வியாழன், 6 அக்டோபர், 2016

மூலதனக் குவிப்பு (accumulation of capital) நூல் மட்டுமல்ல,
ரோசா லக்சம்பர்க் எழுதிய எந்த நூலும், நான் அறிந்த
வரை, தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை. அந்த
நூலைப் படித்தவர்களே மிகவும், மிக மிகக் குறைவு.
படித்தபின் அந்த நூலைப் பற்றி விவாதிக்க முடியாது.
அதற்கு வழியே கிடையாது. ஏனெனில் இந்த நூலைப்
படித்தவர்களை, தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணி
விடலாம். ஆந்திரத்திலும்  கேரளத்திலும் ஒப்பீட்டளவில்
இந்த நூலைப் படித்தவர்கள் அதிகம். (கவனிக்கவும்:
ஒப்பீட்டளவில்). இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு
கன்னிமாராவில் உள்ளது. அமேசான் மூலம்
இணையத்திலும் வாங்கலாம். 


இன்னும் சொல்லப்போனால், மார்க்சியர்களை விட,
மார்க்சியர் அல்லாதவர்கள்தான் (non marxists) இந்த
நூலை அதிகம் படித்து இருக்கிறார்கள்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக