ஸ்டாலின் மாவோவை எதிர்ப்பது என்றால்,
அதற்குத் தகுந்த காரணம் சொல்ல வேண்டாமா?
ஸ்டாலீனும் மாவோவும் மக்கள் விரோதிகளா?
--------------------------------------------------------------------------------------
பெருந் தொழில்களால் ஆன மையப் படுத்தப்பட்ட
பொருளாதாரத்தைத் தவிர்த்த மாவோ கூட, சீனாவில்
அணுகுண்டு தயாரித்தார். மாவோ மறைந்தது 1976இல்.
அதற்கு வெகுகாலம் முன்னதாகவே, அதாவது 12
ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1964இல் அணுகுண்டு
தயாரித்தார் மாவோ. அதே போல் ஸ்டாலினும் 1949
ஆகஸ்டில் அணுகுண்டு தயாரித்தார்.
**
மாவோவும் ஸ்டாலினும் தவறு செய்தார்களா?
இன்றும் கூட, சீனாவிலும் ரஷ்யாவிலும் அணுஉலைகள்
செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனவே.
**
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் மின்சாரமே இல்லை
என்பதால், அவர்கள் குறிப்பாக மின்சாரம் பற்றிக்
கருத்துக் சொல்லவில்லை. ஆனால் லெனின் காலத்தில்
மின்சாரம் பரவலாகி விட்டது.
**
"சோவியத் ஆட்சி அதிகாரமும் மின்சாரமும் சேர்ந்தால்
சோசலிசத்தை அடைய முடியும்" என்று லெனின் சொன்னாரே!
அதை லெனினும் ஸ்டாலினும் செய்து காட்டினார்கள்!
இவ்வளவுக்கும் லெனினுக்கு அணுமின்சாரம் பற்றி
எதுவும் தெரியாது. 1924ஆம் ஆண்டிலேயே லெனின்
மறைந்து விட்டார். 1940களில்தான் அணுகுண்டும்
தொடர்ந்து அணுமின்சாரமும் தயாரிக்கப் பட்டன.
**
எனவே மூல ஆசான்களில் ஸ்டாலின். மாவோ இருவர்
மட்டுமே அணுகுண்டு பற்றியும் அணுமின்சாரம்
பற்றியும் அறிந்து இருந்தனர்.
**
அணுசக்தியை ஆக்க பூர்வமான வழியில்
பயன்படுத்தவே முடியாது என்ற பதில்
மார்க்சியத்துக்கு எதிரான பதில் ஆகும்.
**
அணுசக்தியை ஆக்க பூர்வமான வழியில்
மனிதனால் பயன்படுத்த முடியுமா, முடியாதா?
முடியாத என்ற பதில் கடைந்தெடுத்த பிற்போக்குத்
தனமான பதில் ஆகும். மேலும் அது மானுடத்திற்கே
எதிரான பதில் ஆகும்; அறிவியலுக்கும் எதிரான
பதில் ஆகும்.
**
மார்க்சியம் என்பது கனவு அல்ல. அது அறிவியல்.
எனவே அணுஉலை வேண்டாம் என்ற கருத்து
1) அறிவியலுக்கு எதிரானது
2) மனித குலத்துக்கு எதிரானது
3) மார்க்சியத்திற்கு எதிரானது.
4) உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கும்,
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் எதிரானது.
**
போல்ஷ்விக் கட்சி இப்பிரச்சினையில் எடுத்த
நிலைப்பாட்டை விளக்கி வெளியிட்ட பிரசுரத்தை
தோழர்கள் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை அணுஉலை குறித்த கோட்பாட்டுப்
பிரச்சினையை மட்டும் பேசுகிறது. ஓரிடத்தில்
அணுஉலையோ அல்லது வேறு ஏதேனும்
பெருந்தொழிலுக்கான திட்டமோ (project) வரும்போது,
அதற்கு நிலம் கொடுப்பவர்கள் முதல், அத்திட்டம்
செயல்பாட்டுக்கு வந்தால் யாருடைய வாழ்வாதாரம்
பாதிப்படையுமோ அவர்கள் வரை அனைவருக்கும்
உரிய இழப்பீடும், மாற்றுக் குடியமர்த்தலும், மாற்று
வாழ்வாதாரம் அல்லது வேலை ஏற்பாடு செய்வதும்
அரசின் பொறுப்பு. அதை அரசு சரிவரச் செய்யத்
தவறினால், மக்களைத் திரட்டி உரிய போராட்டங்களை
முன்னெடுத்து மக்களின் குறை தீர்ப்பது மார்க்சிஸ்டுகளின்
கடமை. இதில் என்ன ஐயம்?
அவர் அரசு சாரா நிறுவனம் (NGO Non Governmental Organisation)
சார்ந்து கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கிறார்.
அவரின் அரசியல் அவருக்கு நிதி வழங்கும் NGO
அமைப்பின் அரசியலைத் தூக்கிப் பிடிப்பது.
தோழர் அரங்க குணசேகரன் அவர்களுக்கு,
-----------------------------------------------------------------------------------
இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது.
எனவே இந்திய அரசின் ஊழியர்கள் மக்களிடம்
இருந்து சம்பளம் பெறுகிறார்கள். ஆகவே அவர்கள்
மக்களின் ஊழியர்கள். நிற்க. கேள்வி கேட்ட திரு.
சிவா ஏரம்பு ஈழத் தமிழர்; வெளிநாட்டில் வாழ்பவர்.
அவரின் கேள்விக்கு உரிய பதிலைச் சொல்ல வேண்டும்.
மற்றப்படி, திரு உதயகுமார் அவர்கள் என்னுடைய
அஜெண்டாவிலேயே இல்லை.
**
நான் கோட்பாட்டுப் பிரச்சினைகளில் மட்டுமே தற்போது
கவனம் செலுத்துகிறேன், என்னுடைய பணிச்சுமை காரணமாக. தனிநபர் சார்ந்து சர்ச்சைகளில் ஈடுபட
விரும்பவில்லை. போல்ஷ்விக் கட்சிப் பிரசுரத்தில்
திரு உதயகுமார் பற்றி என்ன குறிப்பிடப் பட்டுள்ளதோ,
அதை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
மார்க்சியம் தொடர்பான ஒரு முக்கியமான கோட்பாட்டுப்
பிரச்சினை (Theoretical position) இக்கட்டுரையில் முன்வைக்கப்
பட்டுள்ளது. அது தவறானது என்றால், அதை தவறு என்று
நிரூபிக்கும் உரிமையும் கடமையும் உங்களுக்கு உண்டு.
ஆனால் உங்களின் பின்னூட்டங்களில், மார்க்சியம்
தவிர பிற அனைத்தும் இருக்கிறது. இது "பயனில் சொல்
பாராட்டுதல்" ஆகும்.
**
கட்டுரை கூறுவது மார்க்சியம் அல்ல என்றால்,
எது மார்க்சியம் என்பதைத் தாங்கள் எடுத்துக்
கூறலாமே!
அணுசக்தியை மனித குலத்தால் ஆக்க வழியில்
பயன்படுத்த முடியும் என்ற மார்க்சிய நிலைபாட்டில்
மாற்றம் ஏற்படவில்லை. அது இன்றும் பொருந்தும்
கோட்பாடு. எனவே ஸ்டாலினும் மாவோவும் இன்று
உயிருடன் இருந்தால் இதைத்தான் வலியுறுத்தி
இருந்திருப்பார்கள்.
அடுத்து, கண்மூடித்தனமான அணுஉலை எதிர்ப்பு
என்பது பின்நவீனத்துவக் கோட்பாடே. மார்க்சிய
எதிர்ப்புக்கு கோட்பாடே.
அணுஉலைத் தொழில்நுட்பமானது ஒரு தொழில்நுட்பம்
என்ற வகையில் பாதுகாப்பாகச் செயல்பட வல்லதே.
(It is a safety technology).
அது மனிதனுக்குக் கட்டப்பட்டதே.
(humanly controllable and well within the manageable dimensions)
அது மனிதனுக்குக் கட்டுப்படாத தொழில்நுட்பம் என்ற பின்நவீனத்துவத்தின் கூற்று ஏற்கத் தக்கதல்ல. இங்கு கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இதுதான்: இந்தத் தொழில்நுட்பம் கூறுகிற
பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்க
வேண்டும். இதை நாம் கண்காணிக்க வேண்டும்.
அவ்வளவே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக