் பரிசு குறித்து
என்னிடம் நேர்காணல் செய்து,  ஒரு வீடியோவை
யூடியூபில் பதிவேற்றம் செய்தார். 26 நிமிடங்கள்
ஓடும் இந்த வீடியோவை இதுவரை 263 பேர் மட்டுமே
பார்த்துள்ளனர்.

2) வேதியியல் நோபல் பரிசு குறித்த எனது எட்டு நிமிட
தமிழ்ச் சிற்றுரை யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதை இதுவரை 226 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

3) இயற்பியல் நோபல் பரிசு குறித்த எனது 10 நிமிட
தமிழ்ச் சிற்றுரையை நியூட்டன் அறிவியல் மன்றம்
யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தது. இதை 100 பேர்
மட்டுமே இதுவரை பார்த்துள்ளனர்.
(பதிவேற்றத் தேதி: 26,10,2016).

4) உலகின் மக்கள் தொகை இன்றைய தேதியில்
750 கோடி. இந்த 750 கோடிப் பேரில்  இயற்பியல்
வேதியியல் நோபல் பரிசுகள் 2016 குறித்து, நான்
ஒருவன் மட்டுமே தமிழில் அறிவியல் விளக்கம்
அளித்துள்ளேன்.

5) கூகிள் தேடலில், "Physics Nobel 2016 explained in Tamil" என்று
அடித்தால் கிடைக்கும் 9 லட்சத்து 32,000 முடிவுகளில்,
என்னுடைய விளக்கம் 5ஆவது இடத்திலேயே கிடைத்து
விடுகிறது. அதுபோல் யூடியூபில் இதே பொருளில்
தேடினால் கிடைக்கும் 200 வீடியோக்களில் தமிழில்
விளக்கம் தரும் வீடியோ என்னுடையது மட்டுமே.

6) என்றாலும், பார்ப்பவரின் எண்ணிக்கை 263 பேர்,
200 பேர், 100 பேர் என்று குறைவாகவே உள்ளது. இதே
விளக்கத்தை நான் ஆங்கிலத்தில் அளித்து இருந்தால்,
இந்நேரம் பத்தாயிரக் கணக்கில் பார்த்து இருப்பார்கள்.

7) பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
என்ன வழி என்று சிந்தித்தபோது ஒரு வழி
புலப்பட்டது. அதுதான் நாகர்கோயில் சென்று
எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்திப்பது. அடிக்கடி
திருநெல்வேலி செல்லும் எனக்கு நாகர்கோவில்
செல்வது ஒரு பொருட்டே அல்ல.

8) தோழர் ஜெயமோகனுடன் தற்போது நட்பில் நான்
இல்லாவிட்டாலும், ஒரு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில்,
25 ஆண்டு காலம் தோழர் ஓ பி குப்தாவின் (எங்கள்
NFTE BSNL சங்கத் தலைவர்) தலைமையை ஏற்றுத்
தீவிரமாகச் செயல்பட்டவர்கள் நாங்கள். சங்க
அங்கீகாரத் தேர்தலில் தலைவர் குப்தாவின்
வெற்றிக்காக இரவு பகலாக மாடாய் உழைத்தவர்கள்
நாங்கள். NFTE ஜிந்தாபாத், ஒர்க்கர்ஸ் யூனிட்டி
ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத் என்று லட்சக்
கணக்கான முறை முழங்கியவர்கள் நாங்கள்.  

9) அந்த நட்பின் அடிப்படையில் தோழர் ஜெயமோகனைச்
சந்தித்து, அவரிடம் இருந்து, நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் அறிவியல் விளக்க வீடியோக்கள் குறித்து
ஒரு கண்டன அறிக்கையைப் பெற்று, அதை
அவரின் வலைப்பூவில் வெளியிடச் செய்வது என்பதே
எங்களின் முடிவு.

10) ஆம், கண்டன அறிக்கைதான்! ஜெயமோகன் எதை
எதிர்க்கிறாரோ, அதை ஆதரித்தே தீர வேண்டும் என்று
கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு குட்டி முதலாளித்துவக்
கூட்டமே சமூகத்தில் அம்மணமாகத் திரிகிறது. இந்தக்
கூட்டத்தையே நாம் குறி வைக்கிறோம்.

11) "நியூட்டன் அறிவியல் மன்றத்தின் வீடியோக்கள்
தரக்குறைவானவை; இதைத் தயாரித்த இளங்கோ
கீரைப் பாத்திக்கு தண்ணீர் பாய்ச்சக் கூட அருகதை
இல்லாதவர்" என்று தோழர் ஜெயமோகன் ஒரு
கண்டனத்தைப் பதிவு செய்தாலே போதும்.

11) அதன் பிறகு, நடப்பதெல்லாம் மந்திரத்தில்
மாங்காய் விழுந்தது போல் நடந்து விடும்.
முருங்கை  பெருத்தது போல ஊளைச் சதையால்
பெருத்துக் கிடக்கும், "ஜெயமோகன் எதிர்ப்பு
ஐக்கிய முன்னணி"யின் தலைவர்கள், அ மார்க்ஸ்
முதல் யமுனா ராஜேந்திரன் வரை நமது வீடியோக்களை
தாங்கள் பார்ப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும்
பார்க்க வைத்து விடுவார்கள். நமது வீடியோக்களை
ஆதரித்து அறிக்கை விடுவார்கள்.

அ) குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள் 
ஆ) சிந்தனைக் குஷ்டரோகிகள்
இ) பின்நவீனத்துவ நாற்றம் பிடித்தவர்கள்
ஈ) புழுவினும் கீழான அற்பப் பதர்கள்
உ) ஈனத் தற்குறிகள், இத்தியாதி, இத்தியாதி

என்று ஜெயமோகன் எதிர்ப்புச் சாக்கடையில்
திளைக்கும் அத்தனை பேரும், யூடியூபில் நமது
வீடியோக்களைத் தேடி எடுத்துப் பார்க்க
ஆரம்பித்து விடுவார்கள். ஒரே நாளில்,
பாம்பு கடித்தவனுக்கு விஷம் ஏறுவது போல,
நமது வீடியோக்களைப் பார்க்கிறவர்களின்
எண்ணிக்கை உச்சம் தொட்டு விடும்.

இதுதான் எமது உபாயம்! இதைச் செயல்படுத்தப்
போகிறோம். அதன் பிறகே இக்கட்டுரையின்
தலைப்பு மெய்ந்நிலை உறும்.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: இக்கட்டுரையில் பயிலும் அணி யாது?
அஃது அவ்வணியாகுமாற்றைப் புலப்படுத்துக.

பின்குறிப்பு-2: ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தையும்,
ஜெயமோகன் ஆதரவு--ஜெயமோகன் எதிர்ப்பு என்று
பைனரியாகச் சுருக்கிப் பார்க்கும் MYOPIA
நோயாளிகளுக்கு இக்கட்டுரை உவப்பானதல்ல.
இந்தப் பிரபஞ்சம் ஒரு Jeyamohan condensate அல்ல.
(condensate குறித்து அறிய, எமது வீடியோக்களைப்
பார்க்கவும்.)
*****************************************************************

      

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஒரு இடதுசாரி இணையதளத்தில் வெளியான கட்டுரை!
---------------------------------------------------------------------------------------------------
லீனா மணிமேகலையின் ஆபாசக் கவிதை,
அக்கவிதையை ஆதரித்துக் கூட்டம் போட்ட
பேராசிரியர் அ மார்க்ஸ், ராஜன் குறை ஆகியோரைக்
கண்டித்து, மார்க்சிய லெனினிய இணையதளமான
"வினவு" தளத்தில் வெளியான கட்டுரை இது. இதை
வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும். நிற்க.
**
இக்கட்டுரையின் தலைப்பே இதுதான்;
"அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி".
ஏன் இப்படித் தலைப்பு? இப்படி எழுதினால் தான்
ஆபாசக் கயவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும்
விதத்தில் பதிலடி கொடுக்க முடியும் என்பதுதான்.
**
எமது கட்டுரையும் இதைப் போன்ற ஒரு பாணியில்தான்
எழுதப்பட்டுள்ளது. அதன் மொழிநடை உழைக்கும்
மக்களுக்கு எதிரானது என்று சில
 கிறிஸ்துவ மத வெறியர்கள், கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.
காரணம், அ மார்க்ஸ் ஒரு கிறிஸ்துவர்; லீனா மணிமேகலை
ஒரு கிறிஸ்துவர்; லீனாவின் கணவர் ஜெரால்டு ஒரு
கிறிஸ்துவர் என்பதாலா?
கேவலத்தின் உச்சம் தொட்ட கவிதை!
---------------------------------------------------------------------
எமது கட்டுரையில் குறிப்பிட்ட
லீனா மணிமேகலையின் கவிதை
கீழே தரப்பட்டுள்ளது. (பின்னூட்டம் காண்க)
வாசகர்களின் பார்வைக்காக!
இந்தக் கேவலமான கவிதையை எழுதியதால்
லீனா மணிமேகலைக்கு கண்டனங்கள் பெருகின.
அப்போது லீனாவை ஆதரித்துக் கூட்டம்
போட்டவர்கள் பேராசிரியர் ராஜன் குறை என்பவரும்
பேராசிரியர் அ மார்க்சும்.
இப்படிப்பட்ட அ மார்க்ஸையும் ராஜன் குறை என்பவரையும்
கண்டித்து எழுதினால், அவர்களுக்கு வால் பிடிப்பவர்களை
என்ன செய்வது?


-----------------------------------------------------------------------------------

நான் நுகர்வோர்-ஊழியர் முரண்பாடு குறித்த பல
வழக்குகளை துறைசார் விசாரணைகளில் நடத்தி
வருபவன். அதாவது domestic inquiryகளில். அந்த வகையில்
ஜெயமோகனின் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக
இருக்கிறது. எனவே அது குறித்து, எங்கள் ஊழியர்களுக்கு
customer friendlyஆக நடக்க வேண்டியதன் அவசியத்தை
உணர்த்தும் பொருட்டு இந்த விவகாரத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.
**
ஜெயமோகன் சிறந்த ஊழியராகவும் சிறந்த
தொழிற்சங்க முன்னோடியாகவும் இருந்தார் என்பதை
எவருமே மறுக்க முடியாது.
**
அவரின் தற்போதைய நிலைபாடுகள், தற்போதைய
அரசியல் குறித்து என் கட்டுரை அக்கறை கொள்ளவில்லை.
என் கட்டுரை அவரைப் பற்றிய மதிப்பீடு அல்ல;
மாறாக, அவர் முன்வைத்த நுகர்வோர்-ஊழியர் முரண்பாடு
குறித்த, இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
ஒரு பிரச்சினை குறித்த கட்டுரை. அவ்வளவே.  



முதலிலேயே எச்சரிக்கையாக ஊழியர்கள் நடந்து
கொள்வார்கள் என்றால், வழக்கில் இருந்து தப்பலாம்.
நாங்கள் கரடியாய்க் கத்தினாலும் சரி, ஊழியர்கள்
காதில் வாங்குவதே இல்லை. ஜெயமோகன் போன்ற
பிரபலங்கள் இப்போது விவகாரத்தை சந்திக்கு
இழுத்து விட்டார்கள். அவர் முன்வைத்த பிரச்சினை
குறித்து விவாதம் நடந்து இருக்க வேண்டும். ஆனால்
துரதிருஷ்ட வசமாக,  விஷயம் மாறிப்போய், ஜெயமோகன்
மீதான கண்டனமாக முடிந்து விட்டது. அதனால்

நஷ்டம் ஊழியர்களுக்குத்தான். ஏனெனில், ஊழியர்கள்
தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு
ஜெயமோகன் கட்டுரை மூலம் கிடைத்தது. ஆனால்
அது கருச் சிதைவு ஆகி விட்டது.

அவருடைய வேலை முடிந்து விட்டது!
என்னுடைய வேலை முடியவில்லை!!
-----------------------------------------------------------------------
நுகர்வோர் பாதிப்பு குறித்து தோழர் ஜெயமோகன்
ஒரு கட்டுரை எழுதினர். எதிர்ப்பு வந்ததும்
கட்டுரையை நீக்கி விட்டு அடுத்த வேலையைப்
பார்க்கப் போய் விட்டார். ஆனால் என்னுடைய
வேலை முடியவில்லை. இன்று பணிஓய்வு பெற்ற
பின்னரும், ஊழியர்களின் வழக்குகளை எடுத்து,
துறை சார் விசாரணைகளில் (domestic inquiries)
ஊழியர்களின் சார்பாக வாதாடி வருகிறேன்.
**
வேறு எவரையும் விட, அதிகமான வழக்குகளை எடுத்து
நடத்தியவன், நடத்தி வருகிறவன் என்ற முறையில்,
இன்றுள்ள நிலவரம் என்ன என்பதை ஊழியர்களுக்கு
எடுத்துச் சொல்லும் கடமை எனக்கு இருக்கிறது.
அதனால்தான் ஜெயமோகன் விவகாரம் குறித்து,
அதாவது நுகர்வோர்-ஊழியர் முரண்பாடு குறித்து,
நிறையக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். இது என்
வேலை. இது என் கடமை.
**

இந்தப் பின்குறிப்பை நீங்கள் படிக்கவில்லையா?
உங்களைப் போன்றவர்களுக்காகவே இதை
முன்னரே எழுதி உள்ளோம்.
**
பின்குறிப்பு-2: இந்தப் பதிவு ஜெயமோகனை
ஆதரிப்பதற்காக  எழுதப் பட்டதல்ல. அப்படிக்
கருதுவோர் தக்க மனநல மருத்துவரை நாடலாம்.
ஜெயமோகன் எழுப்பியுள்ள ஊழியர்-நுகர்வோர்
முரண்பாடு பற்றியும், அதை எப்படிக் கையாள்வது
என்பது பற்றியுமே இப்பதிவு.


காரல் மார்க்ஸ் கண்டு பிடித்த உபரி மதிப்பு என்பது
என் யோனி மயிருக்குச் சமம் என்று கவிதை எழுதிய
லீனா மணிமேகலை, அவரை ஆதரித்துக் கூட்டம்
போட்ட ராஜன் குறை, அ மார்க்ஸ் ஆகியோருக்கு
வால் பிடிப்பவர்களை என்ன சொல்வது?

தோழர் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
---------------------------------------------------------------------------
NFTE BSNL மாவட்டச் செயலாளராக இருந்தவன் என்ற
முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்ட வழக்குகளில்,
துறை சார் விசாரணையில் (Domestic inquiries)
ஊழியர்களுக்காக ஆஜராகி வாதாடி உள்ளேன்.
நுகர்வோர்-ஊழியர் தொடர்பான வழக்குகளில்
எல்லாம், நாம் எவ்வளவுதான் சிறப்பாக
வாதாடினாலும், நுகர்வோரை ஆதரித்தே
தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.
**
எனவேதான் ஊழியர்களிடம் customer friendlyயாக
நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை
என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
**
இந்த விஷயத்தில் கருத்துக் சொல்ல முழு
அருகதையும் உள்ள ஒருவன் நான் மட்டுமே என்று
என்னால் உரிமை கோர முடியும். ஏனெனில்,
அகில இந்தியாவிலும், BSNL நிறுவனத்தில்,
துறைசார் விசாரணைகளில் அதிகபட்சமான
வழக்குகளை எடுத்து நடத்தியவன் நான் ஒருவன்
மட்டுமே. இந்த உண்மை NFTE BSNL தொழிற்சங்கத்தில்
உள்ள அனைவருக்கும் தெரியும்.
**
எனவேதான், நுகர்வோர் உரிமைகள் குறித்து
அறியாமல், பழைய பாணியில் நடந்து கொள்ள
வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
இது என் கடமை.     
தோழர் ஜெயமோகன்!
-----------------------------------------
தோழர் ஜெயமோகன் மத்திய அரசின் தொலை தொடர்புத்
துறையிலும் பின்னர் BSNL நிறுவனத்திலும் 25 ஆண்டுகள்
பணியாற்றினார். அப்போது அவர் எங்களின் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கத்தில்,  NFTE BSNL  உறுப்பினராக இருந்தார்.
சங்க  முன்னோடியாகவும் இருந்தார். சங்கத்தில் பொறுப்பு
வகித்தார். அனைத்து வேலைநிறுத்தங்களிலும்
பங்கேற்றார். வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு கோரி
எங்களுடன் சேர்ந்து தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டார்.
**
ஒரு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமானது சக தொழிலாளியை
"தோழர்" என்று அழைப்பது உலகம் முழுவதும் உள்ள
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் நடைமுறை.
**
தொழிற்சங்கம் என்றால் என்னவென்றே தெரியாத
மூடர்களுக்கு இது வியப்பாக இருக்கலாம். அத்தகைய
இழிவான குட்டி முதலாளித்துவ அற்பப் பதர்களை
நினைத்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்.
ROFL! ROFL!
**
ஆனால் எங்கள் போன் மெக்கானிக்குகளும் ரெகுலர்
மஸ்தூர்களும் இன்டர்நெட் ஸ்லாங்குகளைப்
பயன்படுத்துவதில்லை. அவர்கள் கையில் உள்ள
இரும்பு ராடுகளைப் பயன்படுத்துவார்கள்.       
எழுதுகிறவர்களில் 99 சதம் பேர் இழிந்த சொற்களைப்
பயன்படுத்தி எழுதுவதில்லை. ஆனால் அப்படி
எழுதும் ஒரு சிலருக்கு, அவர்களின் பாணியிலேயே
பதில் கொடுக்க நேர்கிறது. சிக்மண்ட் ஃபிராய்டை
லெனின் புணர வேண்டும் என்று எழுதியவர் லீனா
மணிமேகலை. இவர்கள் எல்லாம் பின்நவீனத்துவக்
குழுவினர். அவர்களே நம் தாக்குதலின் இலக்கு.
எனவே மொழிநடை இப்படி அமைகிறது.
**
எவரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக
இவ்வாறு எழுதவில்லை. எம்முடைய இயல்பான
மொழிநடை உழைக்கும் மக்களுக்கானது என்பதை
அனைவரும் அறிவார்கள்.

நமது தாக்குதலின் இலக்கு: 1) ராஜன் குறை 2) அ மார்க்ஸ்
3) யமுனா ராஜேந்திரன் 4) பார்ப்பன ஞானி
5) லீனா மணிமேகலை 6) மற்றும் பல்வேறு
அமைப்புகளிலும் பதுங்கி வாழும் பின்நவீனத்துவர்கள்
7) அமைப்புசாரா பின்நவீனத்துவர்கள் ஆகியோரே.
இவர்களுக்குப் புரிகிற பாஷையில்தான் பேச வேண்டி
இருக்கிறது.
**
சொல்லின் செல்வர் இரா பி சேதுப்பிள்ளையின் நடையில்
பேசினால் இவர்களுக்குப் புரியாது.
  

அற்புதமான பதிவு. நல்ல பதிவு. இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.

   

சனி, 29 அக்டோபர், 2016

தீபாவளி நாளில் அலுவலகப் பணி!
-----------------------------------------------------------------
என்னுடைய நீண்ட அலுவலகப் பணியில்
28 ஆண்டுகள் தொடர்ச்சியாக தீபாவளியன்று
டியூட்டி பார்த்து இருக்கிறேன். ஒவ்வொரு
தீபாவளியிலும் டபிள் டியூட்டி. ஆக, 28 x 2=56 டியூட்டிகள்
பார்த்து இருக்கிறேன்.

02-08 டியூட்டியும் 07-15 டியூட்டியும் சேர்த்துப் பார்ப்பது,
அல்லது 07-15 and 14-21 சேர்த்துப் பார்ப்பது என்று
தீபாவளியன்று முழுவதும் அலுவலகத்தில்
டியூட்டியில் இருந்திருக்கிறேன். வாழ்க்கையின்
மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய தருணங்கள் அவை.

25 தீபாவளிகளை அலுவலகப் பணியில் நான்
நிறைவு செய்த பிறகு, அப்போது நான் பணியாற்றிய
SFMSS Control Roomஇல் நண்பர்களும் சக ஊழியர்களும்
எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். தோழர் எஸ் வெங்கடராமன் விழாவை முன்னின்று நடத்தினார்.
அப்போதைய எங்கள் GM திரு K G சசிதரன் அவர்கள்
என்னைப் பாராட்டிப் பேசினார்.

எத்தனையோ பாராட்டு விழாக்களைச் சந்தித்தவன்
நான்.  அவற்றில் பல இன்று எனக்கு மறந்தே போய்
விட்டன. அனால், இந்தப் பாராட்டு விழா எனக்கு
இன்றும் பசுமையாக நினைவு இருக்கிறது.

தற்போது பணி ஓய்வுக்குப்பின் டியூட்டி பார்க்க
வழியில்லை. இது மிகுந்த சோகத்தைத் தருகிறது.
சற்று நெகிழ்ந்தால் அழுகை வந்து விடும்
போலிருக்கிறது.

டியூட்டி பார்ப்பதுதான் நிறைவைத் தருகிறது.
ஓய்வு வருத்தத்தைத் தான் தருகிறது.
***************************************************************
மீள்பதிவு 2016 அக்டோபர்
======================================================  
குட்டி முதலாளித்துவ ஆண்குறிகளின் நீளமும்
தோழர் ஜெயமோகன் மீதான வன்மமும்!
-------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், சென்னை,
NFTE BSNL (BSNL தொழிற்சங்கம்)
-------------------------------------------------------------------------------------
கட்டக் கடைசியில் தோழர் ஜெயமோகன் மன்னிப்புக்
கேட்டு விட்டார். குட்டி முதலாளித்துவ அற்பர்களின்
உலகில் ஒரே குதூஹலம்! வில்லை ஓடித்தவன்
ராமன்தான் என்று தெரிந்ததுமே, சீதையின் அல்குல்
வளர்ந்து விட்டது என்று வர்ணிப்பார் கம்பர்.

"ஆம் அவனே கொல் என்று ஐயம் நீங்கினாள்
வாம மேகலை இற வளர்ந்தது அல்குலே."

அதைப்போல, ஜெயமோகன் மன்னிப்புக் கேட்ட
அடுத்த நொடியிலேயே,  சில குட்டி முதலாளித்துவப்
பேராசிரியர்களின் ஆண்குறி சில மைக்ரோ மீட்டர்கள்
நீளம் வளர்ந்து விட்டதாம். இந்தத் தீபாவளியில் எனக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூத்தாடுகிறாராம்
புதுடில்லிவாழ் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.
(dl = increase in length = say 5 micrometer).

இங்கு சென்னையிலோ, கிறித்துவ விசுவாசியான
பேராசிரியர் அ மார்க்ஸ், மனசைக் கல்லாக்கிக் கொண்டு, இந்துவாக மதம் மாறி, (மானசீகமாகத்தான்)
ஒரு சிறுவனின் தீபாவளி உற்சாகத்தோடு, சரவெடி
வெடித்துக் கொண்டிருக்கிறார். (dl = say 4 micrometer)

மேலும், எழுத்தாளரென உரிமை கோரும் யமுனா
ராஜேந்திரன், ஓரினச் சேர்க்கை ஆதரவாளரான
சவுண்டி ஞானி சங்கரன், சீழ் பிடித்த தமுஎகச
வகையறாக்களில் சிலர், எந்த அமைப்பிலும்
சேராத, ஒருநாளும் சேரப்போவதில்லை என்ற
முடிவுடன் இருக்கும் சிறிய புகழுடைய சில பல
குட்டி முதலாளித்துவர்கள்  என்று அனைத்து ரக
குட்டி முதலாளித்துவ அற்பர்களும், ஜெயமோகன்
எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டி, ஜெயமோகனின்
மன்னிப்பால் வண்ண மயமான இந்தத் தீபாவளியை
புது மாப்பிள்ளைகளின் தலை தீபாவளி உற்சாகத்துடன்
கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
("சிறிய புகழுடைய" என்ற தொடர் மனுஷ்ய புத்திரனின்
ஒரு கவிதையில் இருந்து எடுக்கப் பட்டது, நன்றி.)

ஊழியர் நுகர்வோர் முரண்பாடு!
-----------------------------------------------------------
தோழர் ஜெயமோகன் தொடர்பிலான இந்த நிகழ்வில்,
ஒட்டு மொத்த விவகாரமும் ஊழியர்-நுகர்வோர்
முரண்பாடு பற்றியதே. இந்த முரண்பாடு இன்று
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த முரண்பாட்டை
எப்படிக் கையாள்வது என்பதே நாம் தீர்வு கண்டாக
வேண்டிய பிரச்சினை.

ஒரு சாதாரண நுகர்வோராக (consumer) வங்கி சேவையில்
உள்ள குறைபாட்டால் தனக்கு ஏற்பட்ட மனக் குமுறலை
வெளிப்படுத்தி இருந்தார் ஜெயமோகன். ஒரு
நுகர்வோராக அவருக்கு உள்ள சட்ட பூர்வமான
அடிப்படை உரிமை அது. இதில் என்ன தவறு?

ஜெயமோகன் சொன்னாரா அல்லது ஜெயலலிதா
சொன்னாரா என்பது இங்கு பிரச்சினையே அல்ல.
சொல்லப்பட்ட விஷயம் என்ன என்பதுதான் பிரச்சினை.
நாடு முழுவதும்  உள்ள அரசுத்துறை, பொதுத்துறை
நிறுவனங்களில் நிலவும் வேலைக் கலாச்சாரம்
வாடிக்கையாளரிடம் பரிவு காட்டுவதாக இல்லை
(not customer-friendly) என்பதுதான் இங்கு பிரச்சினை.

ஜெயமோகனுக்கு நிகழ்ந்த அந்த அனுபவம்
அபூர்வமானதல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
அலுவலகத்திலும், பரிதாபத்துக்கு உரிய
வாடிக்கையாளர்கள் நாளும் சந்தித்து வரும்
சோகம்தான் அது. பூனைக்கு யார் மணி கட்டுவது
என்ற நிலையில், ஜெயமோகன் மணி கட்டி விட்டார்.

அவ்வளவுதான். 24 மணி நேரமும் அரசு ஊழியர்களைக்
கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் அத்தனை
குட்டி முதலாளித்துவக் காடையர்களும் ஒரே இரவில்
அரசு ஊழியர் ஆதரவுப்  போராளிகளாக அவதாரம்
எடுத்து, தோழர் ஜெயமோகன் மீது பாய்ந்து பிராண்டி
தங்களின் சிரங்கு அரிப்பைத் தீர்த்தனர்.

இவ்வாறு அரிப்புத் தீர்த்தவர்கள் மேற்குறித்த வங்கி
ஊழியரால் பாதிக்கப் படாதவர்கள். ஜெயமோகனோ
பாதிக்கப் பட்டவர். பாதிப்புக்கு உள்ளான கோபத்தில்,
அந்த ஊழியரை அவர் திட்டுவது இயற்கையே. இது
புரிந்து கொள்ளத் தக்கதே. ஜெயமோகனை வசை
பாடுபவர்கள், இதே போன்ற பாதிப்புக்கு தாங்கள்
இலக்கானால், எப்படி நடந்து கொள்வார்கள்?

பகவத் கீதையில் கூறப்படுகிற "ஸ்திதப் பிரக்ஞன்"
போல நடந்து கொள்வார்களா? நிச்சயமாக இல்லை.
அவர்களும் ஜெயமோகன் போல்தான் நடந்து
கொள்வார்கள். எனவே பாதிக்கப் பட்டவனின்
பார்வையில் இருந்துதான் விஷயத்தைப் பார்க்க
வேண்டுமே தவிர, எவ்வித பாதிப்புக்கும் இலக்கு
ஆகாத வழிப்போக்கனின் பார்வையில் இருந்தல்ல.

நுகர்வோர் சதைப் பிண்டங்கள் அல்ல!
--------------------------------------------------------------------------
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில்
1986இல்தான் இயற்றப்பட்டது (Consumer Protection Act 1986).
இச்சட்டத்தின்படி, மூன்று அடுக்குகளைக் கொண்ட
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நுகர்வோர்
பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப் பட்டன.

அதற்கு முன்பு, நுகர்வோர் என்பவர்கள் எந்த
உரிமையும் அற்ற சதைப் பிண்டங்களாகவே
நடத்தப்பட்டு வந்தார்கள். இன்று இந்த
30 ஆண்டுகளில் நுகர்வோர் விழிப்புணர்வு பெரிதும்
வளர்ந்துள்ளது. ஊழியர்கள் இதை உணராமல்
பணியாற்றுவது நியாயம் ஆகுமா?

கவுன்டருக்கு உள்ளே இருப்பதால் ஒரு ஊழியர்
கடவுளாகி விட மாட்டார். கவுன்டருக்கு வெளியே
கால் கடுக்க நிற்பவர்கள் மனிதக் குரங்குகள்
ஆகி விட மாட்டார்கள்.

மெதுவாக வேலை செய்பவர்கள், உடல் நலிவுற்றவர்கள்
அதற்கேற்ற சீட்டைத்  தெரிவு செய்ய வேண்டும்.
கவுன்டர் பணி என்பது செயல்பாட்டின் அதிகபட்ச
வேகத்தைக் கோருவது. ஒரு ஊழியர் தனக்கு
உடம்பு சுகமில்லை என்பதற்காக,
வாடிக்கையாளர்களைக் காக்க வைப்பதோ
கஷ்டப் படுத்துவதோ நியாயமல்ல.  

"நுகர்வோரே எஜமானர்கள்" என்பதுதான் எந்த ஒரு
நிறுவனமும் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலைபாடு.
ஒவ்வொரு BSNL கவுன்டரிலும், மகாத்மா காந்தியின்
"The customer is an important visitor in our premises" என்று தொடங்கும்
வாசகங்கள் அடங்கிய பலகை சுவரில் மாட்டப்பட்டு
இருக்கும். ஊழியர்கள் அதன்படி நடக்க வேண்டும்
அல்லவா? நடக்கிறார்களா?

ஜெயமோகனின் ஆசனத் துவாரத்தில் சில நாவுகள்!
----------------------------------------------------------------------------------------------
ஜெயமோகன் தொடர்புடைய இந்த நிகழ்வில்
விஸ்வரூபம் எடுத்து நிற்பது நுகர்வோர் உரிமை
என்ற விஷயம்தான். ஆனால் மெத்தப் படித்த
மேதாவிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டு
சுயஇன்பம் அடையும் 1) ராஜன் குறை 2) அ மார்க்ஸ்
3) யமுனா ராஜேந்திரன் 4) சவுண்டி ஞானி
வகையறாக்களின் மண்டையில் மட்டும் இந்த
விஷயம் ஏறவே மாட்டேன் என்கிறது.

அதற்குக் காரணம் அவர்கள் எப்போதுமே
ஜெயமோகனின் ஆசனத் துவாரத்தில் தங்கள்
நாவுகளை வைத்துக் கொண்டு ஏதாவது கழிவு
கிடைக்குமா என்று காத்துக் கிடப்பதுதான். பாவம்,
ஜெயமோகனுக்கு மலச்சிக்கல் உள்ள நாட்களில்
இவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

ஆண்குறி சிறிது வளர்ந்து விட்டதால் புளகாங்கிதம்
அடைந்த பேராசிரியர் ராஜன் குறை திடீரென
மார்க்சிய அவதாரம் எடுத்து விட்டார். தீபாவளி
கொண்டாடப் போகிறேன் என்று பகிரங்கமாக
அறிவித்து தீபாவளி கொண்டாடும் "மார்க்சிஸ்ட்"(!)
அநேகமாக இவராகத் தான் இருக்கும்!

"இதை எல்லாமா விவஸ்தை இல்லாமல் வெளியில்
சொல்லுவார்" என்று அலுத்துக் கொள்கின்றனர்
ஆண்டுதோறும்த ரகசியமாக தீபாவளி கொண்டாடும்
தமுஎகச புரட்சிகள்.

மார்க்சிய மேதாவியின் கேள்வி!
-----------------------------------------------------------
மெதுவாக வேலை செய்வதற்கும் சோஷலிசத்திற்கும்
என்ன சம்பந்தம் என்று அப்பாவித் தனமாகக்
கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் ராஜன் குறை.

உழைப்பு, உழைப்புச் சக்தி, வேலைநேரம் ஆகியவற்றை
எல்லாம் கறாராகவும் துல்லியமாகவும் ஆராய்ந்து,
'உபரி மதிப்பு'  என்னும் கோட்பாட்டை வகுத்தார் காரல்
மார்க்ஸ். அவர் உழைப்புச் சக்தி என்று கணக்கில்
கொண்டது சராசரியான உழைப்புச் சக்தியே தவிர,
சராசரிக்கும் வெகு கீழான உழைப்புச் சக்தியை அல்ல.

உதாரணமாக, ஒரு மணி நேரத்தில், சில பெட்டிகளுக்கு
ஆணி அடிக்க வேண்டும் என்றால், சிலரால் 150
பெட்டிகளுக்கு ஆணி அடிக்க முடியும்; மந்தமாக
வேலை செய்யும் சிலரால் 50 பெட்டிகளுக்கு மட்டுமே
ஆணி அடிக்க முடியும். இங்கு சராசரியான 100
பெட்டிகளுக்கு ஆணி அடிப்பதையே காரல் மார்க்ஸ்
எடுத்துக் கொண்டார்.

சோவியத் சோஷலிச வேலைக் கலாச்சாரம்!
---------------------------------------------------------------------------------
சோவியத் ஒன்றியத்தில் புரட்சியின் வெற்றிக்குப்
பின்னர், ஆலைகளில் எத்தகைய வேலைக்
கலாச்சாரத்தை லெனின் செயல்படுத்தினார் என்பதை
மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். சுபோத்னிக்குகள்
பற்றியும் மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். ஆனால்
குட்டி முதலாளித்துவச் சுய இன்பவாதியான
ராஜன் குறை இதை அறிய மாட்டார்.

"காரல் மார்க்ஸ் கண்டு பிடித்த உபரி மதிப்பு
என்பது என் யோனி மயிருக்குச் சமம்" என்று
கவிதை எழுதிய மேட்டுக்குடிப் பெண்ணிய
விகாரம் லீனா மணிமேகலை என்ற அசிங்கத்தின்
கூட்டாளி இவர். கவிதை என்ற பெயரில் மார்க்ஸை
அவமதித்த லீனாவுக்குக் கண்டனங்கள் பெருகின.
அப்போது லீனாவை ஆதரித்துக் கூட்டம்
நடத்தியவர்கள் ராஜன் குறையும் அ மார்க்சும்.
இதுதான் இவர்களின் மார்க்சிய அருகதை!

சுலபமான இலக்குகள் மட்டும்!
--------------------------------------------------------
குட்டி முதலாளித்துவக் கோழைகள் எப்போதுமே
சுலபமான இலக்குகளை (soft targets) மட்டுமே
வரித்துக் கொள்வார்கள். 1) மகாத்மா காந்தி
2) கலைஞர் கருணாநிதி 3) ஜெயமோகன்
ஆகியோர் இக்கோழைகளின் தாக்குதலுக்கு
அடிக்கடி இலக்காவார்கள். இதே ஜெயமோகன்
ஒரு நாடார் ஆகவோ முக்குலத்தோர் ஆகவோ
இருந்திருந்தால், இந்த கு.மு கோழைகள் எப்படி
எல்லாம் பதுங்குவார்கள் என்பது அனைவரும்
அறிந்ததே.

கலைஞர் உயிருடன் இருக்கும்போதே அவர் சாக
வேண்டும் என்று முகநூலில் கலைஞரின்
சுவரிலேயே சென்று பதிவு போடுகிறான் கு.மு
கோழை. இதே போல் ஒரே ஒரு பதிவை, வேறு
எந்தத் தலைவரின் முகநூல் சுவரிலாவது போட
முடியுமா?   

எழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் அறிவுறுத்தியதன்
பேரில் ஜெயமோகன் தம் பதிவை நீக்கி விட்டார்
என்பது செய்தி. ஜெயமோகனும் சரி, பிஏகேவும்
சரி, புத்திசாலிகள். கு.மு கோழைகள் அனைவரும்
ஒன்று திரண்டு, தங்கள் கழிவுகளைக் கையில்
எடுத்துக் கொண்டு, வீச வரும்போது, அந்த முழு
மூடர்களுடன் சரிக்குச் சரி மல்லுக்கு நிற்பது
விவேகம் அல்ல என்று இருவருமே உணர்ந்து
இருந்தனர்.

ஜெயமோகன் எழுதிய இப்பதிவை, பி ஏ கிருஷ்ணன்
எழுதி இருந்தால், எந்த நாயாவது குரைத்து
இருக்குமா? ஏனெனில், மெல்லிய குரைப்பு முயற்சிக்கே
பி.ஏ.கிருஷ்ணன் வழக்குப் போட்டு சிறைக்குள்
தள்ளி விடுவார் என்பது கு.மு கோழைகளுக்குத்
தெரியும்.

இறுதியாக, ஊழியர்-நுகர்வோர் முரண்பாட்டைத்
தீர்க்க வல்ல ஒரே வழி, ஊழியர்கள் நுகர்வோரை
அனுசரித்துப் போவதுதான். எங்களின் தொழிற்சங்க
அனுபவங்கள், நாங்கள் எதிர்கொண்ட ஊழியர் மீதான
துறை விசாரணைகள், வழக்குகள் அவற்றில்
வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் ஆகியவை  இதைத்தான்
சுட்டிக் காட்டுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: இந்தப் பதிவில் vulgarity இருக்கிறது என்று
வாசகர்கள் கருதினால், அதற்கு அவர்கள் லீனா
மணிமேகலைக்கே நன்றி சொல்ல வேண்டும்.

பின்குறிப்பு-2: இந்தப் பதிவு ஜெயமோகனை
ஆதரிப்பதற்காக  எழுதப் பட்டதல்ல. அப்படிக்
கருதுவோர் தக்க மனநல மருத்துவரை நாடலாம்.
ஜெயமோகன் எழுப்பியுள்ள ஊழியர்-நுகர்வோர்
முரண்பாடு பற்றியும், அதை எப்படிக் கையாள்வது
என்பது பற்றியுமே இப்பதிவு.

பின்குறிப்பு-3: ஓரளவு குறிப்பிடத்தக்க IQ உள்ள
வாசகர்களை மனதில் கொண்டு இக்கட்டுரை எழுதப்
பட்டுள்ளது. பிறழ் புரிதலைத் தவிர்க்க, IQ குறைந்த
ஏனையோர் இக்கட்டுரையைப் படிப்பதைத் தவிர்த்து
விடுவது நல்லது.
**************************************************************





ஊழியர்-நுகர்வோர் முரண்பாட்டின் விஸ்வரூபம்!
-----------------------------------------------------------------------------------------
அருள்கூர்ந்து கள நிலைமைகள் (ground realities) எப்படி
இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு பேசுமாறு
வேண்டுகிறேன். ஜெயமோகன் குறிப்பிட்ட  ஒரே ஒரு
செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவது
சரியல்ல. இன்று இந்த 2016இல் நுகர்வோர் விழிப்புணர்வு
கணிசமாக வளர்ந்து நிற்கிறது.
**
தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை
மதிக்கின்றன, வாடிக்கையாளர் சேவையில்
முன்னணியில் இருக்கின்றன என்பது மக்களிடம்
நிலவும் கருத்து. இது எவ்வளவு தூரம் உண்மை
என்பது வேறு. எனவே பொதுத்துறை வங்கிகளிடம்,
BSNL, அஞ்சல் துறைகளிடம் மக்கள் நிரம்ப
எதிர்பார்க்கிறார்கள்.
**
சென்னை நகரில் உள்ள 63 BSNL CSCகளில்
(CSC Customer Service Center) தினசரி வாடிக்கையாளர்கள்
வந்து சண்டை போடுகிறார்கள். இது போன்ற
நிகழ்வுகளை ஆயிரக் கணக்கில் பார்த்து
வருபவர்கள் நாங்கள்.
**
சில ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு SSAவில்,
(SSA Secondary Switching Area) ஒரு BSNL JE பெண்மணியை,
ஊர்க்காரர்கள் எக்சேஞ்சில் வைத்துப் பூட்டி
விட்டனர். இன்று குதிக்கும் போராளிகள்
அன்று எங்கே போய் இருந்தனர்?
**      
எனவே நிர்வாகமும் சரி, தொழிற்சங்கமும் சரி,
ஊழியர்களிடம் ஒரே ஒரு விஷயத்தைத்தான்
வலியுறுத்தி வருகிறோம். Public dealings சீட்டுகளில்,
குறிப்பாக, பணம் செலுத்தும் கவுன்டர்களில்
பணியாற்றும் ஊழியர்கள் கூடுதல் திறனுடன்
வேலை செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறோம். நுகர்வோரை அலட்சியமாக
நடத்துவது தொழிலாளி வர்க்கப் பண்பு அல்ல.
**
இங்கு ஒட்டுமொத்த விவகாரமும் நுகர்வோர்-ஊழியர்
முரண்பாடு என்ற விஷயம்தான். அதை எப்படிக்
கையாள்வது என்பது பற்றித்தான் நாங்கள்
அக்கறை கொள்கிறோம். ஜெயமோகனிடம்
கனக்குத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்
எழுதப்படும் கருத்துக்கள் எங்களின் அக்கறைக்கு
உரியன அல்ல. அவற்றை நாங்கள் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறோம்.

      
மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையில்
ஒரு அத்துக் கூலியாக (Daily wages) வேலைக்குச்
சேர்ந்தவர் தோழர் ஜெயமோகன். அவர் நாகர்கோவில்
SSAவில் Senior Telecom Operating Assistant (General) ஆகப்
பணியாற்றினார். அவர் டெலிபோன் பில் கவுன்டரில்
வேலை செய்ததை நான் அறிந்தவன்; கண்ணால்
பார்த்தவன். ஒரு டெலிகாம் அசிஸ்டன்ட் என்ற
முறையில், அவர் ஒரு சிறந்த ஊழியராக இருந்தார்
என்பது வரலாறு.
**
தோழர் ஜெயமோகன் நன்றாக வேலை செய்தாரா
இல்லையா என்பதற்கு தெருவில் போகிற குப்பனும்
சுப்பனும் சான்றிதழ் வழங்க முடியாது. நாங்கள்தான்
அதற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரமும்
உரிமையும் படைத்தவர்கள். ஜெயமோகனின்
சர்வீஸ் போக்கில், adverse entries ஆக இருந்தவை,
அவர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற நாட்களே
தவிர, வேறு எதுவும் அல்ல.
**
தங்களின் சீழ் பிடித்த குட்டி முதலாளித்துவ மன
வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள்
ஜெயமோகனின் வேலைத் திறன் குறித்து
சான்றிதழ் வழங்க முற்படுவது கயமையிலும் கயமை ஆகும்.  
நுகர்வோரின் குரல்வளையை நெரிக்கும் போக்கும்
ஒரு நுகர்வோராக தன் குமுறலை
வெளிப்படுத்திய ஜெயமோகனும்!
----------------------------------------------------------------------------------------------------
நுகர்வோர் உரிமை பற்றிய வரலாறு!
1986க்கு முன் நுகர்வோருக்கு உரிமை கிடையாது!
====================================================
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில்
1986இல்தான் இயற்றப்பட்டது (Consumer Protection Act 1986).
இச்சட்டத்தின்படி, மூன்று அடுக்குகளைக் கொண்ட
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நுகர்வோர்
பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப் பட்டன.
அதற்கு முன்பு, நுகர்வோர் என்பவர்கள் எந்த
உரிமையும் அற்ற சதைப் பிண்டங்களாகவே
நடத்தப்பட்டு வந்தார்கள்.

ஆரம்பத்தில், உற்பத்திப் பொருட்கள் (products) மட்டுமே
இச்சட்டத்தின் வரம்பில் கொண்டு வரப்பட்டு இருந்தன.
பின்னர், பல்வேறு சேவைகள், வங்கிச் சேவை,
டெலிகாம் சேவை  உள்ளிட்டு இச்சட்டத்தின்
வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, நுகர்வோர்
உரிமைகள் அங்கீகரிக்கப் பட்டன.

1990களில் டெலிகாம் சேவை நுகர்வோர் பாதுகாப்பு
வளையத்திற்குள் கொண்டுவரப் பட்டபோது,
அதற்கான ஒப்பந்தத்தில் அன்றைய டெலிகாம்
தொழிற்சங்கம் கையெழுத்திட்டது. இது நாடு
முழுவதும் ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியது. வாயில் கூட்டங்களில் ஊழியர்கள்
தொழிற்சங்கத் தலைவர்களை எதிர்த்து கண்டன
கோஷங்கள் எழுப்பினர்.

தந்திப் பகுதியில் ஊழியர்களின் கொந்தளிப்பு
அதிகமாக இருந்தது. இந்தியத் தந்திச் சட்டம்
(Indian Telegraph Act  1885) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்
இயற்றப் பட்டது. அச்சட்டம், "தந்திகளின் துல்லியத்திற்கு
உத்தரவாதம் கிடையாது" (accuracy of telegrams is NOT guaranteed)
என்று அறிவித்து இருந்தது.

அதாவது, "சுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது" என்று
ஒருவர் தந்தி கொடுத்து, " சுமதிக்கு பெண்
குழந்தை பிறந்தது" என்று அந்தத் தந்தி போய்ச்
சேருமானால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எந்த
இழப்பீட்டையும் கோர முடியாது.

நுகர்வோர் சட்டம் வந்த பின்னால், பாதிப்புக்கு
உள்ளான நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
என்றும், அந்த இழப்பீடு தவறு செய்த ஊழியரின்
சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்
என்றும் நிலைமை மாறியது. இது ஊழியர்களிடம்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதே போன்று
வங்கிச் சேவையில் குறைபாடு இருந்தால்,
தவறிழைத்த வங்கி ஊழியரின் சம்பளத்தில்
இருந்து நுகர்வோருக்கான இழப்பீடு பிடித்தம்
செய்யப்படும் என்று சட்டம் வந்தது.

இவ்வாறு நுகர்வோருக்கான இழப்பீடு வழங்கும்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  டெலிகாம், வங்கி
ஊழியர்களின் சங்கங்களான NFTE, AIBEA ஆகியவையும்
இச்சங்கங்களின் பொதுச் செயலர்களான தோழர்கள்
ஓ.பி. குப்தா, வெங்கடாச்சலம் ஆகியோரும்
ஊழியர்களின் கண்டனங்களைச் சந்தித்தனர்.
ஆயினும், சமூகப் பொறுப்புடைய ஒரு தொழிற்சங்கம்
ஊழியர்களையும் நுகர்வோரையும் சமமாகக்
கருதல் வேண்டும் என்ற புரிதலை தொழிற்சங்கப்
பொறுப்பாளர்களான நாங்கள் எல்லாம் ஊழியர்களிடம் ஏற்படுத்தினோம்.

இந்த வரலாற்றை இவ்வளவு விஸ்தாரமாகச் சொல்வதன்
காரணம், நுகர்வோர் உரிமைகள் பற்றிய ஒரு
அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தும் பொருட்டே. நிற்க.

தற்போது, ஜெயமோகன் தொடர்பிலான நிகழ்வில்,
ஒரு வங்கிச் சேவை நுகர்வோரான ஜெயமோகன்
தமக்கு வங்கி வழங்கிய சேவையில் உள்ள
குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, தமது குமுறலை
வெளிப்படுத்துகிறார். இதற்கு அவருக்கு நூறு சதம்
உரிமை உண்டு. இது சட்டப்படியானது.

நோய் மனங்களே இதில் குறை காண முடியும்.
நுகர்வோர் உரிமை குறித்த எந்தப் புரிதலும் அற்றவர்களே
தற்குறிகளே இதில் குறை காண முடியும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL (BSNL தொழிற்சங்கம்), சென்னை.
*************************************************************

வரும்; நிச்சயமாக வரும். ஏனெனில் அது "குமுறல்".
இங்கு பயன்படுத்தப் பட்டுள்ள "குமுறல்" என்ற
சொல்லாட்சியைக் கவனிக்கவும். ஒரு தொழிற்சங்கத்
தலைவராக, நுகர்வோர் பாதிப்பு குறித்த கணக்கற்ற
வழக்குகளில், ஊழியர்களின் சார்பாக, துறை சார்ந்த
விசாரணைகளில் (domestic inquiries) வாதாடி இருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் பல நிகழ்வுகளில்,
ஊழியர்களை இழிவாகத் திட்டியது உண்டு. ஆனால்,
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அவை பற்றி அக்கறை
கொள்வதில்லை.    

      

அடுத்து, "பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே
மோசமானது மாதிரி" என்று தோழர் ஜெயமோகன்
எழுதவில்லை. அது உங்கள் கற்பனை. அவர் ஒரு
பொதுத்துறையில் பணியாற்றியவர். பொதுத்துறைகள்
பற்றி நன்கு அறிந்தவர். பொதுத்துறையில் பணியாற்றிய
நாங்கள் அனைவரும் எங்கள் குறை-நிறைகளை நன்கறிவோம்.
எனவே, தோழர் ஜெயமோகன் சொல்லாததைச்
சொன்னதாகக் கூற வேண்டாம்.

ஒரு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் 25 ஆண்டு காலம்
பணியாற்றி, தொழிற்சங்க முன்னோடியாக இருந்து,
நடைபெற்ற அனைத்து வேலைநிறுத்தங்களிலும்
உணர்வு பூர்வமாகப் பங்கேற்று, வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவு தேடிப் பல கூட்டங்களில் பேசிய தோழர்
ஜெயமோகனை நாங்கள் அறிவோம். ஒரு தொழிற்சங்க முன்னோடியாக, அவரது track record போற்றுதலுக்கு உரியது.
அது குறித்து சான்றிதழ் வழங்க வேண்டியது நாங்களே
தவிர, மற்றவர்கள் அல்ல.
**
உலகப் புரட்சி பேசிய சிலர் கருங்காலிச் சங்கமான
INTUCயில் அடைக்கலமான போது, தோழர் ஜெயமோகன்
உறுதியாக எங்களுடன் (NFTE BSNL) நின்றார். அவர் எங்கள்
சங்கத்தின் தூண்களில் ஒருவராக இருந்தார் என்பது வரலாறு.


குட்டி முதலாளித்துவக் காடையர்கள் வன்மத்துடனும்
வெறியுடன் தங்களின் சீழ் பிடித்த வக்கிரத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களோடு சரிக்குச் சரியாக
மல்லுக்கு நிற்பது மூடத்தனம் என்பதால், தோழர்
ஜெயமோகன் மன்னிப்புக் கோரி, புத்திசாலித் தனமாக
இந்த விவகாரத்தை முடித்துக் கொண்டிருக்கலாம்.
நாங்கள் அக்கறை காட்டுவது ஜெயமோகன் என்ற
தனிநபர் மீதல்ல. அவர் எழுப்பிய ஒரு பிரச்சினை மீது.
எனவே தோழர் ஜெயமோகன் பிரச்சினையை முடித்துக்
கொண்ட பிறகும் இதை வளர்த்தக் கூடாது என்று
எவர் ஒருவரும் எங்கள் தொழிற்சங்கத்திற்குக் கட்டளை
இட  முடியாது.

திரு சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
தாங்கள் குட்டி முதலாளித்துவ நிலையில் இருந்து கொண்டு
இந்த விஷயத்தைப் பார்க்கிறீர்கள்; நாங்கள் பாட்டாளி
வர்க்க நிலையில் நின்று கொண்டு பார்க்கிறோம்.
எனவே இவ்விரு பார்வைகளிலும் பாரதூரமான
வேறுபாடு இருப்பது நியாயமே. இருவேறு உலகத்து
இயற்கை என்கிறார் வள்ளுவர்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

குட்டி முதலாளித்துவத்தின் பாஷை வேறு!
பாட்டாளி வர்க்கத்தின் பாஷை வேறு!!
------------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகள் தொழிலாளி
வர்க்கத்தின் பாஷையைப் புரிந்து கொள்வதில்லை.
அவர்கள் எப்போதுமே தொழிலாளர்கள் பேசுவதை,
இளக்காரமாகப் பார்க்கிறவர்கள். தொழிலாளர்களின்
பாஷையில் இடக்கர் அடக்கல் கிடையாது. unparliamentary
words என்று இந்த மேட்டுக்குடிச் சீமான்கள் அருவருக்கும்
சொற்களை எங்கள் போன் மெக்கானிக்குகளும் ரெகுலர்
மஸ்தூர்களும் இயல்பாகப் பேசுவார்கள், நான் உட்பட.
**
தோழர் ஜெயமோகன் டெலிகாம் அசிஸ்டன்ட்டாகப்
பணியாற்றியவர். அவர் ஒன்றும் unparliamentary ஆகப்
பேசிவிடவில்லை. இதுவே எங்கள் போன் மெக்கானிக்காக
இருந்தால், அவர் இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தும்
வார்த்தையே வேறுதான்.
**
எனவே தோழர் ஜெயமோகன் தனிமனிதத் தாக்குதலில்
ஈடுபடுகிறார் என்றோ தரக் குறைவாக எழுதி இருக்கிறார்
என்றோ கூறுவதைப் பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில்
ஏற்க இயலாது. தோழர் ஜெயமோகனின் கண்டனம்
எவருக்கேனும் தரக் குறைவாகத் தெரிகிறது என்றால்,
சந்தேகமே இல்லை, அவர் ஒரு குட்டி முதலாளித்துவ
அற்பர்தான்!
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
NFTE BSNL தொழிற்சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர்
சென்னை.

டி.வி.எஸ் சோமு


வீடியோவில் காட்டப்பட்ட பெண்மணி யார் என்று
துப்பறிந்து கண்டுபிடித்து, அதன் பிறகு கருத்துச்
சொல்லும் குட்டி முதலாளித்துவ நடைமுறை
NFTE BSNL தொழிற்சங்கத்தில் இல்லை. நிற்க.
**
இங்கு அந்தப் பெண்மணி ஒரு குறியீடு மட்டுமே.
குறியீடு என்பதன் பொருள் தெரியாமலேயே தொடர்ந்து
உரையாடுவதால் எப்பயனும் இல்லை.
"பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்" என்கிறார் வள்ளுவர்.
**
அந்தப் பெண்மணியைப் போல ஆயிரம்
பெண்மணிகளும் ஆண்களும் களத்தில்,
கவுன்டரில் பணி புரிந்து மக்களுக்குத் தொல்லை
கொடுத்து வருகிறார்கள்.
**
வங்கியின் கவுன்டர் (counter) பணி என்பது செய்கையின்
வேகத்தை (velocity of action) அதிகபட்ச அளவில் கோருவது.
அங்கு ஆமை வேகம் அனுமதிக்க முடியாதது.
கண்டனத்திற்கு உள்ளாகும். இது இயற்கையே.
இதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இதைப்
புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து பேசுவதால்
யாருக்கும் பயன் இல்லை.
**
உடம்பு சரியில்லை என்றால் VRSஇல் போக வேண்டும்.
அல்லது, வாடிக்கையாளர்களோடு நேரடித் தொடர்பு
இல்லாத, வேறு ஒரு சீட்டில், உதாரணம்: DESK WORK ,
வேலை செய்ய வேண்டும். SENSITIVE SEATஇல் போய்
உட்கார்ந்து கொண்டு, வாடிக்கையாளர்களின்
தாலியை அறுக்கக் கூடாது. இதெல்லாம் சாதாரணமான
காமன் சென்ஸ். இது கூட இல்லாமல்,
வாடிக்கையாளர்களுக்குத்  தொல்லை கொடுத்தால்
அதைக் கண்டிப்பது இயற்கையே. எனவே இதை
ஜெயமோகன் கண்டித்ததில் எந்தத் தவறும் இல்லை.
**

           
மத்திய அரசின் தொலை தொடர்புத் துறையிலும்
இன்றைய BSNL நிறுவனத்திலும் ஆண்டுதோறும்
சிறந்த முறையில் வேலை செய்யும் ஊழியர்களைத்
தெரிவு செய்து விருது கொடுத்து கெளரவிக்கிறார்கள்.
சஞ்சார் ஸ்ரீ, சஞ்சார் சாரதி, சஞ்சார் தூத் என்று
பல விதமான விருதுகள் உண்டு. ஊழியர்களின்
பல்வேறு கேடர்களுக்கும் கிடைக்கும் விதமாக,
அதிகாரிகளுக்கும் கிடைப்பதாக இவ்விருதுகள்
வழங்கப் படுகின்றன.
**
மாவட்ட அளவில், மாநில அளவில், அகில இந்திய
அளவில் என்று மூன்று மட்டங்களில் ஆண்டுதோறும்
விருதுகள் தொடர்ந்து வழங்கப் படுகின்றன.
**
வெள்ளம், புயல் பாதிப்புக்குப் பிறகு, பழுதுபட்ட
இணைப்புகளை விரைவாகச் சரிபார்த்துக் கொடுக்கும்
ஊழியர்களுக்கு APPRECIATION Certificate வழங்கப் படுவதும்
BSNL இல் உண்டு. 
சில ஆண்டுகளுக்கு முன்பு, அநேகமாக 2011-12இல்,
2G ஊழல் குறித்து, பிரதமருக்குத் தந்தி கொடுக்குமாறு
ஜெயலலிதா தமது கட்சியினருக்கு ஆணையிட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள
BSNL சேவை மையங்களில் அதிமுகவினர், அமைச்சர்கள்
உட்பட, தந்தி கொடுத்தனர். அப்போது தந்திகளைப்
பெற்றுக் கொண்டு ரசீது கொடுத்த BSNL ஊழியர்களுடன்
அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவை
நாளிதழ்களில் வெளியாயின.
**
நான் பணியாற்றிய அலுவலகத்தில், அப்போதைய
அமைச்சர் ஜெயக்குமார் தந்தி கொடுக்க வந்து,
எங்களின் கவுன்டர் ஊழியருடன் புகைப்படம் எடுத்துக்
கொண்டார். இந்த நிகழ்வில் புகைப்படம் எடுத்துக் கொண்ட
எங்கள் ஊழியர்  ஒரு பெண்மணி.
**
எனவே இல்லாத சட்டத்தை, நடைமுறையை இருப்பதாக
வலிந்து கற்பிதம் செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன்
வேண்டுகிறேன்.        
ராமகிருஷ்ணனுக்கு மட்டும்!
------------------------------------------------------
மணிக்கு 30 என்பது Norms.  New Delhi சர்க்கியூட்டில்
மணிக்கு 60 அடித்தவர்கள் மட்டும் ஜெயமோகன்
விவகாரத்தில் கருத்துச் சொல்ல முடியும். ATR தெரியுமா?
 A T ராஜேந்திரன் ACS(T) பொறுப்பில் IR இல் இருக்கும்போது,
மணிக்கு 30 அடிப்பவனையே மொத்த CTO சமுதாயமும்
கேவலமாகப் பார்க்கும். பின்னர் SHORT DUTY, RTP காலத்தில்
ஒவ்வொரு RTPயும் மாடு மாதிரி வேலை பார்த்தது
மறந்து போய் விட்டதா? வேலை செய்யாதவனுக்கு
அல்லது மந்தமாக வேலை செய்பவனுக்கு சமூகத்தில்
என்ன மதிப்பு இருந்தது? அவன் கேவலம்தானே பட்டான்!
எனவே ஜெயமோகனுக்கு கூட்டத்தோடு சேர்ந்து
தர்ம அடி போடுவதில் என்ன நியாயம் உள்ளது?       
வந்தனையும் நிந்தனையும்!
---------------------------------------------------
தொழிலாளி என்றால் வேலை செய்பவன் அதாவது
உழைப்பவன் என்று பொருள். இவனுக்குப் பெயர்தான்
ஒர்க்கர் (worker). தொழிலாளர்களில் சிலர்
வேலை செய்யாமல் தட்டிக் கழிப்பது உண்டு. டாட்ஜ்
பண்ணுகிறவன், ஓப்பி அடிக்கிறவன் என்று சிலரைத்
தொழில் நிலையங்களில் காண முடியும். இவனுக்குப்
பெயர் ஷர்க்கர் (shirker).
**
ஒர்க்கர் என்றுமே வந்தனைக்கு உரியவன். ஆனால்
ஷர்க்கர் அப்படி அல்ல; அவன் நிந்தனைக்கு உரியவன்.
ஒர்க்கரைப் போற்றுவதும் ஷர்க்கரை நிந்திப்பதும்
பாட்டாளி வர்க்கத்தின் பண்பு; இயல்பான பண்பு.
**
ஷர்க்கரான ஒரு பெண்மணியை ஜெயமோகன்
நிந்திக்கிறார். இதில் என்ன தவறு? இதுதானே
பாட்டாளி வர்க்கப் பண்பு? சின்சியர் ஒர்க்கர் என்று
பெயரெடுத்த ஜெயமோகன் வேறு எப்படி நடந்து
கொள்ள முடியும்? இதே ஜெயமோகன் டெலிபோன்
பில் கவுன்டரில் வேலை செய்ததை நான்
பார்த்திருக்கிறேன். எனவே அவருக்கு அதில்
கருத்துச் சொல்லவும், ஷர்க்கரை நிந்திக்கவும்
உரிமை உண்டு. ஏனெனில் அவர் ஒர்க்கராக இருந்தவர்.
**
ஷர்க்கர் சூப்பர்வைசர்களை அதிகாரிகளைக்
காக்காய் பிடிப்பான். வேலைநிறுத்த நாளில் முதல்
ஆளாய் வந்து வேலை செய்வான். அவன் மீது
நடவடிக்கை எடுக்க முடியாது.
**
ஜெயமோகன் குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, சீரழிந்து
போன வேலைக் கலாச்சாரத்தின் (work culture) பிரதிநிதி.
ஜெயமோகன் தனிப்பட்ட ஒரு பெண்மணியைத்
தாக்கவில்லை; மாறாக, சீரழிந்து போன வேலைக்
கலாச்சாரத்தையே தாக்குகிறார்.
**
வங்கியின் கவுன்டர் (counter) பணி என்பது செய்கையின்
வேகத்தை (velocity of action) அதிகபட்ச அளவில் கோருவது.
அங்கு ஆமை வேகம் அனுமதிக்க முடியாதது.
கண்டனத்திற்கு உள்ளாகும். இது இயற்கையே.
**
இந்த விஷயத்தில் ஜெயமோகனைக் கண்டிக்கிற
அனைவரும் (repeat அனைவரும்) ஒன்று முட்டாள்கள்
அல்லது ஹிப்போகிரிட்கள்.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, (BSNL தொழிற்சங்கம்), சென்னை.   
ஜெயமோகனுக்கு சான்றிதழ் வழங்குகிறோம்!
-------------------------------------------------------------------------------------
தோழர் ஜெயமோகன் 1980களின் இறுதியில், மத்திய
அரசின் தொலைதொடர்புத் துறையில் (Dept of Telecom)
அத்துக் கூலியாக (டெய்லி  வேஜஸ்) வேலைக்குச்
சேர்ந்தார். சில ஆண்டுகளின் பின் பணி நிரந்தரம்
செய்யப்பட்டு, Telecom Operating Assistant (General) ஆக
ரூ 975-1660 சம்பள விகிதத்தில் தருமபுரி SSA வில்
வேலையில் சேர்ந்தார். (SSA = Secondary Switching Area).
**
அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் தொலைதொடர்பு
அமைச்சராக இருந்த சி எம் ஸ்டீபன், இத்துறையில்
அத்துக் கூலி முறையைக் கொண்டு வந்தார். அத்துக்
கூலிகளுக்கு RTP (Reserved Trained Pool) என்று பெயர்.
ஒரு நாளில் தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் வேலை
மட்டுமே இவர்களுக்கு வழங்கப் படும். இது SHORT DUTY
முறை எனப்படும் எட்டு மணி நேரம் வேலை கொடுத்தால்,
நிரந்தரம் செய்ய வேண்டியது வரும். இதைத் தவிர்க்கவே
ஆறு மணி நேர வேலை.
**
தொலைத்தொடர்புத் துறை கணினி மயமாக்கப்
பட்டதைத் தொடர்ந்து, கேடர்கள் சீரமைக்கப்
பட்டன. இதைத் தொடர்ந்து, கணினிப் பயிற்சிக்குப் பின்,
தோழர் ஜெயமோகன் ரூ 1200 சம்பள விகிதத்தில்
அமர்த்தப் பட்டார். பின்னர் ரூ 1400 சம்பள விகிதத்திற்கு
உயர்ந்தார். பின்னர் 01.10.2000இல்  BSNL நிறுவனத்தில்
இணைந்தார். இறுதியில் விருப்ப ஒய்வு பெற்றார்.
**
ஒரு தொழிலாளியாக எப்போதுமே மாடு மாதிரி
உழைத்தவர் ஜெயமோகன். அவரின் உழைப்பில்
எவரும் குறை கண்டதில்லை. அவரைப் பற்றி
இவ்வாறு சான்றிதழ் அளிக்க எங்களின் NFTE BSNL
தொழிற்சங்கத்திற்கு முழு உரிமை உண்டு.                
ஒரு அரசு ஊழியரை அல்லது பொதுத்துறை ஊழியரை
அவர் பணியில் இருக்கும்போது, புகைப்படம் எடுப்பதற்குச்
சட்ட ரீதியாகத் தடை இல்லை. PROTECTED AREA என்றோ
PHOTOGRAPHY BANNED என்றோ அறிவிப்புப் பலகை
இல்லாத இடங்களில், வாடிக்கையாளர்களுக்கு ACCESS
உள்ள இடங்களில் புகைப்படம் எடுக்கத் தடை இல்லை.
**
Technical Installations உள்ள இடங்களில் தடை இருக்கிறது.
இதுதான் அரசாங்கத்தின் சட்டம்.
**
அடுத்து, அந்த வங்கிப் பெண்மணியை, அவர் வீட்டிலோ
அல்லது கடைத் தெருவிலோ வைத்துப் புகைப்படம்
எடுப்பதென்றால், அவரின் அனுமதி வேண்டும். அவர்
ஒரு வங்கியின் பிரதிநிதியாக, ஒரு பொது இடத்தில்
வேலை செய்யும்போது, அவர் தனிமனிதர் அல்லர்.
அவர் நிறுவனத்தின் பிரதிநிதி. எனவே அவரிடம் அனுமதி
பெற வேண்டும் என்ற சட்டம் அங்கு இல்லை.
**
நிற்க. அனுமதி பெற்று அல்லது பெறாமல்
புகைப்படம் எடுக்கப் பட்டது என்ற விவகாரம்
இங்கு பேசுபொருள் அல்ல. பொதுத்துறை வங்கிகளில்
உள்ள சீரழிந்த மக்கள் விரோத வேலைக் கலாச்சாரமே
இங்கு பேசப் படுகிறது. தாங்கள் அதில் நின்று கொண்டு
பேசுவதற்குப் பதிலாக, technical aspectsஇல் புகலிடம்
தேட முயற்சி செய்கிறீர்கள். Please stick to the point.     
நத்தை வேகத்தில் வேலை செய்வதை மார்க்சியம்
ஏற்றுக் கொள்ளவில்லை!
-------------------------------------------------------------------------------------------
உழைப்பு, உழைப்புச் சக்தி, வேலைநேரம் ஆகியவற்றை
எல்லாம் கராறாகவும் துல்லியமாகவும் ஆராய்ந்து,
'உபரி மதிப்பு'  என்னும் கோட்பாட்டை வகுத்தார் காரல்
மார்க்ஸ். அவர் உழைப்புச் சக்தி என்று கணக்கில்
கொண்டது சராசரியான உழைப்புச் சக்தியே தவிர,
சராசரிக்கும் வெகு கீழான உழைப்புச் சக்தியை அல்ல.
**
உதாரணமாக, ஒரு மணி நேரத்தில், சில பெட்டிகளுக்கு
ஆணி அடிக்க வேண்டும் என்றால், சிலரால் 150
பெட்டிகளுக்கு ஆணி அடிக்க முடியும்; மந்தமாக
வேலை செய்யும் சிலரால் 50 பெட்டிகளுக்கு மட்டுமே
ஆணி அடிக்க முடியும். இங்கு சராசரியான 100
பெட்டிகளுக்கு ஆணி அடிப்பதையே காரல் மார்க்ஸ்
எடுத்துக் கொண்டார்.
**
சோவியத் ஒன்றியத்தில் புரட்சியின் வெற்றிக்குப்
பின்னர், ஆலைகளில் எத்தகைய வேலைக்
கலாச்சாரத்தை லெனின் செயல்படுத்தினார் என்பதை
மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். சுபோத்னிக்குகள்
பற்றியும் மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். ஆனால்
குட்டி முதலாளித்துவப் பேராசிரியர்கள் இதை அறிய
மாட்டார்கள்.
**
ஆக, மெதுவாக வேலை செய்வதற்கும் சோஷலிசத்திற்கும்
என்ன சம்பந்தம் என்று கேட்பது பொருளற்றது.


வந்தனையும் நிந்தனையும்!
---------------------------------------------------
தொழிலாளி என்றால் வேலை செய்பவன் அதாவது
உழைப்பவன் என்று பொருள். இவனுக்குப் பெயர்தான்
ஒர்க்கர் (worker). தொழிலாளர்களில் சிலர்
வேலை செய்யாமல் தட்டிக் கழிப்பது உண்டு. டாட்ஜ்
பண்ணுகிறவன், ஓப்பி அடிக்கிறவன் என்று சிலரைத்
தொழில் நிலையங்களில் காண முடியும். இவனுக்குப்
பெயர் ஷர்க்கர் (shirker).
**
ஒர்க்கர் என்றுமே வந்தனைக்கு உரியவன். ஆனால்
ஷர்க்கர் அப்படி அல்ல; அவன் நிந்தனைக்கு உரியவன்.
ஒர்க்கரைப் போற்றுவதும் ஷர்க்கரை நிந்திப்பதும்
பாட்டாளி வர்க்கத்தின் பண்பு; இயல்பான பண்பு.
**
ஷர்க்கரான ஒரு பெண்மணியை ஜெயமோகன்
நிந்திக்கிறார். இதில் என்ன தவறு? இதுதானே
பாட்டாளி வர்க்கப் பண்பு? சின்சியர் ஒர்க்கர் என்று
பெயரெடுத்த ஜெயமோகன் வேறு எப்படி நடந்து
கொள்ள முடியும்? இதே ஜெயமோகன் டெலிபோன்
பில் கவுன்டரில் வேலை செய்ததை நான்
பார்த்திருக்கிறேன். எனவே அவருக்கு அதில்
கருத்துச் சொல்லவும், ஷர்க்கரை நிந்திக்கவும்
உரிமை உண்டு. ஏனெனில் அவர் ஒர்க்கராக இருந்தவர்.
**
ஷர்க்கர் சூப்பர்வைசர்களை அதிகாரிகளைக்
காக்காய் பிடிப்பான். வேலைநிறுத்த நாளில் முதல்
ஆளாய் வந்து வேலை செய்வான். அவன் மீது
நடவடிக்கை எடுக்க முடியாது.
**
ஜெயமோகன் குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, சீரழிந்து
போன வேலைக் கலாச்சாரத்தின் (work culture) பிரதிநிதி.
ஜெயமோகன் தனிப்பட்ட ஒரு பெண்மணியைத்
தாக்கவில்லை; மாறாக, சீரழிந்து போன வேலைக்
கலாச்சாரத்தையே தாக்குகிறார்.
**
வங்கியின் கவுன்டர் (counter) பணி என்பது செய்கையின்
வேகத்தை (velocity of action) அதிகபட்ச அளவில் கோருவது.
அங்கு ஆமை வேகம் அனுமதிக்க முடியாதது.
கண்டனத்திற்கு உள்ளாகும். இது இயற்கையே.
**
இந்த விஷயத்தில் ஜெயமோகனைக் கண்டிக்கிற
அனைவரும் (repeat அனைவரும்) ஒன்று முட்டாள்கள்
அல்லது ஹிப்போகிரிட்கள்.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, (BSNL தொழிற்சங்கம்), சென்னை.   
காணக் கண் கோடி வேண்டும்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
1) உலகின் மொத்த மக்கள் தொகை = 7.5 பில்லியன்
அதாவது, 750 கோடி (ஒரு பில்லியன் = 100 கோடி)

2) இந்த 750 கோடிப்பேரில் மூன்று பேருக்கு மட்டுமே
இந்த ஆண்டுக்கான (2016) இயற்பியல் நோபல் பரிசு
வழங்கப் பட்டுள்ளது.

3) இந்த இயற்பியல் நோபல் பரிசு குறித்து, ஒட்டு மொத்த
உலகிலும், 750 கோடிப் பேர் இருந்தாலும்,
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே விளக்கம்
அளித்துள்ளது. தமிழில் விளக்கம்.

4) யூடியூபில் ஒரு சிறு காணொளியாக இந்த விளக்கம்
பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

5) எனினும் இதுவரை 35 பேர் மட்டுமே அந்த வீடியோவைப் 
பார்த்துள்ளனர்.

6) அதைப் பாருங்கள்.
.......................... நியூட்டன் அறிவியல் மன்றம்.............................
*******************************************************************

வியாழன், 27 அக்டோபர், 2016

ஒரே நேரத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும்
இருக்கும் பொருட்கள் குறித்த கண்டுபிடிப்புக்கு
இயற்பியல் நோபல் பரிசு. இது குறித்த என்னுடைய
யூடியூப் வீடியோவை பகிருமாறும் பரப்புமாறும்
வேண்டுகிறேன். 

செவ்வாய், 25 அக்டோபர், 2016

காரணம்-விளைவு, மார்க்சியம், நவீன அறிவியல் பற்றி...
------------------------------------------------------------------------------------------------------
காரணம்-விளைவு என்ற பைனரி நிலை, அதாவது
காரண காரியப் பொருத்தம் (cause and effect relationship)
என்பது மார்க்சியத்தில் ஒரு வகைமை ஆகும்.
இதன் பொருள், எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம்
உண்டு என்பதாகும்.
**
பழுதான எந்திரம் வேலை செய்கிறது; இது விளைவு.
இதற்கான காரணம்: மெக்கானிக் அதைப் பழுது
பார்த்தது. அது போல, நோய் வந்த உடல் நலம்
பெறுகிறது. இது விளைவு. காரணம்: மருத்துவர் அளித்த
சிகிச்சை. இவ்வாறு நிகழ்வுகளைப் பார்க்க
மார்க்சியம் கற்றுத் தருகிறது.
**
அதே போல, ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதையும்
மார்க்ஸ் ஆராய்ந்தார். சமூகம் அப்படி இருப்பதானது
"விளைவு" என்று எடுத்துக் கொண்டால், அதற்கான
"காரணம்" என்ன என்பதையும் மார்க்ஸ் ஆராய்ந்தார்.
இந்த ஆராய்ச்சியின் இறுதியில், முதலாளித்துவ
சமூகம் எப்படி இயங்குகிறது என்பதற்கான விதிகளைக்
கண்டறிந்தார். மூலதனத்தை எழுதினார். அரசியல், கலை,
இலக்கியம், பண்பாடு ஆகிய அனைத்தும் பொருளியல்
அடித்தளத்தின் பிரதிபலிப்புகளாகவே உள்ளன
என்று கண்டறிந்தார்.
**
காரண-காரியப் பொருத்தம் என்பதை மார்க்ஸ்
பொருள்முதல்வாதத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்.
பொருள்முதல்வாதம் "காரணம் இல்லாமல் காரியம்
இல்லை" என்கிறது.
**
நவீன அறிவியலில், ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு
வரை காரணம்-விளைவு செல்லுபடி ஆகிறது. அதாவது,
Cause and effect is VALID upto Relativity Theory but thereafter with the advent of
Quantum theory the said cause and effect ceases to exist.
**
குவான்டம்  கோட்பாடு வந்த பின்னால், அதில்
"காரணம்-விளைவு" இல்லை. எனவே, நிகழ்வுகளை
விளக்குவதில் குவான்டம் கொள்கை கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும். ஆனால் மார்க்சியமானது
நியூட்டனின் இயற்பியல் வரை மட்டுமே அறிவியலை
உள்வாங்கி உள்ளது. அதற்குப் பின்னான அறிவியலை
உள்வாங்கி, மார்க்சியமும் பொருள்முதல்வாதமும்
தம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.         
போலீஸ் அடக்குமுறை ஒழிக என்று மக்கள் போராட்டம்
நடத்தினால், மக்கள் ஒழிக என்று எதிர்ப்போராட்டம்
நடத்துகின்றனர் போலீசார். இதற்குப் பெயர்தான்
ஏட்டிக்குப் போட்டி! ஆங்கிலத்தில், tit for tat. நல்லது;
இது பின்நவீனத்துவ உலகம்; இப்படித்தான் இருக்கும்! 
இந்தக் கண்டு பிடிப்புகள் மனித உடல்நலம் சார்ந்து
பயன்படக் கூடியவை. உடலின் நுட்பத்தைத் துல்லியமாக
அறிய முடிந்தால்தான் நோய்த்தடுப்பும், சிகிச்சையும்
சாத்தியம் ஆகும். எனவே உடல்நலம் சார்ந்து
பயன்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
**
இதற்கு முன்பு மனித டி.என்.ஏக்களை ரிப்பர் செய்ய வல்ல
கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டத்தை
நினைவு கூரலாம். டி.என்.ஏ என்பதும் ஒரு மூலக்கூறுதான்.  

வியாழன், 20 அக்டோபர், 2016

ஷோபா சக்தி தனது முதல் நாவலான கொரில்லாவை எந்த வரிகளில் யாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“பேராசான் கார்ல்மார்க்சுக்கு
காதலியாய்க் கிடந்து, மரித்து
வரலாற்றின் இருள் அடுக்குகளில் சிதிலமாய்க்
கீறப்பட்ட அந்த ஊழியக்காரி
ஹெலன் டெமூத்தீன் நினைவுகளுக்கு...”
-----------------------------------------------------------
அடுத்ததாய் “இதுவரையான, ஏடறிந்த மனித சமுதாயத்தின் வரலாறு என்பது, பெண் குறிகளுக்கும், ஆண்குறிகளுக்கும் இடையே நடந்த இடையறாத போராட்டத்தின் வரலாறே ஆகும்” இதுவும் அவர்கள் முற்போக்கு இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தும் ஷோபாசக்தியின் வரிகளே. கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் வாக்கியத்தை இந்தளவுக்கு யாரும் கொச்சைப் படுத்த முடிந்திருக்காது.


முகநூலில் கருத்து வெளியிட்டால் சிறையா?
66ஏ சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது!
இதன் பிறகும் அச்சம் ஏன்?
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்
தோழர் பி இளங்கோ அவர்கள் கருத்து!
இந்த யூடியூப் காணொளியில் காணலாம்!
-----------------------------------------------------------------------------
வின் டி.வி. நிகழ்ச்சி, நெறியாளர்:  நிஜந்தன்.
**********************************************************

இணையப் பதிவர்களுக்கு உதவும் விதத்திலும்,
நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், தனியாக,
இணையத்திற்கு மட்டுமேமான ஒரு சட்ட உதவி அணி
அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே இருக்கின்ற வழக்கறிஞர் அணியைக்
கைகாட்டி விட்டு ஒதுங்காமல், இணைய சட்ட உதவி
அணியை அமைக்க வேண்டும்.
**
கைது செய்தால் பிணையில் வெளிவரலாம். அதற்கு
ரூ 20000, ரூ 30000 செலவாகும். எனவே இலவச சட்ட உதவி
அணி தேவை. என்னுடைய உரையில், ஒரு ப்ளஸ் டூ
பையனுக்கு ரூ 20000 வீதம் இரண்டு பேர் ஜாமீன் கொடுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்
காட்டி உள்ளேன். வீடியோ பார்க்கவும்.      
வினோத் மிஸ்ரா! "எழுபதின் பத்தாண்டுகளை
விடுதலையின் பத்தாண்டுகளாக மாற்றுவோம்" 
என்ற சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று
நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தவர் தோழர்
வினோத் மிஸ்ரா. பொறியியல் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்த தோழர் VM படிப்பைத் துறந்து
புரட்சியில் தம்மை அர்ப்பணித்தார்.
**
தலைவர் சாருவின் மறைவுக்குப் பிறகு, மா-லெ
கட்சிக்குத் தலைமை ஏற்றார். இவரின் தலைமையில்
கீழ், கட்சி அநேக அழித்தொழிப்புகளை (ANNIHILATIONS)
நடத்தியது. (இதே காலக்கட்டத்தில் இன்னொரு பெரிய
மா-லெ கட்சியான மக்கள் யுத்தமும் நிறைய
அழித்தொழிப்புகளை நடத்தியது).
------------------------------------------------------------------------------------------------

இந்தியப் புரட்சியின் வரலாற்றில் தோழர் வினோத்
மிஸ்ரா குறிப்பிடத்தக்க ஓர் இடம் பெற்றவர். தோழர்
பி.டி.ரணதிவே புரட்சியை நடத்துமாறு அறைகூவல்
விடுத்தார். ஆனால் புரட்சியை நடத்த இயலவில்லை.
ஆனால், நக்சல்பாரிக் காலத்தில் இந்தியப் புரட்சியை
ஒரு சில மா-லெ தலைவர்கள் நடத்திக் காட்டினர்.
தோழர் VM அவர்களில்  ஒருவர்.
**
அதே நேரத்தில், மக்கள் இயக்கங்களைக் கட்டுவதில்
என்.ஜி.ஓ.க்களுக்கு முதன்மையான ஒரு பாத்திரம்
வழங்கி, தோழர் VM இமாலயத் தவறுகளைச் செய்தார்.
பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மைப் பாத்திரத்தை
மறுத்து, அதன் இடத்தில் என்.ஜி.ஓ.க்களை வைத்தார்
தோழர் VM. இது இந்தியப் புரட்சிக்குப் பெரும்
பின்னடைவை ஏற்படுத்தியதோடு, கட்சிக் 
கலைப்புவாதத்திற்கும் (liquidationism) இட்டுச் சென்றது.
**
விளைவு: 1) ஆயுதப் படைக்குழுக்களைக் கலைத்தார்.
2) தலைமறைவு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு,
கட்சி வெளிப்படையாக இயங்கியது. 3)நாடாளுமன்றப்
பாதையில் சரணடைந்தார். 4) கட்சியின் பாரம்பரியம்
மிக்க புரட்சிகர சாரத்தை என்.ஜி.ஓ.க்களிடம்
இழந்தார். 5) நம் அன்புக்குரிய இந்தியாவின் உழைக்கும்
மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு புரட்சியாளராக
இருந்த தோழர் VM பின்னர் கலைப்புவாதியாக மாறியது
இந்தியப் புரட்சியின் ஒரு சோகம் ஆகும்.
**
தோழர் VM இளம் வயதில் (51 வயது) மறைந்த அன்று,
VM கட்சித் தோழர்கள் மட்டுமல்ல, அனைத்து ML
தோழர்களும் சோகத்தில் ஆழ்ந்தோம். புதிய வாசகர்களுக்கு
தோழர் VM குறித்த ஒரு சரியான புரிதலை வழங்கும்
பொருட்டே இந்தச் சிறுகுறிப்பு. (சில பின்னூட்டங்களில்
தோழர் VM பற்றிய குறிப்பு இருந்ததால் இந்த வரிகள்
எழுதப்பட்டுள்ளன. மன்னிக்கவும். நன்றி.)   


இடஒதுக்கீடு பற்றிய மார்க்சியப் பார்வை!
----------------------------------------------------------------------------
கோட்பாடு ரீதியாக, இட ஒதுக்கீடு என்பது "பாதுகாப்புக்
கருதிய பாரபட்சம்" (protective discrimination) ஆகும். தீண்டாமை
போன்ற பாரபட்சம் சமூகத்தில் நிலவுகிறது. இது
அழிவு கருதிய பாரபட்சம் (destructive discrimination) ஆகும். 
இதற்கு மாற்றாக இடஒதுக்கீடு கொண்டுவரப் படுகிறது.
அதாவது, பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறிப்போன
ஒருவனுக்கு, விஷ முறிவுக்கு மருந்து கொடுப்பது
போன்றது இடஒதுக்கீடு. அதாவது இடஒதுக்கீடு ஒரு
விஷமுறிப்பு மருந்து (antidote) போன்றதாகும்.
**
இடஒதுக்கீடு சர்வ ரோக நிவாரணி அல்ல. அது
விடுதலைக்கான பாதையும் அல்ல. இடஒதுக்கீட்டால்
சமூகத்தின் முன்னேறிய பிரிவினர்தான் (creamy section)
பெரிதும் பயனடைய முடியும் என்று கூறினார்
பிந்தேஸ்வரி பிரசாத்  மண்டல். சுருங்கக் கூறின்,
இடஒதுக்கீடானது, அதைப்பெறும் சாதியினர் மத்தியில்,
ஒரு நடுத்தர வர்க்கத்தை உருவாக்கும். அவ்வளவே.
இதைத்தான் ரங்கநாயகம்மாவும் கூறுகிறார். ராகுல
சாங்கிருத்தியாயானும் அதையேதான் கூறியுள்ளார்
என்பதை எமது கட்டுரையில் கூறியுள்ளோம்.
**
சில மூளைகளால் இடஒதுக்கீட்டைத் தாண்டிச் சிந்திக்க
முடிவதில்லை. அதற்குக் காரணம் அவர்தம்
சிந்தனையில் உறைந்துபோன நடுத்தர வர்க்கத்
தத்துவமே. மார்க்சியம் நடுத்தர வர்க்கச் சிந்தனைப்
போக்கில் நின்று கொண்டு விஷயங்களைப்
பார்ப்பதில்லை. அது பாட்டாளி வர்க்கச் சிந்தனையின்
மூலம் உலகத்தைப் பார்க்கிறது. அதனால்தான்
அது புரட்சிகரமாக இருக்கிறது.
**
ரங்கநாயகம்மா  தமது நூலில் நடுத்தர வர்க்கச்
சிந்தனையையும் அது வழங்கும் தீர்வுகளையும்
அமபலப் படுத்துகிறார்; மார்க்சியத்தை உயர்த்திப்
பிடிக்கிறார்.  எனவேதான் அவரின் நூல் மார்க்சியத்தின்
எதிரிகளால் தூற்றப் படுகிறது. 
        
ரங்கநாயகம்மா இப்படி எழுதவே இல்லை. இது மிக
மோசமான திரிப்பு. ஒருவரை விமர்சிக்கும்போது, அவர்
எழுதாத ஒன்றை வைத்துக் கொண்டு விமர்சிப்பது
குட்டிமுதலாளித்துவம் கடைப்பிடிக்கிற தந்திரம். இது
தவறானதும் தோல்வியைத் தருவதுமான தந்திரம். 
**
சுரண்டுகின்ற ஆளும் வர்க்கமானது இடஒதுக்கீட்டை
ஒரு பிச்சையாகக் கருதுகிறது என்று தெளிவாகச்
சொல்கிறார் ரங்கநாயகம்மா. ஆளும் வர்க்கத்தைக்
கண்டிக்கும் வாக்கியம் இது. இதைத் திரித்துப்
புரட்டுவதன் மூலம், அப்படிப் புரட்டுவோரின் ஆளும்
வர்க்கச் சார்பு வெளிப்பட்டு விடுகிறது.
**
இடஒதுக்கீடு என்பது மார்க்சியப்  பார்வையில் ஒரு
சீர்திருத்தம் ஆகும். அதுவே விடுதலையைப் பெற்றுத்
தந்து விடாது. இடஒதுக்கீடு விடுதலைப் பெற்றுத்
தரும் என்று மாயாவதி போன்றவர்கள் கருதலாம்.
மார்க்சியம் அவ்வாறு கருதுவதில்லை.
**
குஜராத்தில் பட்டேல்களும், ஹரியானாவில் ஜாட்களும்
இடஒதுக்கீடு கோரிப் போராடி வருகின்றனர்.  முற்பட்ட
வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை
முற்பட்ட சாதிகள் வலுவாக எழுப்பி வருகின்றன.
இவையெல்லாம் ஆளுகின்ற அரசுகளால் வழங்கப்
படுமானால், அவை சாதி ஒழிப்பைச் சாத்தியம்
ஆக்குமா?
**
வர்க்கப் போராட்டத்தை ஒழித்து விட்டு, அந்த இடத்தில்
இடஒதுக்கீட்டை வைப்பதை மார்க்சியம் ஏற்கவில்லை.
1) மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 2) நியூட்டன் அறிவியல் மன்றம்
3) நான் ஆகிய மூவருமே விடுப்பு எடுக்க உள்ளோம்.


இணைய அணி எதுவும் தேவையில்லை. இணைய சட்ட உதவி அணிதான் தேவை. இணைய அணி என்று கொண்டு வந்து,
அதற்கு தலைமை, நிர்வாகிகள் என்று கொண்டு வருவதால்
பயன் கிடையாது. இணையம் என்பது குட்டி முதலாளித்துவ சுதந்திர வெளி. அங்கு யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாது.
எவனும் கட்டுப்படவும் மாட்டான். இணையத்தில் திமுகவை
ஆதரித்து 100 பேர் எழுதுகிறார்கள் என்றால், அதில் 30 பேர்தான்
கட்சிக்காரன்; மீதி 70 பேர் அனுதாபிகள். அனுதாபிகளை எந்தத்
தலைமையும் கட்டுப் படுத்த முடியாது. விழலுக்கு நீர் இறைக்க வேண்டாம். சட்ட உதவி அணியைக் கொண்டு வந்து
செயல்படுத்துங்கள். 

புதன், 19 அக்டோபர், 2016

வாசக அன்பர்களுக்கு,
ரங்கநாயகம்மா நூலின் திறனாய்வு என்ற பொருளில்
இதுவரை 16 கட்டுரைகள் எழுதப் பட்டு, அத்தொடர்
முற்றுப் பெற்று விட்டது. இக்கட்டுரை இத்தொடரின்
பின்னுரை ஆகும். வாசகர்கள் மீதமுள்ள 16
கட்டுரைகளையும் படிக்குமாறு வேண்டுகிறோம். 
-------------------------------------------------------------------------------------------

தனிநபர் தாக்குதல் இல்லை!
----------------------------------------------------
இக்கட்டுரைத் தொடரில் எந்த விதமான தனிநபர்
தாக்குதலுக்கும் வசவுகளுக்கும் துளியும் இடமில்லை
என்பதை வாசகர்கள் உணர்ந்து இருப்பார்கள்.
குட்டி முதலாளித்துவம்தான் தனிநபர் தாக்குதலில்
இறங்கும்; வசைமாரி பொழியும். ஏனெனில், கருத்தியல்
ரீதியாக குட்டி முதலாளித்துவம் பலவீனமானது.
மார்க்சியம் கருத்தால் அதை வெல்லும்!
**

இந்தப் பின்னுரையுடன் மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
முகநூல் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்கிறது.
ஒரு மாதம் கழித்து விடுப்பு முடிந்தபின் பார்க்கலாம்.


(17) பின்னுரை (Epilogue)
---------------------------------------
ரங்கநாயகம்மா நூலை ஏன் ஆதரிக்க வேண்டும்?
இந்த நூலை எதிர்ப்போர் பிற்போக்காளர்களே!
மார்க்சியத்தின் எதிரிகள் மட்டுமே இந்த நூலை
எதிர்க்கிறார்கள்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------
1) "சாதியப்  பிரச்சினைக்குத் தீர்வு ......."என்ற
ரங்கநாயகம்மாவின் நூல், மார்க்சியத்தை உயர்த்திப்
பிடிக்கிறது. அடையாள அரசியலுக்குச் சம்மட்டி அடி
கொடுக்கிறது.

2) 1980களில் இந்திய அரசியல் அரங்கில் நுழைந்த
பின்நவீனத்துவம், கடந்த முத்தாண்டுகளில்,
மார்க்சியத்தை வெகுவாக பலவீனப் படுத்தி,
அதனிடத்தில் அடையாள அரசியலை வைப்பதில்
வெற்றி பெற்றுள்ளது.

3) அடையாள அரசியலானது பின்நவீனத்தின்
தத்துவார்த்தப் பின்புலத்தில் மார்க்சியத்துடன்
சமர் புரிந்து வருகிறது. இந்தச் சமரில், மார்க்சியம்
தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், அடையாள
அரசியலை முறியடிக்கவும் ரங்கநாயகம்மாவின்
இந்த நூல் கேடயமும் வாளுமாக மார்க்சியத்தின்
கரங்களில் சுழல்கிறது. இது வெறும் நூல் அல்ல.
இது அரசியல் கருத்தாயுதம் ஆகும்.

4) ஏகாதிபத்திய நிதியில் இயங்கி, இந்தியாவின்
வர்க்கப் போராட்ட அரசியலைச் சீர்குலைக்கிற,
என்.ஜி.ஓ அமைப்புகள், தங்கள் எடுபிடிகள் மூலம்
இந்த நூலின் மீது அவதூறுகள் பரப்பி வருகின்றனர்.

5) எஸ்.வி.ராஜதுரை, அ மார்க்ஸ், வ கீதா போன்ற
என்.ஜி.ஓ சக்திகள், அடையாள அரசியலுக்குப்
பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தும் இந்த நூலுக்கு
தமிழ் வாசக உலகில் ஏற்பட்டு இருக்கும் வரவேற்பைக்
கண்டு கதிகலங்கிப் போய் நிற்கிறார்கள். மிகுந்த
வன்மத்துடன் தங்கள் எஜமான விசுவாசத்தைக்
காட்டும் இவர்கள் ரங்கநாயகம்மாவுக்கு எதிராக
வரிந்துகட்டிக் கொண்டு நின்று தோல்வி
அடைகிறார்கள்.

6) மார்க்சிய லெனினியத்தை லேபிளாகவும், என்.ஜி.ஓ
அரசியலை உள்ளடக்கமாகவும் கொண்டிருக்கிற சில
சக்திகள் ரங்கநாயகம்மாவின் நூல் ஒரு மார்க்சிய
நூல் அல்ல என்கிறார்கள். இந்த என்.ஜி.ஓ. ஆதரவாளர்கள்
எஸ்.வி.ராஜதுரை, வ கீதா ஆகிய என்.ஜி.ஓ.
அரசியல்வாதிகளைத் தூக்கிப் பிடிக்கிற போது,
இவர்களின் மார்க்சிய வேடம் கலைந்து விடுகிறது.

7) சுருங்கக் கூறின், என்.ஜி.ஓ. எடுபிடிகளும், சாதிய
அடையாள அரசியல் பிழைப்புவாதிகளும்,
பின்னவீனத்துவ தாசர்களுமே இந்த நூலை
எதிர்க்கிறார்கள். அவர்களின் பிழைப்பில் இந்த
நூல் மண்ணைப் போடுவதாலும், திரளான மக்களை
அடையாள அரசியலின் விலங்குகளில் இருந்து
விடுவித்து, மார்க்சியத்தை நோக்கி ஆற்றுப்
படுத்துவதாலும் பிற்போக்குச் சக்திகள் இந்த நூலை
எதிர்க்கின்றன.

8) ரங்கநாயகம்மாவின் நூலைக் கருத்துத் தளத்தில்
சந்திக்க இந்த நூலின் எதிர்ப்பாளர்களால் இயலவில்லை.
இதனால் அவர்கள் அவதூறுகள், வசைகள்
ஆகியவற்றில் புகலிடம் தேடுவது இயற்கையே.

9) மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் இந்த நூலைத்
திறனாய்வு செய்து, மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
இதுவரை 16 கட்டுரைகள் கொண்ட ஒரு தொடரை
வெளியிட்டு இருக்கிறது. நூலின் எதிர்ப்பாளர்களால்
எமது திறனாய்வுக்குப் பதில் சொல்ல இயலவில்லை.
எனவே எமது திறனாய்வு நிலைபேறு உடையதாக
நிரூபிக்கப் பட்டுள்ளது.

10) புரையோடிப் போயிருக்கும் அடையாள அரசியலை
அறுத்தெறியாமல், மார்க்சியத்துக்கு வாழ்க்கை இல்லை.
அடையாள அரசியலோடு மார்க்சியம் சமாதான
சகவாழ்வு வாழ இயலாது. அடையாள அரசியலுடன்
பிரகடனம் செய்யப்பட ஒரு போரை மார்க்சியம்
மேற்கொள்ளாமல், இந்தியாவில் மார்க்சியத்துக்கு
எதிர்காலம் இல்லை. இந்தச் சூழலில்
ரங்கநாயகம்மாவின் நூல், இந்த திசைவழியில்
மக்களை ஆற்றுப் படுத்துகிறது.
******************************************************************



அடையாள அரசியலும் நியூட்டன், ஐன்ஸ்டினும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
விஞ்ஞானிகள் ஒருமுறை "ஒளிந்துகொள்-கண்டுபிடி"
(hide and seek) விளையாட்டு விளையாடினர். நியூட்டன்
உட்ப ட எல்லா விஞ்ஞானிகளும் ஒளிந்து கொண்டனர்.
ஐன்ஸ்டின் கண்டு பிடிக்க வேண்டியவர் ஆனார்.

ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள ஒரு கட்டத்திற்குள் நியூட்டன்
நின்று கொண்டார். இப்போது விளையாட்டு தொடங்கியது.
ஐன்ஸ்டின் நியூட்டனைப் பார்த்து விட்டார். உடனே, இதோ
நியூட்டன்" என்று கத்தினார்.

ஆனால் நியூட்டனோ தான் நியூட்டன் அல்ல என்று
மறுத்தார். தான் ஒரு சதுர மீட்டருக்குள்  உள்ள நியூட்டன்
என்பதால், தான் பாஸ்கல் என்று கூறினார் நியூட்டன்!

புரிகிறதா? புரிவது கடினம். எனவே இந்த ஜோக்கை
ஆங்கிலத்தில் தருகிறேன். அப்போது புரிகிறதா என்று
பாருங்கள்!

Once physicists played a 'hide and seek' game. Einstein was the seeker. Newton
stood on a square with an area of one meter square. The game started and Einstein
saw Newton and yelled, "Here is Newton". But Newton disagreed and said,
"I am not Newton; I am Pascal since I am Newton per meter square".

இப்போது புரிகிறதா! பாஸ்கல் என்பது இயற்பியலில்
ஒரு அலகு. பாஸ்கல் என்பது ஒரு பிரெஞ்சு
விஞ்ஞானியின் பெயரும் ஆகும்.
1 pascal = newton per meter square.

இன்னும் புரியவில்லை என்றால், 11ஆம் வகுப்பு
இயற்பியல் புத்தகத்தைப் படிக்கவும்.
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: Physics Joke என்றால் பலரும் படிக்காமலேயே
 சென்று விடுவார்கள். அடையாள அரசியல் என்றால்
படிப்பார்கள். அதற்காகவே இத்தலைப்பு.
******************************************************************** 
    
இது உண்மை. இதை நானும் பலகாலமாகச்
சொல்லி வருகிறேன்.
மொத்தம் 16 கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன.
13 கட்டுரைகள் ரங்கநாயகம்மாவின் நூல் பற்றிய
திறனாய்வு. மீதி 3 கட்டுரைகள் எமது திறனாய்வின்
மீதான விமர்சங்களுக்குப் பதிலுரை. அனைத்தையும்
படித்து விட்டீர்களா, அண்ணாச்சி. தங்கள் கருத்துக்களைக்
கூறுமாறு வேண்டுகிறேன்.
திறனாய்வின் இறுதிக் கட்டுரை! 

செவ்வாய், 18 அக்டோபர், 2016

மீண்டும் தோழர் நடராசன் அவர்களுக்கு,
----------------------------------------------------------------------------
"சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் .........பதிப்பை
வெளியிட்டது" என்ற சிறிய பத்தி அ மார்க்ஸ் எழுதியது.
அதைத் தாங்கள் குறிப்பிடாமல் உள்ளதால், புதிய
வாசகர்கள் குழப்பம் அடைவார்கள்.
**
அ மார்க்ஸ் குறிப்பிட்ட,  அந்த AILRC மாநாட்டிற்காக,
நிதி திரட்டியவர்களில் NFTEயைச் சேர்ந்த நான்,
சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ரவீந்திரன் (NFTE),
தோழர் AVS (NFTE) மற்றும் பல்வேறு NFTE தோழர்களின்
பங்களிப்பு உண்டு.
**
மேலும் அ மார்க்ஸ் குறிப்பிடுகிற, "இன்னும் பலரும்
தமிழாக்கி" என்ற தொடரில் யார் யாரெல்லாம் அடக்கம்
என்ற தகவல்களும் எனக்குப் பசுமையாக நினைவு
இருக்கிறது. இந்தப் பின்னூட்டம் அ மார்க்சுக்கு
ஆதரவானது என்று விவரமறிந்தோர் எவரும் கருத
மாட்டார்கள். நன்றி, தோழர் நடராசன்.
       --------------------------------------------------------------------

இறுதியாக தோழர் நடராசன் அவர்களுக்கு,
------------------------------------------------------------------------------
தோழர் ரவீந்திரநாத்தின் பதிவை நீங்கள் பகிர்ந்து
உள்ளீர்கள் என்பதை நான் எனது முதல் பின்னூட்டத்தில்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இங்கு விவாதிக்கப் படுவது
 "பகிர்வு" அல்ல. அந்தப் பகிர்வை அறிமுகப் படுத்தி
எழுதப்பட்ட ஒரு சிறிய பத்தி. அது அ மார்க்ஸ் எழுதியது.
**
தோழர் ரவீந்திரநாத் அந்த அறிமுகத்தை எழுதவில்லை.
அவர் மிகவும் இளையவர். மேலும் அவர் மா-லெ கட்சியில்
இருந்தவரோ, இருப்பவரோ அல்ல. அவர் CPIகாரர்.
அந்த அறிமுகம் அ  மார்க்ஸ் எழுதியது என்று வாசகர்கள்
தற்போது தெளிவு அடைந்துள்ளனர் என்று கருதுகிறேன்.
இதுபற்றி மேலும் பேச எதுவும் இல்லை. நன்றி தோழர்
நடராசன்.  
--------------------------------------------------------------------------------------------------
பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டுவது பற்றி....
--------------------------------------------------------------------------------------------
நடைபெறுகிற மோடியின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சி அல்ல
என்று கோட்பாட்டு ரீதியாக வரையறுத்து, மார்க்சிஸ்ட்
கோட்பாட்டு அறிஞர்களான பிரகாஷ் காரத்தும்,
சீத்தாராம் யெச்சூரியும் ஆங்கிலத்தில் கட்டுரைகள்
எழுதி உள்ளனர். மோடி ஒரு பாசிஸ்டு அல்ல என்றும்,
பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி அல்ல என்றும் அடித்துக்
கூறுகிறது CPM.
**
பொதுவான இடதுசாரி முகாமில், ஒப்பீட்டளவில்,
சற்றுப் பெரிய கட்சி CPM. தொழிற்சங்க அமைப்புகள்
மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளில் செல்வாக்கு
உடைய கட்சி CPM. அக்கட்சியானது, நடைபெறுவது
பாசிச ஆட்சி அல்ல என்று சான்றிதழ் அளித்துள்ள
போது, பரந்துபட்ட பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி
கட்டுவது எப்படி?     

(16) ரங்கநாயகம்மாவின் போதாமை!
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வு!
அம்பேத்காரியம், மார்க்சியம் என்ன வேறுபாடு?
புண்ணுக்குப் புனுகு தடவும் தீர்வுகள்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
--------------------------------------------------------------------------------------
வருணம் சாதி குறித்த அம்பேத்காரின் ஆய்வு
முடிவுகளில் சரி-தவறு இருக்கலாம். அது ஒரு
பொருட்டல்ல. பின், எது பொருட்டு என்றால்,
அம்பேத்கார் முன்வைத்த அரசியல் தீர்வுகள்தான்.

தலித் முன்னேற்றம், விடுதலை  உள்ளிட்ட
அனைத்துக்கும்  சட்டமன்ற நாடாளுமன்ற
அதிகாரத்தைப் பெறுவதையே ஒரே தீர்வாக
முன்வைத்தார் அம்பேத்கார். எம்.எல்.ஏ ஆவது,
எம்.பி.ஆவது, நீதிபதிகள் ஆவது, அமைச்சர்கள் ஆவது,
அரசாங்கப் பதவிகள் பெறுவது என்று இவ்வாறாக
அவர் முன்வைத்த தீர்வுகள் எல்லாமே, நிலவுகிற
அரசமைப்பைத் தக்க வைப்பது என்ற
குறிக்கோளைக் கொண்டவை. அவர் பெற்றுத்
தந்த இடஒதுக்கீடும், பூனா ஒப்பந்தத்தில் முடிந்த
அவரின் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையும்
இந்தக் குறிக்கோளை அடைவதற்கான வழிகளே.

இந்த நிலைபாட்டில் நின்று கொண்டுதான்,
அம்பத்கார் அரசமைப்புச் சட்டத்தை எழுதினார்.
காங்கிரஸ் அமைச்சரவையில் இரண்டு முறை
பங்கேற்றார்.

புண்ணுக்குப் புனுகு தடவும் தீர்வுகள்!
--------------------------------------------------------------------
அரசு எந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக
தலித்துகளை ஆக்குவது ஒன்றே அவர் முன்வைத்த
தீர்வு. இது இயல்பாகவே வர்க்கப் போராட்டத்துக்கு
முற்றிலும் எதிரானது. சமூக மாற்றத்திற்கு எதிரானது.
மார்க்சியத்திற்கு அதன் ஒவ்வொரு அம்சத்திலும்
நேர் எதிரானது.

அரசாங்கப் பதவிகளைப் பெறுவதும், ஜனாதிபதி
முதல்வர் பதவிகளை பெறுவதும் கூட தலித்
விடுதலையைப் பெற்றுத் தராது என்பது வரலாற்றில்
ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப் பட்ட ஒன்று.

ஜோதிபாசு முதல்வராகி விட்டதால், மேற்கு வங்கத்தில்
பாட்டாளி வர்க்கம் விடுதலை அடைந்து விடவில்லை.
உ.பி.யில் மாயாவதி முதல்வராகி விட்டதால், தலித்துகள்
விடுதலை அடைந்து விடவில்லை. இவை எல்லாம்
புண்ணுக்குப் புனுகு தடவும் தீர்வுகள்.

அரசு பற்றிய மார்க்சிய போதனை!
----------------------------------------------------------------
"அரசு என்பது உலர்ந்து உதிர்ந்து விடும்"
(The state will wither away) என்றார் எங்கல்ஸ்.

"அரசு எந்திரம் தகர்க்கப் பட வேண்டும்"
(The state machinery should be destroyed) என்றார் லெனின்.
லெனினின் மேற்கூறிய வாக்கியத்தின் மூலம்,
மார்க்சியமானது ஆகச் சிறந்த ஒரு முன்னடியை
எடுத்து வைக்கிறது. அரசு பற்றிய மார்க்சிய
போதனையில் லெனினின் கூற்று மிகவும்
அடிப்படையானது.

அரசு பற்றிய பார்வையில் மார்க்சியத்துடன்
அம்பேத்கார் கடுமையாக முரண்படுகிறார்.
வர்க்கப் போராட்டத்தை அம்பேத்கார் ஏற்கவோ
அங்கீகரிக்கவோ இல்லை. நாடாளுமன்றத்திற்குப்
புறம்பான (extra parliamentary) போராட்டங்களை அவர்
கருத்தில் கொள்ளவில்லை. அவர் சட்ட அமைச்சராக
இருந்தபோதுதான், 1948இல் மகத்தான தெலுங்கானா
விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம்
நடைபெற்றது. அவரது சக அமைச்சரான வல்லபாய்
பட்டேல்தான் ராணுவத்தை அனுப்பி, தெலுங்கானா
எழுச்சியை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எளிய விவசாயிகளில்
பலர் தலித்துகளும் பழங்குடிகளும் ஆவர். பாலியல்
வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பல பெண்கள்
பழங்குடி இனப் பெண்களே. எனினும் இவை
அம்பேத்காரிடம் சிறிதளவு அசைவைக் கூட
ஏற்படுத்தவில்லை.

நடுத்தர வர்க்கத் தத்துவம்!
--------------------------------------------------
மார்க்சியம் என்பது பாட்டாளி வர்க்கத் தத்துவம்.
அம்பேத்காரியம் என்பது நடுத்தர வர்க்கத் தத்துவம்.
அதிலும் நடுத்தர வர்க்கத்தின் முன்னேறிய
பகுதியினருக்கான (cream of the middle class) தத்துவம். 

கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய மூன்று
தளங்களிலும் செயல்படும் இடஒதுக்கீடு காரணமாக
மற்ற சாதியில் உள்ளது போல, தலித்துகள் மத்தியிலும்
ஒரு வலுவான நடுத்தர வர்க்கம் உருவாகி  இருக்கிறது.
இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் அம்பேத்கார்
என்பது வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒன்று.
அதற்கு முன்பு, அண்மைக்கால இந்திய வரலாற்றில்,
தலித்துகள் மத்தியில் நடுத்தர வர்க்கம் என்ற ஒரு
வர்க்கப் பிரிவே கிடையாது என்ற உண்மையை
உணர்ந்த யாருக்கும் அம்பேத்காரின் சாதனையின்
மகத்துவம் புரியும்.

அம்பேத்காரை பின்வருமாறு மதிப்பிட்டார் ராகுல
சாங்கிருத்தியாயன். (இவர் புத்த மதத் துறவியாக
இருந்து மார்க்சியவாதியாக மாறியவர்; அம்பேத்காரின்
சமகாலத்தவர்).

"அம்பேத்காரின் குறைந்த பட்ச லட்சியமும்,
அதிகபட்ச லட்சியமும் இதுதான்: மற்ற சாதிகளில்
உள்ளது போல, தலித்துகள் மத்தியிலும் ஒரு
நடுத்தர வர்க்கத்தை உருவாக்க வேண்டும்
என்பதுதான்".

ஏகாதிபத்திய எதிர்ப்பில் வெறுமை!
----------------------------------------------------------------
இந்த லட்சியத்தை அடைய,  தம் அரசியல் வாழ்வு
முழுவதும்  பாடுபட்டார் அம்பேத்கார்.பிரிட்டிஷ்
அரசுடன் ஒத்திசைவான அணுகுமுறையைக்
கடைப்பிடிப்பதன் மூலமே இந்த லட்சியத்தை
அடைய இயலும் என்று கணித்த அம்பேத்கார்,
காலம் முழுவதும் ஏகாதிபத்திய ஆதரவு நிலையை
எடுத்தார்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய அன்றைய
மதராஸ் மாகாணத்தில், ஈ வெ ரா பெரியார், பிற்படுத்தப்
பட்ட இடைநிலைச் சாதிகளுக்கும் இடஒதுக்கீடு
மூலம் அரசின் ஆளுகையில் பங்கு பெற்றுத் தந்தார்.
அவரும் பல்வேறு சூழல்களில் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்ட போதிலும்,
தேவையான நேரங்களில் உறுதியான பிரிட்டிஷ்
எதிர்ப்பை மேற்கொண்டார். இதன் விளைவாக,
பலமுறை அவர் அரசால் சிறையில் அடைக்கப் பட்டார்.

ஏகாதிபத்தியத்தால்  அடிமைப் படுத்தப்பட்ட ஒரு நாட்டில்,
ஒரு தத்துவத்தையோ அல்லது அதை முன்மொழிந்த தலைவரையோ மதிப்பிடும்போது, ஏகாதிபத்திய
எதிர்ப்பில் அத்தத்துவத்தின் அல்லது தலைவரின்
பாத்திரம் என்பது உறுதியான இடம் வகிக்கிறது.
"அரசியலை ஆணையில் வை" என்பது மார்க்சியத்தின்
தாரக மந்திரம்.

சாதி ஒழிப்பு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பில்
உள்ளடங்கியது. ஏனெனில் சாதிப் பிளவுகள் உள்ள
ஒரு நாட்டில், இந்தப் பிளவுகளைப் பயன்படுத்தி,
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, ஏகாதிபத்தியம்
தன் ஆட்சியை நீட்டித்துக் கொள்ளும்.

ரங்கநாயகம்மாவின் போதாமை!
--------------------------------------------------------------
இருப்பினும், தமது நூலில் ரங்கநாயகம்மா,
மேற்கூறிய மார்க்சிய அணுகுமுறைகளை முற்றாகப்
பயன்படுத்தி, அம்பேத்காரின் தீர்வுகளை
மதிப்பிடவில்லை. அம்பேத்கார் குறித்தும் அவரின்
தீர்வுகள் குறித்தும் ஒரு மென்மையான
அணுகுமுறையையே கையாண்டுள்ளார். மார்க்சிய
வரையறைக்கு உட்பட்டு, அம்பேத்காரின் தீர்வுகளை
மதிப்பிடுவதில் ரங்கநாயகம்மாவிடம் போதாமை
உள்ளது. அவரின் இந்தப் போதாமை நூலில்
துலக்கமாகத் தெரிகிறது.

சுருங்கக் கூறின், கடிது ஓச்சி மெல்ல எறிந்துள்ளார் ரங்கநாயகம்மா. கடிது எறிய அவரால் இயலவில்லை.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (குறள்)

இந்தியாவின் சாதிமைய அடையாள அரசியலின்
திருவுருவாக ஆக்கப் பட்டு விட்ட, அம்பேத்காரை
முற்ற  முழுக்க எவராலும் விமர்சனம் செய்து விட
முடியாது. இது புறச்சூழலின் நிர்ப்பந்தம். தனி
ஒருவராக நின்று, ரங்கநாயகம்மா  மட்டுமே,
இந்தப் புறச் சூழலை வெற்றி கண்டு விட இயலாது.
எனவே ரங்கநாயகம்மாவின் போதாமைக்குக்
காரணம், அவரின் அகநிலை சார்ந்த காரணிகள்
அல்ல.

இறுதியாக, பாசிச எதிர்ப்புக்காக பரந்துபட்ட
ஐக்கிய முன்னணி கட்ட வேண்டிய தேவை தற்போது
நிலவுகிறது என்றும், அந்த நோக்கத்திற்கு
ரங்கநாயகம்மாவின் நூல் துணை புரியுமா என்றும்
சிலர், குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்
சங்க அறிவுஜீவிகள் ஐயம் எழுப்புகின்றனர்.

இந்த ஐயம் நகைப்பிற்கு இடமானது. மார்க்சிஸ்ட்
கட்சியின் புகழ் மிக்க கோட்பாட்டுச் சிந்தனையாளர்களான பிரகாஷ் காரத்தும், சீதாராம் யெச்சூரியும் நடைபெற்று
வரும் பாஜகவின் ஆட்சி பாசிச ஆட்சி அல்ல என்று
தெளிவாக வரையறுத்துள்ளனர். அவர்களின்
கட்டுரைகள் ஆங்கில ஏடுகளில் வெளிவந்துள்ளன.
எனவே, மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வையில்,
பாசிசமே நிலவாத போது, பாசிச எதிர்ப்பு ஐக்கிய
முன்னணிக்குத் தேவையே இல்லை என்பதுதான்
காரத், யெச்சூரி இருவரின் கருத்துக்கள் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------
முற்றியது.
ரங்கநாயகம்மா நூல் திறனாய்வும், எமது திறனாய்வின்
மீதான விமர்சனங்களுக்கு எமது பதிலுரையும்
இத்துடன் முற்றியது.
****************************************************************