வெண்ணிற ஆடை நிர்மலாவைப் போல
விஜய் மல்லையா மஞ்சக் கடுதாசி கொடுப்பாரா?
மூஞ்சி சுருங்கிப்போன ராமச்சந்திர மேனன்!
-------------------------------------------------------------------------------------------
விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த
நடவடிக்கைகள் பற்றி அறிவோம்!
1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி
மல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக
வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்
பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து
ஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.
2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்
குற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்
பட்டுள்ளார்.
3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
முடக்கப்பட்டு உள்ளன (attached)
4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை
ரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்
மதிப்போ 9000 கோடி.
5) தாவூத் இப்ராஹிமைப் போல, விஜய் மல்லையாவும்
தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.
விஜய் மல்லையா தப்ப முடியுமா?
------------------------------------------------------------------
கடனைத் திரும்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா
தப்ப முடியுமா? முடியும்; அதற்கு அவர் மஞ்சள் கடுதாசி
எனப்படும் திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
In that case he will become an UNDISCHARGED INSOLVENT. That is
nothing but Vijay Malliyaa UNBECOMING of himself.
வெண்ணிற ஆடை நிர்மலா என்ற சினிமா நடிகையை
எம் ஜி ராமச்சந்திர மேனன் தமிழக மேலவையின்
உறுப்பினராக (MLC) அறிவித்தார். அனால் நிர்மலா
மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் என்பதால், அன்றைய
தமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா, நிர்மலாவை
மேலவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று
மறுத்து மேனனின் முகத்தில் கரியைப் பூசினார்.
இதனால் ஏற்கவே சுருக்கம் விழுந்த மேனன் மேலும்
மூஞ்சி சுருங்கிப் போனார்.
சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கருதப்பட்ட
மேனன் போன்ற முதல்வராலேயே, தான் விரும்பிய
நிர்மலாவை எம்.எல்.சி ஆக்க முடியவில்லை.
இது வரலாறு.
நிர்மலாவைப் போல், மல்லையாவும் மஞ்சள் கடுதாசி
கொடுத்தால் மட்டுமே, வங்கிகளில் இருந்து அவர்
வாங்கிய கடனைச் செலுத்தாமல் தப்பிக்க முடியும்.
வேறு வழி எதுவும் அவருக்கு இல்லை.
write off என்றால் என்ன? PCR என்பதற்கும் write offக்கும்
உள்ள தொடர்பு என்ன?
----------------------------------------
ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).
வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)
ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
பூஜ்யம் ஆகும். அதாவது மெய்ந்நிலையில் அது asset அல்ல.
எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.
ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
விடுவார்கள்.
ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.
write off என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
தள்ளுபடியாகக் கருதுவது வங்கியியல் மொழி
(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.
இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
வங்கி விதித்து உள்ளது.
write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.
சுருங்கக் கூறின், write off என்பது ஒரு technical matterதானே
தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
(board) மேற்கொள்ளும் முடிவு.
PCR அதிகரிக்க அதிகரிக்க வங்கியின் லாபம் குறையும்.
நஷ்டம் ஏற்படத் தொடங்கும். இது வங்கி திவாலாகும்
நிலைக்கு இட்டுச் செல்லும். எனவே வங்கிகள்
பிழைத்திருக்க வேண்டுமென்றால் (FOR SURVIVAL)
அவை வாராக் கடன்களை வசூலித்துத்தான் தீர
வேண்டும். இதுதான் வங்கிகள் இயங்கும் முறை
பற்றிய விதி.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளை முட்டாள்களும்
கோமாளிகளும் நடத்தவில்லை. வாராக்கடனை
வசூலிக்கும் வித்தை தெரியாமல் அவர்கள் வங்கி
நடத்தவில்லை, வாராக்கடனை வசூலிக்காமல் விடுவது
என்பது வங்கிகளை பொறுத்த மட்டில் தற்கொலைக்குச் சமம். எனவே விஜய் மல்லையா தப்ப முடியாது.
***********************************************************************