திங்கள், 10 அக்டோபர், 2016

அணுஉலையை எதிர்க்கக் கூடாது என்று இக்கட்டுரை
சொல்லவில்லை. அணுஉலையை எதிர்க்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த உரிமைக்கு எந்த பங்கமும் இல்லை. நாம்  இங்கே ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம். அது இதுதான்:
1) அணுஉலையை எதிர்ப்பது மார்க்சியத்தை எதிர்ப்பது
ஆகும். Anti nuclear= anti marxism.
2) ஸ்டாலின், மாவோ பெயர்களை உச்சரிக்க
அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு உரிமை இல்லை;
அருகதையும் இல்லை.
3) மார்க்சிஸ்டுகள் என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு,
இன்னொருபக்கம் பின்நவீனத்துவர்களுடன் சேர்ந்து
கொண்டு, அணுஉலையை எதிர்ப்பது இரட்டை வேடம் ஆகும்.
4) இதைச் சுட்டிக் காட்டுவதோடு நாங்கள் நிறுத்திக்
கொள்கிறோம்.  அவ்வளவுதான்.


தோழரே, அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம்
இல்லை என்று கருதுகிறேன்; மன்னிக்கவும். இந்தக்
கட்டுரையின் நோக்கம் அணுஉலை ஆதரவு அல்ல.
எனவே எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில்
கூறத்  தேவையில்லை. அணுஉலையை எதிர்ப்பது
மார்க்சியத்தை எதிர்ப்பதற்குச் சமம் என்ற ஒரு
உண்மையை மட்டுமே கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அணுஉலை எதிர்ப்பு = கம்யூனிச எதிர்ப்பு. அவ்வளவே.

அணுஉலையை எதிர்ப்பவர்கள் நீடூழி வாழட்டும்!
அவர்கள் தங்களை மார்க்சிஸ்டுகள் என்றோ
மார்க்சிஸ்டு-லெனினிஸ்டுகள் என்றோ கூறிக் கொள்ளும்
அருகதையை இழந்து விடுகிறார்கள் என்ற ஒளிவீசும்
உண்மையைக் கூறுவதோடு நாங்கள் நிறுத்திக்
கொள்கிறோம்.


திரு நடராஜன் அவர்கள் நேர்மையானவர். அவர்
அணுஉலையை எதிர்க்கிறார்; கூடவே மார்க்சியத்தையும்
எதிர்க்கிறார். அது நேர்மை. மார்க்சிஸ்டு என்று கூறிக்
கொண்டு அணுஉலையை எதிர்ப்பது இரட்டை வேடம்
ஆகும். அந்த இரட்டை வேடம் கிழித்தெறியப் படும்.

முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்!
--------------------------------------------------------------------------
நான் அணுஉலையை எதிர்ப்பதானால், முதலில்
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு,
அதன் பிறகே அணுஉலையை எதிர்ப்பேன்.
கம்யூனிசம் ஏற்றுமதி இறக்குமதிச் சரக்கு அல்ல என்ற
தங்களின் கருத்து சரியே. அதேதான் என் கருத்தும்.
அதே நேரத்தில், அணுஉலையை எதிர்ப்பதும்
கம்யூனிசம் அல்ல. அதன் பெயர் பின்நவீனத்துவம்.


அணுஉலை எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவம் பெற்ற
குழந்தையே என்ற எமது வேறொரு கட்டுரையில் பின்நவீனத்துவத்தின் அணுஉலை எதிர்ப்பு விரிவாகக்  கூறப்பட்டுள்ளது.

ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதில் பயனில்லை.
மார்க்சியம் அணுஉலையை உறுதியாக ஆதரிக்கிறது.
பின்நவீனத்துவம் அணுஉலையை உறுதியாக
எதிர்க்கிறது. நீங்கள் எந்தப் பக்கம்? இதுதான் கேள்வி.
நான் மார்க்சியத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறேன்.
சாகும் வரை நிற்பேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக