சம்பளம் ரொக்கமாகத் தர மறுக்கலாமா?
---------------------------------------------------------------------------
சம்பளப் பட்டுவாடாச் சட்டத்தின் ஷரத்துக்களின் படி,
சம்பளப் பணத்தை ரொக்கமாகவே தர வேண்டும்.
இதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. தினக்கூலி,
வாரக்கூலி, மாதச் சம்பளம் ஆகிய எல்லா விதமான
பட்டுவாடாவும் ரொக்கமாகவே தரப்பட வேண்டும்
என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
நடைமுறை எப்படி இருக்கிறது?
--------------------------------------------------------
நடைமுறையில், அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட
(organised sector) தொழிலகங்கள் அனைத்திலும்,
அரசுத் துறை மற்றும் தனியார் துறை உட்பட,
எல்லா நிறுவனங்களிலும், நிர்வாகம்-சங்கம்
இருதரப்பு உடன்பாடு மூலமாக சம்பளத்தை வங்கிக்
கணக்கில் போடுவது என்ற நடைமுறை பல
ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
டெபிட் கார்டு இல்லாத மாதச் சம்பளக்காரர் எவரும்
கிடையாது என்ற அளவுக்கு salaried class இந்த
நடைமுறையை விரும்பியே ஏற்றுக் கொண்டு விட்டது.
மேலும், சென்னை மாநகராட்சியில், துப்புரவுப்
பணியாளர்களுக்கு கடன் கொடுத்த வட்டிக்காரர்கள்
சம்பளத் தேதியன்று அவர்களிடம் உள்ள எல்லாப்
பணத்தையும் சம்பளம் வாங்கிய சில நிமிடங்களிலேயே
பிடுங்கிக் கொள்வது என்ற கொடிய வழக்கம் இருந்து
வந்தது. எனவே வட்டிக்காரர்கள் சம்பளப் பணத்தை
பிடுங்கிக் கொள்வதைத் தடுக்கும் பொருட்டு,
சம்பளத்தை வங்கிக் கணக்கில் போடுவது என்ற
நடைமுறை அறிமுகம் ஆனது.
இவ்வாறு contingency workers, ஒப்பந்தப்
பணியாளர்கள் தவிர, மீதி அனைவருமே வங்கிக்
கணக்கில் சம்பளம் பெறும் நடைமுறைக்கு வந்து
விட்டார்கள். இதில் இணைக்கப் படாத தொழிலாளர்கள்
unorganised sectorஇல் பணிபுரியும் காசுவல் மற்றும்
ஒப்பந்தத் தொழிலாளர்களே.
தற்போது நிதித்துறைச் செயலரின் உத்தரவு, அரசு
ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற
எல்லாருக்கும், அதாவது ரொக்கப் பட்டுவாடா மூலம்
சம்பளம் பெறும் மீதி அனைவருக்கும், ரொக்கமாகவே
சம்பளம் வழங்கப் படும்.
அரசு ஊழியர்களில், இன்னும் ரொக்கமான சம்பளப்
பட்டுவாடா என்ற நடைமுறையில் இருக்கும் சொற்பமான
பகுதி ஊழியர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு
பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த உத்தரவை
எதிர்த்து, அந்தப் பகுதியின் தொழிற்சங்கம்,
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் சாதகமான
தீர்ப்பைப் பெறலாம். உடனடியாக தடையாணை
பெற இயலும்.
தன்னுடைய கருத்தைச் சொல்வதற்கு பின்னூட்டம்
ஈடுபவர்களைக் கண்டிருக்கிறேன். கோணல் புத்தியை
மன வக்கிரத்தை வெளிப்படுத்த பின்னூட்டம்
இடுவதும், மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வியை
கேட்டுக் கொண்டு இருப்பதும் மனப்பிறழ்வு.
முகநூல் என்பது மனப்பிறழ்வு கொண்டவர்கள்
கூத்தடிக்கும் இடம். எனவே இப்படித்தான் இருக்கும்.
மோதல்களும் பூசல்களும் எழுவது இயற்கை.
ஒரு அதிகாரியாக இருப்பவர் கோபம் கொள்ளக்
கூடாது என்று சொல்ல முடியாது. அவருக்கும் கோபம் வரும்.
ஆனால், பொதுமக்களை அராஜகமாக அணுகுவதும்,
ஆபாச வசவுகளை மேற்கொள்வதும் ஒரு அதிகாரிக்கு
ஏற்புடைய நடத்தை அல்ல. அரசு ஊழியர் நடத்தை
விதிகள் இதை அனுமதிக்கவில்லை.
"Unbecoming of a govt servant" என்ற குற்றமாக நடத்தை
விதிகள் இதைக் கருதுகின்றன.
**
முன்பெல்லாம் செல் போனோ காமிராவோ கிடையாது.
முகநூலும் கிடையாது. இப்போது அப்படியா?
ஒரு வங்கியின் கவுன்டரில் நடந்த சம்பவம்
நாடு முழுவதும் பரவி விடும் அபாயம் இருக்கும்போது,
ஒரு அதிகாரி அப்படி நடந்து கொண்டால் மக்கள்
விடுவார்களா?
வெற்றியின் ரகசியம்!
-----------------------------------------------
ஓட்டுக்கு ரூ 2000 கொடுத்த அதிமுக!
அதன் பிறகு அந்த நோட்டை மாற்ற
ரூ 1000க்கு ரூ 200 கமிஷன் கேட்டனர்!
வாக்காளர்கள் அதிர்ச்சி!
மொத்தம் ரூ 120 கோடி பட்டுவாடா!
( நன்றி: விகடன் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக