வெள்ளி, 4 நவம்பர், 2016

பெரியார் திடல் கூட்டம்!
அறிவியல் கூட்டமா? மந்திர நிகழ்ச்சியா?
வேதியியல் நோபல் பரிசு 2016
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) கூட்டம் குறித்த நேரத்தில் (மாலை 6.45)ஆரம்பித்து,
குறித்த நேரத்தில் (இரவு 08.30) முடிந்தது.

2) வந்திருந்தோர் எண்ணிக்கை சுமார்தான்.

3) பவர் பாயின்ட் presentation,  செய்முறை விளக்கம்,
விளக்கவுரை ஆகிய மூன்று முறைகள் வாயிலாக
பேசுபொருளை நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கியது.

4) டோப்பாலஜி என்னும் கணிதப்  பிரிவு (topology)
மிக விரிவாகவும் ஆழமாகவும் விளக்கப் பட்டது.

5) Mobius Stripஐ உருவாக்கி, அதை நடுமையத்தில்
வெட்டிக் காட்டும்போது, இரண்டு அல்லது மூன்று
வளையங்கள் வெளிப்படும் என்று அவையோர்
கருதி இருந்தனர். மாறாக, ஒரே ஒரு வளையம்
வெளிப்பட்டபோது, அவையோர் அதிர்ச்சியிலும்
மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தனர்.

6) இந்தக் கணித விளக்கமானது ஒரு மந்திர நிகழ்வு
போல இருந்தது என்று அவையோர் தெரிவித்தனர்.

7) நமது முகநூல் அழைப்பை ஏற்று, இக்கூட்டத்தில்
பங்கேற்ற தோழர்களுக்கு மிக்க நன்றி.
******************************************************************* 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக