சனி, 29 அக்டோபர், 2016

ஊழியர்-நுகர்வோர் முரண்பாட்டின் விஸ்வரூபம்!
-----------------------------------------------------------------------------------------
அருள்கூர்ந்து கள நிலைமைகள் (ground realities) எப்படி
இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு பேசுமாறு
வேண்டுகிறேன். ஜெயமோகன் குறிப்பிட்ட  ஒரே ஒரு
செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவது
சரியல்ல. இன்று இந்த 2016இல் நுகர்வோர் விழிப்புணர்வு
கணிசமாக வளர்ந்து நிற்கிறது.
**
தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை
மதிக்கின்றன, வாடிக்கையாளர் சேவையில்
முன்னணியில் இருக்கின்றன என்பது மக்களிடம்
நிலவும் கருத்து. இது எவ்வளவு தூரம் உண்மை
என்பது வேறு. எனவே பொதுத்துறை வங்கிகளிடம்,
BSNL, அஞ்சல் துறைகளிடம் மக்கள் நிரம்ப
எதிர்பார்க்கிறார்கள்.
**
சென்னை நகரில் உள்ள 63 BSNL CSCகளில்
(CSC Customer Service Center) தினசரி வாடிக்கையாளர்கள்
வந்து சண்டை போடுகிறார்கள். இது போன்ற
நிகழ்வுகளை ஆயிரக் கணக்கில் பார்த்து
வருபவர்கள் நாங்கள்.
**
சில ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு SSAவில்,
(SSA Secondary Switching Area) ஒரு BSNL JE பெண்மணியை,
ஊர்க்காரர்கள் எக்சேஞ்சில் வைத்துப் பூட்டி
விட்டனர். இன்று குதிக்கும் போராளிகள்
அன்று எங்கே போய் இருந்தனர்?
**      
எனவே நிர்வாகமும் சரி, தொழிற்சங்கமும் சரி,
ஊழியர்களிடம் ஒரே ஒரு விஷயத்தைத்தான்
வலியுறுத்தி வருகிறோம். Public dealings சீட்டுகளில்,
குறிப்பாக, பணம் செலுத்தும் கவுன்டர்களில்
பணியாற்றும் ஊழியர்கள் கூடுதல் திறனுடன்
வேலை செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறோம். நுகர்வோரை அலட்சியமாக
நடத்துவது தொழிலாளி வர்க்கப் பண்பு அல்ல.
**
இங்கு ஒட்டுமொத்த விவகாரமும் நுகர்வோர்-ஊழியர்
முரண்பாடு என்ற விஷயம்தான். அதை எப்படிக்
கையாள்வது என்பது பற்றித்தான் நாங்கள்
அக்கறை கொள்கிறோம். ஜெயமோகனிடம்
கனக்குத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்
எழுதப்படும் கருத்துக்கள் எங்களின் அக்கறைக்கு
உரியன அல்ல. அவற்றை நாங்கள் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறோம்.

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக