வெள்ளி, 14 அக்டோபர், 2016

மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகத்தின் அடிப்படை
நிலைபாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. மார்க்சிய
சிந்தனைப் பயிலகம் என்பது மார்க்சியக் கல்வி
பெறுதலையும் வழங்குதலையும் இலக்காகக்
கொண்டது.

அடிப்படை நிலைப்பாடுகள்:
------------------------------------------------------
1) மார்க்சிய மூல ஆசான்கள் ஐவர் (மார்க்ஸ், எங்கல்ஸ்,
லெனின், ஸ்டாலின், மாவோ). எனினும் மார்க்சியம்
என்பது மூல ஆசான்களின் போதனைகளுடன் நின்று போகவில்லை. தொடர்ந்து வளர்ந்து கொண்டே
இருக்கிறது; காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்
கொண்டும் உள்ளது.

2) உலகை விளக்கிக் கூறுவதோடு மார்க்சியம் நின்று
விடுவதில்லை. மார்க்சியம் என்பது உலகை மாற்றி அமைப்பதற்கான தத்துவம். எனவே அது
நடைமுறைக்கான தத்துவம், அதாவது
செயல்பாட்டுக்கான தத்துவம்.

3) மார்க்சியம் மனித மையத் தத்துவம்.
(human centered philosophy).  உலகை மாற்றியமைப்பது
மனிதனின் கடமை. உலகை மாற்றியமைப்பதில்
கடவுளுக்கோ அல்லது வேறெந்த அமானுஷ்யச்
செயல்களுக்கோ இடமில்லை. தற்செயலாகவும்
உலகம் மாறப்போவதில்லை.

4) பாட்டாளி வர்க்கக் கட்சி இல்லாமல் மார்க்சியத்தைச்
செயல்படுத்த முடியாது. எனவே கட்சி கட்டுவதும்
கட்சியில் செயல்படுவதும் அவசியம்.

5) மார்க்சியம் என்பது மனித குல அறிவின்
ஒட்டுமொத்தம் என்றார் லெனின். எனவே மார்க்சியக்
கல்விக்கு எல்லைக் கோடு வரையப்படவில்லை.
மனிதகுலம் இதுவரை சேகரித்து வைத்திருக்கும்
அறிவுச் செல்வம் அனைத்தையும் கற்பதே
மார்க்சியக் கல்வி ஆகும்.

6) மார்க்சியம் கற்றலும் கற்பித்தலும் மார்க்சியத்தை
நடைமுறைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க
வேண்டும். அத்தகைய நோக்கமற்ற கற்றலும்
கற்பித்தலும் பயனற்றவை; மார்க்சியமற்றவை.

இவை எமது அடிப்படை நிலைப்பாடுகள்.  
-------------------------------------------------------------------------------------------------
எமது கட்டுரைகள், உரைகள், கருத்து வெளியிடல்கள்
ஆகிய அனைத்தும் மேற்கூறிய அடிப்படை
நிலைப்பாடுகளைப்  பின்பற்றி அமைபவை.
*****************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக