வியாழன், 17 நவம்பர், 2016

திவால் நோட்டீஸ் அல்லது மஞ்சக் கடுதாசி!
------------------------------------------------------------------------------
ஒருவர் தம்முடைய சொத்து மற்றும் கடன்களை
(assets and liabilities) டிக்ளேர் செய்து, சொத்தை விடக்
கடன்கள் அதிமாகி விட்டதால், கடனைத் திரும்பிச்
செலுத்த இயலாது என்றும் அதனால் தம்மிடம்
இருந்து கடன் வசூல் செய்யும் நடவடிக்கைகளை
கடன் கொடுத்தவர்கள் நிறுத்த வேண்டும் என்று
சட்ட பூர்வமாக, ஆதாரத்துடன் நீதிமன்றத்தில்
மனுச் செய்யலாம். நீதிமன்றம் அதை ஏற்றுக்
கொண்டால் அவர் திவால் ஆனவர் (insolvent) என்று
அறிவிக்கப் படுவார்.
**
ஒருவரின் சொத்து மதிப்பு 1 கோடி என்றும், கடன்
100 கோடி என்றும் ஒருவர் அறிவிப்பார் என்றால்,
அவரை திவால் ஆனவர் என்று நீதிமன்றம் ஏற்றுக்
கொண்டால், அவரின் சொத்தை அத்தனை
கடன்காரர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு,
அவர் மீதான கடன் வசூல் முடித்து வைக்கப்படும்.
**
இவ்வாறு திவால் ஆனவர் தேர்தலில் நிற்க முடியாது.
விஜய் மல்லையா அவ்வாறு செய்தால் மட்டுமே
அவர் மீதான recovery நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
ஆனால் அவர் அவ்வாறு செய்வாரா என்பது பற்றி
யூகிக்க முடியவில்லை.    



திவால் நோட்டீஸ் கொடுப்பவர்களில் பாதிப்பேர்
உண்மையில் திவால் ஆனவர்கள். மீதிப்பேர்
கடன் கொடுத்தவனை ஏமாற்ற திவால் நோட்டீஸ்
கொடுப்பவர்கள். தங்களின் சொத்துக்களை பினாமிகள்
மூலம் பதுக்கி விடுவார்கள். நீதிமன்றத்தில் திறமையாக
வாதாடினால், நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு
சம்பந்தப் பட்டவரை திவால் ஆனவர் என்று
அறிவித்து விடும். பெரும்பாலும் திவால் கோரிக்கைகளை
நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்
இருப்பார்கள். ஏனெனில் திவால் என்பது கேவலம்
என்று விதிவிலக்கின்றி எல்லா நீதியரசர்களும்
கருதுவார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக