வெள்ளி, 28 அக்டோபர், 2016

நத்தை வேகத்தில் வேலை செய்வதை மார்க்சியம்
ஏற்றுக் கொள்ளவில்லை!
-------------------------------------------------------------------------------------------
உழைப்பு, உழைப்புச் சக்தி, வேலைநேரம் ஆகியவற்றை
எல்லாம் கராறாகவும் துல்லியமாகவும் ஆராய்ந்து,
'உபரி மதிப்பு'  என்னும் கோட்பாட்டை வகுத்தார் காரல்
மார்க்ஸ். அவர் உழைப்புச் சக்தி என்று கணக்கில்
கொண்டது சராசரியான உழைப்புச் சக்தியே தவிர,
சராசரிக்கும் வெகு கீழான உழைப்புச் சக்தியை அல்ல.
**
உதாரணமாக, ஒரு மணி நேரத்தில், சில பெட்டிகளுக்கு
ஆணி அடிக்க வேண்டும் என்றால், சிலரால் 150
பெட்டிகளுக்கு ஆணி அடிக்க முடியும்; மந்தமாக
வேலை செய்யும் சிலரால் 50 பெட்டிகளுக்கு மட்டுமே
ஆணி அடிக்க முடியும். இங்கு சராசரியான 100
பெட்டிகளுக்கு ஆணி அடிப்பதையே காரல் மார்க்ஸ்
எடுத்துக் கொண்டார்.
**
சோவியத் ஒன்றியத்தில் புரட்சியின் வெற்றிக்குப்
பின்னர், ஆலைகளில் எத்தகைய வேலைக்
கலாச்சாரத்தை லெனின் செயல்படுத்தினார் என்பதை
மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். சுபோத்னிக்குகள்
பற்றியும் மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். ஆனால்
குட்டி முதலாளித்துவப் பேராசிரியர்கள் இதை அறிய
மாட்டார்கள்.
**
ஆக, மெதுவாக வேலை செய்வதற்கும் சோஷலிசத்திற்கும்
என்ன சம்பந்தம் என்று கேட்பது பொருளற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக