நியூட்டன் அறிவியல் மன்றத்தின் வீடியோக்களுக்கு
எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!
காழ்ப்புணர்வு மிகுந்த ஜெயமோகனின் விமர்சனத்திற்கு
பதிலளிக்கும் எமது தன்னிலை விளக்கம்!
ஜெயமோகனே மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!!
--------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------
1) கேப்டன் நியூஸ் செய்தியாளர், நோபல் பரிசு குறித்து
என்னிடம் நேர்காணல் செய்து, ஒரு வீடியோவை
யூடியூபில் பதிவேற்றம் செய்தார். 26 நிமிடங்கள்
ஓடும் இந்த வீடியோவை இதுவரை 263 பேர் மட்டுமே
பார்த்துள்ளனர்.
2) வேதியியல் நோபல் பரிசு குறித்த எனது எட்டு நிமிட
தமிழ்ச் சிற்றுரை யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதை இதுவரை 226 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.
3) இயற்பியல் நோபல் பரிசு குறித்த எனது 10 நிமிட
தமிழ்ச் சிற்றுரையை நியூட்டன் அறிவியல் மன்றம்
யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தது. இதை 100 பேர்
மட்டுமே இதுவரை பார்த்துள்ளனர்.
(பதிவேற்றத் தேதி: 26,10,2016).
4) உலகின் மக்கள் தொகை இன்றைய தேதியில்
750 கோடி. இந்த 750 கோடிப் பேரில் இயற்பியல்
வேதியியல் நோபல் பரிசுகள் 2016 குறித்து, நான்
ஒருவன் மட்டுமே தமிழில் அறிவியல் விளக்கம்
அளித்துள்ளேன்.
5) கூகிள் தேடலில், "Physics Nobel 2016 explained in Tamil" என்று
அடித்தால் கிடைக்கும் 9 லட்சத்து 32,000 முடிவுகளில்,
என்னுடைய விளக்கம் 5ஆவது இடத்திலேயே கிடைத்து
விடுகிறது. அதுபோல் யூடியூபில் இதே பொருளில்
தேடினால் கிடைக்கும் 200 வீடியோக்களில் தமிழில்
விளக்கம் தரும் வீடியோ என்னுடையது மட்டுமே.
6) என்றாலும், பார்ப்பவரின் எண்ணிக்கை 263 பேர்,
200 பேர், 100 பேர் என்று குறைவாகவே உள்ளது. இதே
விளக்கத்தை நான் ஆங்கிலத்தில் அளித்து இருந்தால்,
இந்நேரம் பத்தாயிரக் கணக்கில் பார்த்து இருப்பார்கள்.
7) பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
என்ன வழி என்று சிந்தித்தபோது ஒரு வழி
புலப்பட்டது. அதுதான் நாகர்கோயில் சென்று
எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்திப்பது. அடிக்கடி
திருநெல்வேலி செல்லும் எனக்கு நாகர்கோவில்
செல்வது ஒரு பொருட்டே அல்ல.
8) தோழர் ஜெயமோகனுடன் தற்போது நட்பில் நான்
இல்லாவிட்டாலும், ஒரு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில்,
25 ஆண்டு காலம் தோழர் ஓ பி குப்தாவின் (எங்கள்
NFTE BSNL சங்கத் தலைவர்) தலைமையை ஏற்றுத்
தீவிரமாகச் செயல்பட்டவர்கள் நாங்கள். சங்க
அங்கீகாரத் தேர்தலில் தலைவர் குப்தாவின்
வெற்றிக்காக இரவு பகலாக மாடாய் உழைத்தவர்கள்
நாங்கள். NFTE ஜிந்தாபாத், ஒர்க்கர்ஸ் யூனிட்டி
ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத் என்று லட்சக்
கணக்கான முறை முழங்கியவர்கள் நாங்கள்.
9) அந்த நட்பின் அடிப்படையில் தோழர் ஜெயமோகனைச்
சந்தித்து, அவரிடம் இருந்து, நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் அறிவியல் விளக்க வீடியோக்கள் குறித்து
ஒரு கண்டன அறிக்கையைப் பெற்று, அதை
அவரின் வலைப்பூவில் வெளியிடச் செய்வது என்பதே
எங்களின் முடிவு.
10) ஆம், கண்டன அறிக்கைதான்! ஜெயமோகன் எதை
எதிர்க்கிறாரோ, அதை ஆதரித்தே தீர வேண்டும் என்று
கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு குட்டி முதலாளித்துவக்
கூட்டமே சமூகத்தில் அம்மணமாகத் திரிகிறது. இந்தக்
கூட்டத்தையே நாம் குறி வைக்கிறோம்.
11) "நியூட்டன் அறிவியல் மன்றத்தின் வீடியோக்கள்
தரக்குறைவானவை; இதைத் தயாரித்த இளங்கோ
கீரைப் பாத்திக்கு தண்ணீர் பாய்ச்சக் கூட அருகதை
இல்லாதவர்" என்று தோழர் ஜெயமோகன் ஒரு
கண்டனத்தைப் பதிவு செய்தாலே போதும்.
11) அதன் பிறகு, நடப்பதெல்லாம் மந்திரத்தில்
மாங்காய் விழுந்தது போல் நடந்து விடும்.
முருங்கை பெருத்தது போல ஊளைச் சதையால்
பெருத்துக் கிடக்கும், "ஜெயமோகன் எதிர்ப்பு
ஐக்கிய முன்னணி"யின் தலைவர்கள், அ மார்க்ஸ்
முதல் யமுனா ராஜேந்திரன் வரை நமது வீடியோக்களை
தாங்கள் பார்ப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும்
பார்க்க வைத்து விடுவார்கள். நமது வீடியோக்களை
ஆதரித்து அறிக்கை விடுவார்கள்.
அ) குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள்
ஆ) சிந்தனைக் குஷ்டரோகிகள்
இ) பின்நவீனத்துவ நாற்றம் பிடித்தவர்கள்
ஈ) புழுவினும் கீழான அற்பப் பதர்கள்
உ) ஈனத் தற்குறிகள், இத்தியாதி, இத்தியாதி
என்று ஜெயமோகன் எதிர்ப்புச் சாக்கடையில்
திளைக்கும் அத்தனை பேரும், யூடியூபில் நமது
வீடியோக்களைத் தேடி எடுத்துப் பார்க்க
ஆரம்பித்து விடுவார்கள். ஒரே நாளில்,
பாம்பு கடித்தவனுக்கு விஷம் ஏறுவது போல,
நமது வீடியோக்களைப் பார்க்கிறவர்களின்
எண்ணிக்கை உச்சம் தொட்டு விடும்.
இதுதான் எமது உபாயம்! இதைச் செயல்படுத்தப்
போகிறோம். அதன் பிறகே இக்கட்டுரையின்
தலைப்பு மெய்ந்நிலை உறும்.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: இக்கட்டுரையில் பயிலும் அணி யாது?
அஃது அவ்வணியாகுமாற்றைப் புலப்படுத்துக.
பின்குறிப்பு-2: ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தையும்,
ஜெயமோகன் ஆதரவு--ஜெயமோகன் எதிர்ப்பு என்று
பைனரியாகச் சுருக்கிப் பார்க்கும் MYOPIA
நோயாளிகளுக்கு இக்கட்டுரை உவப்பானதல்ல.
இந்தப் பிரபஞ்சம் ஒரு Jeyamohan condensate அல்ல.
(condensate குறித்து அறிய, எமது வீடியோக்களைப்
பார்க்கவும்.)
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக