வியாழன், 20 அக்டோபர், 2016

வினோத் மிஸ்ரா! "எழுபதின் பத்தாண்டுகளை
விடுதலையின் பத்தாண்டுகளாக மாற்றுவோம்" 
என்ற சாரு மஜூம்தாரின் அறைகூவலை ஏற்று
நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தவர் தோழர்
வினோத் மிஸ்ரா. பொறியியல் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்த தோழர் VM படிப்பைத் துறந்து
புரட்சியில் தம்மை அர்ப்பணித்தார்.
**
தலைவர் சாருவின் மறைவுக்குப் பிறகு, மா-லெ
கட்சிக்குத் தலைமை ஏற்றார். இவரின் தலைமையில்
கீழ், கட்சி அநேக அழித்தொழிப்புகளை (ANNIHILATIONS)
நடத்தியது. (இதே காலக்கட்டத்தில் இன்னொரு பெரிய
மா-லெ கட்சியான மக்கள் யுத்தமும் நிறைய
அழித்தொழிப்புகளை நடத்தியது).
------------------------------------------------------------------------------------------------

இந்தியப் புரட்சியின் வரலாற்றில் தோழர் வினோத்
மிஸ்ரா குறிப்பிடத்தக்க ஓர் இடம் பெற்றவர். தோழர்
பி.டி.ரணதிவே புரட்சியை நடத்துமாறு அறைகூவல்
விடுத்தார். ஆனால் புரட்சியை நடத்த இயலவில்லை.
ஆனால், நக்சல்பாரிக் காலத்தில் இந்தியப் புரட்சியை
ஒரு சில மா-லெ தலைவர்கள் நடத்திக் காட்டினர்.
தோழர் VM அவர்களில்  ஒருவர்.
**
அதே நேரத்தில், மக்கள் இயக்கங்களைக் கட்டுவதில்
என்.ஜி.ஓ.க்களுக்கு முதன்மையான ஒரு பாத்திரம்
வழங்கி, தோழர் VM இமாலயத் தவறுகளைச் செய்தார்.
பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மைப் பாத்திரத்தை
மறுத்து, அதன் இடத்தில் என்.ஜி.ஓ.க்களை வைத்தார்
தோழர் VM. இது இந்தியப் புரட்சிக்குப் பெரும்
பின்னடைவை ஏற்படுத்தியதோடு, கட்சிக் 
கலைப்புவாதத்திற்கும் (liquidationism) இட்டுச் சென்றது.
**
விளைவு: 1) ஆயுதப் படைக்குழுக்களைக் கலைத்தார்.
2) தலைமறைவு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு,
கட்சி வெளிப்படையாக இயங்கியது. 3)நாடாளுமன்றப்
பாதையில் சரணடைந்தார். 4) கட்சியின் பாரம்பரியம்
மிக்க புரட்சிகர சாரத்தை என்.ஜி.ஓ.க்களிடம்
இழந்தார். 5) நம் அன்புக்குரிய இந்தியாவின் உழைக்கும்
மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு புரட்சியாளராக
இருந்த தோழர் VM பின்னர் கலைப்புவாதியாக மாறியது
இந்தியப் புரட்சியின் ஒரு சோகம் ஆகும்.
**
தோழர் VM இளம் வயதில் (51 வயது) மறைந்த அன்று,
VM கட்சித் தோழர்கள் மட்டுமல்ல, அனைத்து ML
தோழர்களும் சோகத்தில் ஆழ்ந்தோம். புதிய வாசகர்களுக்கு
தோழர் VM குறித்த ஒரு சரியான புரிதலை வழங்கும்
பொருட்டே இந்தச் சிறுகுறிப்பு. (சில பின்னூட்டங்களில்
தோழர் VM பற்றிய குறிப்பு இருந்ததால் இந்த வரிகள்
எழுதப்பட்டுள்ளன. மன்னிக்கவும். நன்றி.)   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக