இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களிடமும் அறிமுகம்
ஆனவர்; செல்வாக்கு உடையவர் அம்பேத்கார். ஜெயமோகன்
என்பவர் தமிழ் எழுத்தாளர். இருவரையும் சமப்படுத்தி
ஒப்பிடுவது நியாயம் அல்ல. இதுபோன்ற சிறுபிள்ளைத்
தனமான கருத்துக்களைத் தவிர்க்கவும். காத்திரமான
விவாதம் மட்டுமே இங்கு வரவேற்கப் படும்.
ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, நான், மருதையன்,
ரவீந்திரன் உள்ளிட்டோர் முதலில் மத்திய அரசின்
தொலைத்தொடர்புத் துறையிலும் பின்னர் BSNLலிலும்
பணியாற்றினோம். தோழர் ரவீந்திரன் தர்மபுரியில்
போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டார்.
தோழர் மருதையன் BSNL உருவாகும் முன்னரே
வேலையை விட்டு விலகி கட்சியின் (SOC) முழுநேர
ஊழியராகி விட்டார். நானும் ஜெயமோகனும் ஒய்வு
பெற்றுள்ளோம். ஆதவன் தீட்சண்யா இன்னும்
பணியாற்றி வருகிறார்.
**
நாங்கள் அனைவரும் இத்துறையில் உள்ள கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கத்தில் பணியாற்றியவர்கள். பொறுப்பு
வகித்தவர்கள். தோழர் ஜெயமோகன் முதலில்
தருமபுரி மாவட்டத்திலும் பின்னர்
நாகர்கோவிலிலும் கம்யூனிஸ்ட் சங்கத்தில் பல்வேறு
பொறுப்புகளை வகித்தவர். இந்தியாவிலேயே அதிகபட்ச
வேலைநிறுத்தங்களை நடத்தியது எங்கள் சங்கம்தான்.
**
எந்த வேலைநிறுத்தத்திலும் முதல் ஆளாகப் பங்கேற்பது
மட்டுமின்றி வேலைநிறுத்தங்களை கட்டமைப்பதிலும்
பெரும்பங்கு வகித்தவர் ஜெயமோகன். ஜெயமோகன்
எழுதிய முதல் நூலை எங்கள் சங்கத் தலைவர் தோழர்
ஜகந்நாதன் அவர்கள்தான் வெளியிட்டார். அவர்
AITUC APEX COUNCIL உறுப்பினர்.
**
எனவே தோழர் ஜெயமோகன் எங்கள் சங்கத்தின்
மதிப்பு மிக்க தோழர்தான். அவரை தோழர் ஜெயமோகன்
என்றுதான் அழைக்க முடியுமே தவிர, ஜனாப் ஜெயமோகன்
என்று அழைக்க இயலாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக