வெள்ளி, 18 நவம்பர், 2016

இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் காலத்திலேயே
இந்தியாவில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்து வந்தது.
அப்போது நான் மத்திய அரசில் வேலை பார்த்து
சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய
சம்பளம் அப்போது ரூ 600 மட்டுமே. நான் ஆயிரம்
ரூபாய் நோட்டைக் கண்ணால் பார்த்ததே இல்லை.
சம்பளத் தேதியன்று ரிசர்வ் வங்கியில் இருந்து
பணம் எடுத்து வந்து, சம்பளப் பட்டுவாடா செய்யும்
எங்கள் அலுவலக கேஷியர், எல்லோருக்கும்
ரூ 2, ரூ 5, ரூ 10, ரூ 20 என்றுதான் சம்பளம் கொடுப்பார்.
இது அன்றைய (1970களில்) நிலை.
**
இன்று, கடந்த வாரத்தில் இருந்து, நாட்டில்
எல்லோரிடமும் ரூ 2000 புதிய நோட்டு இருக்கிறது.
எனவே அதைப்பற்றித் தெரிந்து கொள்வது
மிகவும் அவசியம்.
**
அடுத்து, அரசியல் நிற்கும், முடங்கும், உறங்கும், ஓடும்.
ஆனால் அறிவியலானது தொடர்ந்து எவ்விதத் தடங்கலும்
இல்லாமல் சென்று கொண்டே இருக்கும்; இருக்க
வேண்டும். அறிவியலுக்கு எவ்விதத் தடையும் கிடையாது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக