ரங்கநாயகம்மா இப்படி எழுதவே இல்லை. இது மிக
மோசமான திரிப்பு. ஒருவரை விமர்சிக்கும்போது, அவர்
எழுதாத ஒன்றை வைத்துக் கொண்டு விமர்சிப்பது
குட்டிமுதலாளித்துவம் கடைப்பிடிக்கிற தந்திரம். இது
தவறானதும் தோல்வியைத் தருவதுமான தந்திரம்.
**
சுரண்டுகின்ற ஆளும் வர்க்கமானது இடஒதுக்கீட்டை
ஒரு பிச்சையாகக் கருதுகிறது என்று தெளிவாகச்
சொல்கிறார் ரங்கநாயகம்மா. ஆளும் வர்க்கத்தைக்
கண்டிக்கும் வாக்கியம் இது. இதைத் திரித்துப்
புரட்டுவதன் மூலம், அப்படிப் புரட்டுவோரின் ஆளும்
வர்க்கச் சார்பு வெளிப்பட்டு விடுகிறது.
**
இடஒதுக்கீடு என்பது மார்க்சியப் பார்வையில் ஒரு
சீர்திருத்தம் ஆகும். அதுவே விடுதலையைப் பெற்றுத்
தந்து விடாது. இடஒதுக்கீடு விடுதலைப் பெற்றுத்
தரும் என்று மாயாவதி போன்றவர்கள் கருதலாம்.
மார்க்சியம் அவ்வாறு கருதுவதில்லை.
**
குஜராத்தில் பட்டேல்களும், ஹரியானாவில் ஜாட்களும்
இடஒதுக்கீடு கோரிப் போராடி வருகின்றனர். முற்பட்ட
வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை
முற்பட்ட சாதிகள் வலுவாக எழுப்பி வருகின்றன.
இவையெல்லாம் ஆளுகின்ற அரசுகளால் வழங்கப்
படுமானால், அவை சாதி ஒழிப்பைச் சாத்தியம்
ஆக்குமா?
**
வர்க்கப் போராட்டத்தை ஒழித்து விட்டு, அந்த இடத்தில்
இடஒதுக்கீட்டை வைப்பதை மார்க்சியம் ஏற்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக