திங்கள், 10 அக்டோபர், 2016

அணுஉலைத் தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?
-----------------------------------------------------------------------------------------
அணுஉலைத் தொழில்நுட்பம் என்பது பாதுகாப்பானது
(safe technology) என்றும், மனிதனால் கையாளத் தக்கது என்றும்
மனித ஆற்றலுக்கு உள்ளடக்கியது (well within the manageable dimensions) 
என்றும் அறிவியல் கூறுகிறது. இதை மார்க்சியம் ஏற்றுக்
கொண்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே  பலமுறை
கூறிவிட்டபடியால், அது இக்கட்டுரையில் மீண்டும்
கூறப்படவில்லை. செர்நோபில், புகுஷிமா விபத்துகளுக்குப்
பின்னர், அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு,
நவீன தலைமுறை அணுஉலைகள் வடிவமைக்கப்
படுகின்றன. தொடர்ந்து R&D  (Research and Development)
மூலமாக அணுஉலைத் தொழில்நுட்பம் ஒவ்வொரு
நிமிடமும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
மேலும் மேலும் பாதுகாப்பானதாக உருவாகிக்
கொண்டுதான் இருக்கிறது.
**
பின்நவீனத்துவர்கள் அறிவியலையே மறுப்பதால்
அவர்கள் அணுஉலையை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.   

இருப்பினும், இன்றும் சில கேள்விகள் பதிலுக்காகக்
காத்திருக்கின்றன. எதிர்கால அறிவியல் அதற்கான
விடைகளைக் கண்டு பிடிக்கும் என்பது உறுதி.
கண்மூடித்தனமான அவநம்பிக்கை (blind disbelief)
என்பது மானுடத்திற்கே எதிரானது.

கோபாலன் ஐயா, தாங்களும் குறள்  போல் நீடூழி
வாழ வாழ்த்துகிறேன்.


பின்நவீனத்துவர்களின் கருத்தில் உண்மை என்ற ஒன்று
இல்லவே இல்லை. எல்லாம்  வெறும் அபிப்பிராயங்களே.
பூமி உருண்டையானது என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையும்
அவர்களைப் பொறுத்த மட்டில் அபிப்பிராயமே.
பூமி தட்டையானது என்பதும் அபிப்பிராயமே. இரண்டையும்
சம அந்தஸ்தில் வைப்பவர்கள் அவர்கள்.


தங்கள் கவிதைகளைப் படிக்க ஆவல் உடையேனாய்
உள்ளேன் அம்மா. "செவிநுகர் கனிகளாய்" இருக்கக் கூடும்
என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருண்மைக் கவிதையாய்
இருந்தால் என் செய்வது என்ற அச்சமும் உள்ளது.
எப்படியாயினும் வெளியிடுங்கள், படிக்கக் காத்திருக்கிறேன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக