திங்கள், 31 அக்டோபர், 2016

குவான்டம் தியரி முதல் குற்றாலக் குறவஞ்சி வரை!
---------------------------------------------------------------------------------------------
அணி = அழகு. தமிழிலக்கணம் நிறைய அணிகளைப்
பற்றிக் கூறுகிறது.  உவமை அணி, உருவக அணி,
பிறிது மொழிதல் அணி, வேற்றுமை அணி,
வேற்றுப்பொருள் வைப்பணி, சொற்பொருள்
பின்வருநிலை அணி முதலிய பல்வேறு அணிகள்
குறித்து பள்ளி மாணவர்களே கற்றிருப்பர்.
**
இங்குள்ள கட்டுரையில் பயிலும் அணி வஞ்சப்
புகழ்ச்சி அணி ஆகும். புகழ்வது போலப் பழித்தலும்,
பழிப்பது போலும் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி
அணி ஆகும். நிற்க.
**
அஃது அவ்வணியாகுமாற்றைப் புலப்படுத்துக
என்றால் பொருள் என்ன?  அ + அணி+ஆகும்+ ஆறு =
அவ்வணியாகுமாறு. ஆறு =வழி. அந்த அணியாக
எப்படி ஆகிறது என்றும் கூறல் வேண்டும். இங்கு,
ஆறு+ ஐ என்ற புணர்ச்சியில் ஒற்று இரட்டித்து
ஆற்றை என வருகிறது. இதில் செயல்படும் புணர்ச்சி
விதி பற்றியும் அறிந்து கொள்ளவும். இது போல,
ஒற்று இரட்டித்துப் புணரும் பிறிதோர் எடுத்துக்
காட்டினைத் தருக.
**
உலக வரலாற்றிலேயே எமது பதிவுகளில் மட்டுமே,
ஒரே நேரத்தில் குவான்டம் தியரி முதல் குற்றாலக்
குறவஞ்சி வரை எடுத்து இயம்பப்படும்.
போஸ்-ஐன்ஸ்டின் கன்டென்ஸேட் முதல் புணர்ச்சி
இலக்கணம் வரை பயில முடியும்.
---------------------------------------------------------------------------------------------            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக