புதன், 9 நவம்பர், 2016

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா?
வருமான அறிவிப்புத் திட்டம் பயன் தரவில்லை!
எனவே ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று
அறிவிக்கும் கட்டாயம் இயல்பாக ஏற்பட்டது!
-----------------------------------------------------------------------------------------
1) நடப்பாண்டில் (2016) இந்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஜூன் 1இல் தொடங்கிய அத்திட்டம் செப்டம்பர் 30இல்
முடிந்தது. அத்திட்டத்தின் பெயர் "வருமான அறிவிப்புத்
திட்டம் 2016" (Income Declaration Scheme 2016) எனப்பட்டது.

2) தமது வருமானத்தை அறிக்கையிடும் கொழுத்த
பணமுதலைகள் 45 சதம் (30+7.5+7.5=45) வரி செலுத்தி
நடவடிக்கையில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்பதே
அத்திட்டம்.

3) அநேகமாக இந்தியாவின் எல்லா நிதியமைச்சர்களும்
தங்கள் பதவிக்கு காலத்தில் இது போன்ற திட்டத்தை
அறிவித்தவர்கள்தாம். இத்திட்டங்கள் VDS எனப் பெயர்
பெற்றன. (Voluntary Disclosure Scheme). இவை எப்போதுமே
தோல்வி அடையும் திட்டங்கள் என்று பொருளாதாரம்
அறிந்த அனைவருக்குமே தெரியும். எனினும், இவை
அவசியமான ஒரு சம்பிரதாய நடவடிக்கைகள்.

4) தற்போது ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற
அறிவிப்பு வந்திருக்கிறது. இது VDS திட்டம் போன்று,
மயிலே மயிலே இறகு போடு என்று கெஞ்சுகிற
திட்டம் அல்ல. எப்படி எப்படியெல்லாமோ நழுவி
ஓடினாலும், மயில்கள் தங்களின் இறகுகளை
கணிசமாக இழக்காமல் தப்ப முடியாது.

5) இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் யார்?
-------------------------------------------------------------------
அ) கள்ள நோட்டுகள் வைத்திருப்பவன்
ஆ) கமிஷன் பெற்றுக் கொண்டு கள்ள நோட்டுகளைப்
புழக்கத்தில் விடும் ஏஜெண்டுகளும் அவர்களின்
எடுபிடிகளும்.

இ) பினாமிகளிடம் பணம் கொடுத்து வைத்திருப்பவன்
ஈ) கந்து வட்டிக்காரன்

உ) ரியல் எஸ்டேட் முதலை
ஊ) சுயநிதிக் கல்லூரி முதலை
எ) சேர்ந்து விட்ட கறுப்புப் பணத்தை, உடனே
முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாததால், கரன்சி
நோட்டுக்களாக அடுக்கி வைத்திருப்பவன்.

ஏ) சுருங்கக் கூறின், ஆவணப் படுத்தலுக்கு அஞ்சி,
தங்களின் பணப் பரிவர்த்தனைகளை ரொக்கமாகவே
வைத்துக் கொள்கிறவர்கள், உதாரணம்: பயங்கரவாதிகள்,  இத்தியாதி,,,, இத்தியாதி.

6) குப்பனுக்கும் சுப்பனுக்கும் துலுக்காணத்துக்கும்
ஆரம்பத்தில் சில அசௌகரியங்கள் ஏற்படும்;
ஆனால் இழப்பு எதுவும் கிடையாது.
***************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக