(10) போர்வாளும் பூவிதழும்!
---------------------------------------------------------------------------------
கலைஞரின் ராமானுஜர் பற்றிய பத்தாவது கட்டுரை
--------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------------------
பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள்
தம் குழுவினருடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2010இல், மியூசிக் அகாடமியில்
அதைப் பார்த்து மகிழ்ந்தேன். அற்புதமான நாட்டிய விருந்து.
"போர்வாளும் பூவிதழும்"என்பது அந்நாட்டிய நிகழ்ச்சியின்
பெயர். அதை எழுதியவர் கலைஞர்.
**
மேற்கண்ட பத்தியின் கடைசி வாக்கியத்தை வாசிப்பதற்கு
முன்பு வரை மனதின் சமநிலையை (MENTAL BALANCE)
பராமரித்து வந்த வன்மம் மிகுந்த பார்ப்பனர்களும்
பார்ப்பன அடிவருடிகளும், கடைசி வாக்கியத்தைப்
படித்த பின்னர், சமநிலை இழப்பதை மானசீகக்
காட்சியாகக் காண்கிறேன்.
**
நாட்டிய நிகழ்ச்சிகளைப் புரிந்து சுவைக்க, சிறிது
அக்கலையில் பயிற்சி வேண்டும். இல்லாவிடில்
சில முத்திரைகளின் பொருள் புரியாது. நாட்டியம்
மட்டுமின்றி, நாட்டார் கலைகளையும் புரிந்து சுவைக்க
அவ்வக் கலைகளில் பரிச்சயம் தேவை.
**
போர்வாளும் பூவிதழும் என்ற கவித்துவமான தலைப்பும்,
அதில் பொதிந்துள்ள முரண்தொடையும், நாட்டியத்துக்கான
சாஹித்தியமும் நிறைவாக இருந்தன. முத்தமிழறிஞர்
என்ற அடைமொழி கலைஞருக்கு எவ்வளவு கச்சிதமாகப்
பொருந்துகிறது என்று எண்ணி மகிழ்ந்தேன்.
**
கல்கி இதழுக்கு அளித்த நேர்காணலில், "ராமானுஜரைப்
பற்றி உங்களிடம் பத்து, பதினைந்து புத்தகங்கள்
இருக்கிறதாமே" என்று செய்தியாளர் கேட்கிறார்.
(பார்க்க: கல்கி, ஏப்ரல் 5, 2015, பக்கம்-8). ஆமோதித்த கலைஞர்
தம்மிடம் உள்ள புத்தகங்களைப் பட்டியல் இடுகிறார்.
1) ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, கா.ஸ்ரீ.ஸ்ரீ
2) ராமானுஜ காவியம், கவிஞர் வாலி, வானதி பதிப்பகம்
3) ஸ்ரீராமானுஜர், டி.என்.சுகி சுப்பிரமணியன்
4) மதப் புரட்சி செய்த மகான் ராமானுஜர், சாண்டில்யன்
5) ஸ்ரீராமானுஜர், பி.ஸ்ரீ
6) ராமானுச வைபவம், ஆர்.வீ.ஸ்வாமி
7) ஸ்ரீராமானுஜர் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள், கங்கா ராமமூர்த்தி
8) உய்விக்க வந்த உடையவர், குளித்தலை கிருஷ்ணசாமி
9) ஸ்ரீராமானுஜர் வாழ்வும் தோண்டும், ஜெகாதா
**
இவ்வளவும் இதற்கு மேலும் படித்த பிறகுதான் கலைஞர்
ராமானுஜ காவியம் எழுத முற்படுகிறார். ஆனால், எதையும்
படிக்காமல், எதையும் தெரிந்து கொள்ளாமல், கலைஞரை
வன்மத்தோடு வசை பாடுகிற பார்ப்பன அடிவருடிகளான
சோற்றால் அடித்த சூத்திரப் பிண்டங்களை யாரும் திருப்பி
வசை பாட வேண்டாம். பார்ப்பானாவது (ஐயங்கார்கள்)
எத்திராஜர் பஜனைப் பாடல்கள் என்ற ராமானுஜர் புகழ்
பாடும் பாடல்கள் மூலம் ராமானுஜரைப் பற்றி அறிந்து
இருப்பான். (எத்திராஜர் என்பது ராமானுஜரின் பெயர்.
இப்பெயரைச் சூட்டியவர் ராமானுஜரின் ஆசான்
திருக்கச்சி நம்பி). அடிவருடிச் சூத்திரன் எதைப்
படித்திருக்கப் போகிறான்?
**
HATE THE SIN, BUT NOT THE SINNER என்கிறது பைபிள்.
பாவத்தை வெறு, பாவியை வெறுக்காதே என்பது இதன்
பொருள்.எனவே அறியாமையால் பார்ப்பன அடிவருடித்
தனம் செய்யும் சூத்திரப் பாவிகளை வெறுக்க வேண்டாம்.
அவர்களின் பாவத்தை, அதாவது, அறியாமையைப்
போக்குவோம். போக்குவது எப்படி?
**
முன்பத்தியில் கலைஞர் பட்டியலிட்ட புத்தகங்களை
நாமும் படிப்போம். அடிவருடிகளையும் படிக்க
வைப்போம். மதப் புரட்சி செய்த மகான் ராமானுஜர் என்ற
சாண்டில்யனின் நூல் அற்புதமானது. எனது சிறு வயதில்
அதைப் படித்துள்ளேன். அதைப் பரிந்து உரைக்கின்றேன்.
படித்து விட்டு விமர்சனம் செய்யட்டும் இந்தப்
பார்ப்பன அடிவருடிகள்.
---------------------------------------------------------------------------------------------------
தொடரும்
******************************************************************88