திங்கள், 7 நவம்பர், 2016

மாட்டுக்கும் மனிதனுக்கும்
பொதுவான மரபணுக்கள் உள்ளனவா?
(ஓர் எளிய அறிவியல் விளக்கம்)
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
DNA என்பதை தமிழில் மரபணு என்று சொல்கிறோம்.
இது ஒரு தோராயமான தமிழாக்கம்தான். என்றாலும்
இச்சொல் புழக்கத்தில் உள்ளது.

DNA என்னும் மரபணுதான் சந்ததி சந்ததியாக
மரபு வழித் தகவல்களைக் கொண்டு செல்கிறது.
DNA = Deoxyribose Nuclic Acid.

மனித உடலின் DNA இரட்டைச் சுருள் வடிவிலானது.
(double helix DNA). அதாவது ஒரு சுழலேணி போன்ற
வடிவம் கொண்டது. DNA ஒரு மூலக்கூறு ஆகும்.
இதன் மூலக்கூற்று அமைப்பை முதன் முதலில்,
1953இல், கண்டு பிடித்தவர்கள் 1) ஜேம்ஸ் வாட்சன்
2) பிரான்சிஸ் கிரிக் என்ற உயிரியல் விஞ்ஞானிகள்.
இதற்காக நோபல் பரிசு பெற்றனர்.

DNAவில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. DNA
என்பதும் ஜீன்கள் (genes) என்பதும் ஒரே பொருளில்
தமிழில் பரவலாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளன.
DNA என்பது பிரதானமானது. அதன் உட்கூறுதான்
ஜீன்கள், ( Genes are the sub sets of DNA).

DNA மற்றும் ஜீன்கள் குறித்த ஆய்வுகள் 1953 முதல்
நாலுகால் பாய்ச்சலில் நடந்து வருகின்றன. Human
Genomo Project என்ற ஆய்வுத் திட்டம் 1990இல் தொடங்கப்
பட்டு, உலக அளவில், சர்வதேச விஞ்ஞானிகளின்
பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறி, 2003இல்
நிறைவுற்றது.

மனிதர்களாகிய நாம் பாலூட்டி வகையினர். மனிதன்,
மாடு, எருமை, நாய், பன்றி, யானை, மனிதக் குரங்கு,
கழுதை, குதிரை ஆகிய பலவும் பாலூட்டிகளே.

பாலூட்டிகள் அனைத்திற்கும் ஒரு பொதுவான மூதாதை
(common ancestor) உண்டு. மனிதனுக்கும் குரங்குக்கும்
ஒரு பொதுவான மூதாதை உண்டு. இங்கிலாந்தில்
ஹெர்ஃபோர்டுஷயர் என்ற இடத்தில் நிறையக்
கால்நடைகள் உள்ளன. அங்குள்ள "ஹெர்ஃபோர்டு
எருமைகள்" என்ற இனத்தின் பெண் எருமைகளின்
ஜீன்கள் ஆராயப்பட்டன. அவற்றின் ஜீனோம்கள்
வரிசைப் படுத்தப் பட்டன. 25 நாடுகளைச் சேர்ந்த
300 விஞ்ஞானிகள் ஆறு ஆண்டு கால உழைப்பில்
இந்தப் பணியை நிறைவு செய்தனர். இத்திட்டம்
Bovine Genome Project என்று பெயர்.

ஆராயப்பட்ட 22,000 ஜீன்களில் 14,000 ஜீன்கள் எல்லா
வகைப் பாலூட்டிகளுக்கும் பொதுவானவை. அதாவது
மாடு, பன்றி, கழுதை, குரங்கு, மனிதன் ஆகிய எல்லா
வகைப் பாலூட்டிகளுக்கும் பொதுவானவை. மேலும்,  
இந்த 22,000 ஜீன்களில், 80 சதம் ஜீன்கள், அதாவது,
சுமார் 18,000 ஜீன்கள் மனித ஜீன்களுடன் பொருந்திப்
போகின்றன. அதாவது மனிதனுக்கும் மாட்டுக்கும்
80 சதம் ஜீன்கள் பொதுவானவை.
---------------------------------------------------------------------------------------------------
2015 வேதியியல் நோபல் பரிசு "DNA பழுதுபார்ப்பு"
(DNA Repair) துறையில் சாதனை புரிந்த
விஞ்ஞானிகளுக்கு வழங்கப் பட்டது. அதையொட்டி
வேதியியல் நோபல் பரிசு 2015 என்ற பொருளில்
நியூட்டன் அறிவியல் மன்றம் ஆற்றிய உரையில் இருந்து.
**********************************************************************               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக