சனி, 8 அக்டோபர், 2016

பதிவில் உள்ள கட்டுரை "அணுஉலை ஆதரவு-எதிர்ப்பு"
என்ற பொருளில் எழுதப் படவில்லை. மார்க்சியத்தைக்
கற்க விரும்பும் புதியவர்களின் வேண்டுகோளை ஏற்று,
மார்க்சிய பாலபாடம் சார்ந்த சில விஷயங்களை
எளிமையாகச் சொல்லும் பொருட்டு, நடைமுறை
உதாரணத்தைக் கொண்டு (practical examples) விளக்கும்
பொருட்டு எழுதப்பட்டது.
**
இருப்பினும், இக்கட்டுரை அணுஉலை குறித்த சரியான
மார்க்சிய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை
எழுப்பி உள்ளது. எனவே அது குறித்து இன்று இரவு
பார்க்கலாம்.
**
தோழர் அரங்க குணசேகரன், தோழர் கனகு கனகு
ஆகியோருக்கு நன்றி. காத்திரமான பொருளில்,
காத்திரமான விவாதத்தை எழுப்பி உள்ளனர். நன்றி.


கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கட்சி (CPM),
போல்ஷ்விக் கட்சி (CPI ML PW Bolshvik) ஆகிய மூன்று
கட்சிகளும் அணுஉலைகளை ஆதரிக்கின்றன. பிற
மார்க்சியக் கட்சிகள் எதிர்க்கின்றன. பூர்ஷ்வா
கட்சிகள், அடையாள அரசியல் கட்சிகள் ஆகியவற்றிலும்
ஆதரவு- எதிர்ப்பு என்ற இரட்டை நிலை உள்ளது.
ஆகவே இங்கு கேள்வி, அணுஉலை குறித்த சரியான
மார்க்சிய நிலைப்பாடு என்ன என்பதுதான். ஆழமான
மார்க்சிய அறிவுடைமையுடன் அணுக வேண்டிய
கேள்வியாகி விடுகிறது. பின்னர் காணலாம்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக