சனி, 15 அக்டோபர், 2016

வலிந்து ஒரு புதிய சொல்லை இங்கு யாரும்
திணிக்கவில்லை. ஐரோப்பாவில் அறிவாளிகள்,
படிப்பாளிகள் என்று பலரும் மார்க்சியம் கற்க ஆரம்பித்தனர். மார்க்சிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. எனவே
மார்க்ஸாலஜி என்ற சொல்
பிறந்தது. இச்சொல்லின் தாயகம் ஐரோப்பா.
**
Biology, Zoology என்பது போல Marxology. எந்தச் சொல்லும்
தேவையின்றி உருவாவதில்லை. Marxology யைத்
தொடர்ந்து மார்க்ஸாலஜிஸ்ட் (Marxologistஎன்ற சொல்
இயல்பாகவே பிறந்தது.
**
தமிழ்ச் சூழலில் நான்தான் இதை இங்கு முதன் முதலில்
அறிமுகப் படுத்தி உள்ளேன். தமிழ்நாட்டிலும்,
கட்சி சாராமல், கட்சிக்கு அப்பாற்பட்டு மார்க்சியம்
கற்றவர்கள், கற்கிறவர்கள் இருப்பதால், இங்கும்
இந்தச் சொல்லின் தேவை உள்ளது.
**
இந்த ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்கள்
கண்டுபிடிக்கப் பட வேண்டும். அப்போது சிக்கல் தீர்ந்து விடும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக