வெள்ளி, 14 அக்டோபர், 2016

"மார்க்சியம்" என்பது தெளிவாக வரையறுக்கப்
பட்டுள்ளது. மார்க்ஸ் எங்கல்ஸ் இருவரின் போதனைகளே
மார்க்சியம் என்ற போதிலும், அது மார்க்சின் பெயரால்
அழைக்கப் படுவதற்கு எங்கல்ஸ் ஒப்புதல் அளித்தார்.
மேலும் மார்க்சியம் ஒரு தத்துவமாக அனைவராலும்
கருதப்படுகிறது.
**
ஆனால், மார்க்ஸாலஜி என்பது அண்மையில் தோன்றிய
ஒரு சொல். இது மார்க்சியத்தை அறிந்திருப்பது என்ற
பொருளைத் தருகிறது. அதாவது, Marxology means Marxian knowledge.
எனவே மார்க்சியம் என்ற சொல்லுக்கும் மார்க்ஸாலஜி
என்ற சொல்லுக்கும் வெளிப்படையாகப் புலனாகக்
கூடிய பொருள் வேறுபாடு உள்ளது. இரண்டும் ஒன்றல்ல.
மார்க்ஸாலஜி என்பது வெறுமனே மார்க்சிய அறிவு
என்ற பொருளைத் தருகிறது. அவ்வளவே.
**
மார்க்ஸாலஜிஸ்ட் என்ற சொல்லுக்குத் தமிழில் ஒரு
புதிய சொல் கண்டறியப் பட வேண்டும். தற்போது
மார்க்சிய அறிஞர் என்ற சொல்லே பயன்படுத்தப்
படுகிறது. இது குழப்பத்தைத் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக